Published:Updated:

நாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

நாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

நாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

நாணயம் லைப்ரரி : எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

Published:Updated:

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தப் போவது, எதிலும் சிறந்து விளங்குவது எப்படி எனும் டோனி ஷீவார்ட்ஸ், ஜீன் கோம்ஸ் மற்றும் கேத்ரின் மெக்கார்த்தி என்ற மூன்று பேரும் சேர்ந்து எழுதிய புத்தகத்தைத்தான்.

காலையில்  எழுந்தவுடன் களைப்போடு, எதையோ இழந்ததைப் போல், பொறுமையில்லாமல், எரிச்சலுடன், ஏக்கத்துடன், எந்த ஒரு விஷயத்தையும் மனதொருமித்து செய்ய முடியாமல் இருக்கிற நபரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் புத்தகம் கட்டாயம் தேவையான ஒன்று என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

வெற்றிபெற முதலில் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய விஷயம் என்ன தெரியுமா என்று கேட்கும் ஆசிரியர்கள், நம்முடைய திறமையில் கவனம் வைப்பதோ, நம்முடய பலவீனத்தில் கவனம் வைத்து சரிசெய்துகொள்வதோ கிடையாது. உங்களுக்கு எந்த விஷயம் நன்றாக வருகிறதோ, அதில் கவனம் செலுத்தி அந்தத் திறமையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று ஒரேயடியாக நினைப்பதும் தவறு. அதேபோல் நம்முடைய பலவீனம் மற்றும் நம்மிடம் இருக்கும் குறைகளைக் களைந்தால் முன்னேறிவிடுவோம் என்று நினைப்பதும் தவறு. இரண்டிலுமே சமமான அளவு முயற்சியை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் லைப்ரரி :  எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

‘‘திறமையை வளர்ப்பதும், குறைகளை களைவதும் சமமான அளவில் செய்யப் பட்டால் மட்டுமே வெற்றிப்படிகளில் ஏறமுடியும். இதற்கு மாறாக, திறமையை மட்டுமே கண்டறிந்து வளர்க்க முயல் வதோ, குறைகளை மட்டுமே கண்டறிந்து களைய முயல்வதோ நம்மை ஒரு குருடராக்கிவிடும். திறமையை மட்டுமே நாம் பார்த்தால், நம் குறை நம் கண்ணில் தெரியாது. நம் கண்ணில் படாத குறையை எப்படி நம்மால் சரிசெய்ய முடியும்’’ என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள்.

நாம் அனைவருமே பழக்கத்துக்கு அடிமைகள் என்று சொல்லும் ஆசிரியர்கள், இதற்கு உதாரணமாக பல விஷயங்களைச் சொல்கின்றனர். டயட்டில் இருந்து எடை குறைப்பவர் களில் 99%  பேர் மீண்டும் எடையைக் கூட்டிவிடுகிறார்கள். மாரடைப்பு வந்த பிறகும்கூட ஏழில் ஒருவர்தான் தனது உணவுப் பழக்கத்தைத் திட்டமிட்டு மாற்றிக்கொள்கிறார். நூற்றில் 25 பேர் தங்களுடைய புத்தாண்டு சபதத்தை ஒரே வாரத்தில் முடிவெடுத்துவிடு கிறார்கள். நிறுவனங்களின் செயல் பாட்டை மாற்ற நினைத்து எடுக்கப்படும் முயற்சிகளில் 75% தோல்வியடைகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன என்று சொல்லும் ஆசிரியர்கள், இவை யெல்லாம் எதனைக் காண்பிக்கிறது என்று கேட்கின்றனர். நாம் நமக்குப் பழக்கமான நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் மாறமாட்டோம் என்பதைத்தானே என்கின்றனர்.

நாணயம் லைப்ரரி :  எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

மனிதனின் உடல் நிலை அவனுக்கு ஓய்வு என்பது தேவையான அளவு கிடைக்கும்போது மட்டுமே போதுமான ஒத்துழைப்பைக் கொடுத்து முழு அளவிலான வெற்றியைப் பெற வைக்கிறது. இரவில் நாம் அயர்ந்து தூங்குவது மட்டுமே போதாது. பகலில் ஒவ்வொரு 90 நிமிடத்துக்கு பின்னாலும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. நம் கவனம் ஒவ்வொரு 90 நிமிடத்துக்குப் பின்னாலும் கணிசமாகக் குறைகிறது என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

முக்கியமான செயல்களை சிறிது இடைவெளி தந்துவிட்டு ஆரம்பித்தீர்கள் எனில், வெற்றி உறுதி என்று சொல்லும் ஆசிரியர்கள், மதியம் ஒரு மணியிலிருந்து நான்கு மணிக்குள் ஒரு இருபது நிமிட தூக்கம் போட்டுப்பாருங்கள். அதற்குபின் உங்கள் செயல்பாடு எவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது என்று சவால்விடுகின்றனர்.

அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, நாம் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பற்றி. திடீரென ஒருநாள் நமக்கு வேலை போகிறது. கம்பெனி சரியாகப் போகவில்லை; அதனால் உங்களை வேலையைவிட்டு அனுப்பியே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம் என்கிறது நம்முடைய கம்பெனியின் நிர்வாகம். நாம் எப்படி அதை எதிர்கொள்வோம்.

அய்யோ, குடி முழுகிப்போயிற்றே என்று வீட்டில் சுருண்டு படுத்துவிடுவோமா? அல்லது இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று என்ற பாணியிலா? அல்லது நானே இனி முதலாளி என ஒரு தொழில் துவங்கப்போகிறேன் என்று கிளம்புவோமா? அய்யோ, வாடகை கொடுக்கணுமே! பால்காரருக்கு காசு தரணுமே என்று நம்மை நோக்கியிருக்கும் அத்தனை பணத் தேவையையும் நினைத்து பயப்படுவதன் மூலம் ஆகப்போவது ஒன்றுமில்லை. இன்னமும் அது நம்மை செயலிழக்கவே வைக்கும்.

நாணயம் லைப்ரரி :  எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

அதற்குப் பதிலாக தற்காலிகமாக ஒரு வேலையோ அல்லது சிறு தொழிலையோ துவங்கினால், அந்த வருமானத்தை வைத்து நம்முடைய நிலைமையை சரி செய்துகொள்வதுடன், நிலைமை கொஞ்சம் சரியில்லாதபோது வாழவும் கற்றுகொள்வோமில்லையா என்கின்றனர் ஆசிரியர்கள். எனவே நல்லதோ, கெட்டதோ நடக்கும்போது நம்பிக்கையுடன் எதிர்கொள்பவர்களே வெற்றி பெரும் நபர்களாவார்கள். சுருண்டு படுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக, வெற்றிக்கு வித்திடும் ஒன்றாக ஆசிரியர்கள் சொல்வது ஒருநேரத்தில் ஒரு விஷயத்தை செய்யும் பழக்கத்தை. நம்முடைய வேலைக்கு இரண்டு முக்கிய எதிரிகள் என்று சொல்கிறார்கள் ஆசிரியர்கள். அதில் ஒன்று டெக்னாலஜி மற்றும் இ-மெயில், எஸ்எம்எஸ் போன்றவை. இவற்றில் நேரம் செலவிடும்போது அதற்கு ஒரு விலை இருக்கிறது. தற்போது எவ்வளவு நேரம் இவற்றில் செலவிடுகிறீர்கள், அதனால் ஏற்படும் விரயம் எவ்வளவு என்பதைக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியர்கள், இந்தச் செலவைக் குறைப்பது எப்படி என்று திட்டம் போட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கின்றனர்.

இரண்டாவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுவது, நம்முடைய மனதினுள் ஓடுகிற எண்ண மாறுதல்கள் என்கின்றனர். மனதினுள் ஓட்டத்தைக் குறைக்க அதனை அமைதியாக்க வேண்டும். அதனை அமைதியாக்க தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவை அவசியமாகச் செய்ய வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி :  எதிலும் சிறந்து விளங்குவது எப்படி?

இறுதியாக ஆசிரியர்கள் சொல்வது, நான் யார், எனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுதல் என்கிறார்கள். ஏனென்றால், பெரும் பாலும் நாம் வேலை பார்க்கும் நிறுவனங்கள் பலவும் வியாபாரரீதியாகச் செயல்படும் குணத்தினைக் கொண் டவை. நிறுவனங்கள் சொல்வதற்கும் நாம் செய்வதற்கும் சம்பந்தமே இருக் காது. இந்த மாதிரியான சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையின்மை பணியாளர்களிடமும் பரவி அவர்களும் வாங்குகிற சம்ப ளத்துக்கு வேலை பார்ப்பதைப்போலவே நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.

வேலை செய்யும் நிறுவனமும் நாம் வாழும் சமுதாயத்தில் ஒரு பங்கு வகிக்கிறது. அந்த நிறுவனம் நல்லதொரு காரியத்துக்காகவும் சொல்வதைச் செய்யும் நிறுவனமாகவும் இருக்கும் பட்சத்திலேயே பணியாளர்களும் அதே நிலைப்பாட்டை எடுப்பார்கள். இல்லாவிட்டால் பாசாங்கு வேலைதான் காட்ட ஆரம்பிப்பார்கள். நான் என்பதிலிருந்து நாம் என்பதை நினைக்க வேண்டுமென்றால் நிறுவனங்களின் சொல்லும் செயலும் ஒன்றைப்போல் இருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

தோல்வியைத் தவிர்க்க நினைக்கும் அனைவருமே இந்தப் புத்தகத்தை ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்)
படங்கள்: தி.குமரகுருபரன்