நடப்பு
Published:Updated:

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

  புத்தகத்தின் பெயர்: ஃப்ளாஷ் ஃபோர்சைட் (Flash Foresight)
  ஆசிரியர்கள்: டேனியல் பரஸ், ஜான் டேவிட் மேன்
  பதிப்பாளர்: William Morrow & Co

கண்ணுக்குப் புலப்படுவதை வைத்து மட்டும் நீங்கள் உங்கள் தொழிலில் ஜெயிக்க முடியாது. கண்ணுக்குப் புலப்படாததை ஞானக்கண்ணால் பார்த்து அதை செய்யும்போதுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை  நச்சென எடுத்துச் சொல்கிற புத்தகம்தான் டேனியல் பரஸும்,  ஜான் டேவிட் மேனும் சேர்ந்து எழுதிய ‘ப்ளாஷ் ஃபோர்சைட்’.

‘ப்ளாஷ்’ என்றால் திடீரென வரும் பளிச் வெளிச்சம். ‘ஃபோர்சைட்’ என்றால், ஏற்்கெனவே நாம் செய்வதை எதிர்காலத்தில் புத்தம் புதிய முறையில் செய்வதற்கு உண்டான வழி குறித்து திடீரெனத் தோன்றும் நுண்ணறிவு.

இந்த ‘ஃப்ளாஷ் ஃபோர்சைட்’ ஒருவருக்கு வரவேண்டும் எனில், அவர் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்றில்லை. நம் எல்லோரி டத்திலும் இந்த ‘ஃப்ளாஷ் ஃபோர்சைட்'டை பெறுவதற்கான தகுதி இருக்கவே செய்கிறது. ‘எனக்கு முன்னாடியே தெரிஞ்சது. நான் அதை அப்பவே பண்ணியிருக்கணும்’ என்று எத்தனை முறை நாம் சாதாரண மாகச் சொல்கிறோம் என்று கேட்கிறார் கள் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள். இப்படி குத்துமதிப்பாக தெரிந்து கொள்வதிலிருந்து திட்டவட்டமாக கணிக்கும் நிலைமைக்கு மாறிக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார்கள். 

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

‘‘சும்மா வழியை மட்டும் சொல்லி விட்டுப் போவதல்ல எங்கள் நோக்கம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிகளை உபயோகித்ததன் மூலம் பலரும் பலனடைந்துள்ளனர்'' என்ற உத்தரவாதத்தையும் தருகின்றனர் புத்தகத்தின்  ஆசிரியர்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை பார்த்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்கள் வேலை நேரத்துக்கு நடுவே மூன்று மணிநேரம் இந்த வழிகளை பயன்படுத்தியதினால் மட்டுமே பரபரப்பில்லாமல் சாவகாச மாக இருக்க முடிந்தது என்றும் நிதி நிலைமையில் மிகவும் கஷ்டத்தில் இருந்த ஒரு கிராமத்துப்பள்ளி தனக்குத் தேவையான நிதியை ஒரு பைசா செல வில்லாமல் திரட்டிக்கொள்ள முடிந்த தும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை கடைப் பிடித்ததால்தான் என்று சொல்லும் ஆசிரியர்கள், மேலும் பல உதாரணங்களைச் சொல்கிறார்கள்.

இந்த உதாரணங்களில் ஆசிரியர் முக்கியமாக குறிப்பிடுவது, டேல் மோர்கென் எனும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகளை. பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட், எல்சிடி மற்றும் ப்ளாஸ்மா டிவிகளுக்கான டெக்னாலஜி போன்றவற்றை கண்டுபிடித்த இந்த விஞ்ஞானியின் அடுத்த கண்டுபிடிப்பு உலகத்தின் மிக வேகமாக அதிகரித்துவரும் மின்தேவையை பூர்த்தி செய்வது. ஒரு பாத் டப்பில் கொள்ளும் நீரின் அளவில் இருந்து 40 கூட்ஸ் ரயில் நிலக்கரி லோடுகளை பயன்படுத்தி  பெறப்படும் மின் உற்பத்தியைப் பெறலாம் என்று யோசித்தார் டேல். எப்படி இது சாத்தியம்? வெறும் கற்பனை என்று பலரும் எளிதில் புறந்தள்ளிவிடுகிற சிந்தனைதான் இது. ஆனால், டேலிடம் ‘ஃப்ளாஷ் ஃபோர்சைட்' இருந்ததால் மட்டுமே ஹைட்ரஜன் ப்யூஷன் என்ற டெக்னாலஜியை டேல் கண்டுபிடித்தார் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

இந்த மாதிரி மாற்றி யோசிக்கும் சிந்தனையை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம். முதலில் கண்ணுக்கு முன்னால் நடக்கும் விஷயங்களில் இருந்து ஆரம்பியுங்கள். இரண்டாவதாக, உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மூன்றாவ தாக, உங்கள் நினைப்பை டெக்னாலஜி முன்னேற்றத்துடன் இணைத்து மாற்றி அமையுங்கள். நான்காவதாக, இந்த மாற்றி அமைக்கும் முயற்சியில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய பெரும் பிரச்னை எது என்று நினைக்கிறீர்களோ, அதை முழுமையாக மறந்துவிட்டு செய லாற்றுங்கள்.

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

ஐந்தாவதாக, யாரும் அந்தத் துறையில் எதிர்பார்க்காத, எதிர் நோக்காத திசையில் பயணிக்க ஆரம்பியுங்கள். அதாவது, அந்தத் துறையில் அடுத்தவர் கள் செய்யாத ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள். ஆறாவதாக, நீங்கள் செய்ய முயலும் விஷயத்தை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து புதுமையைப் புகுத்த முயலுங்கள். ஏழாவதாக, எதிர்காலத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் யாராவது ஒருவர் அதை உங்களிடத்தில் இருந்து எடுத்துச் சென்றுவிடுவார் என்று குறிப்பிடு கின்றனர் ஆசிரியர்கள்.

இதெல்லாம் சொல்வதற்கு  நன்றாக இருக்கும். நடைமுறையில் செயலாக்கு வது கடினம் என்கிறீர்களா? நாம் சொல்கிற யோசனையை நாமே செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஆசிரியருக்கு வந்ததாம். 2009-ல் அமெரிக்க பொருளாதாரம் மந்தமாக இருந்தபோது பலரும் வேலையை இழந்த காலம். யாரும் செய்யாததை செய் என்கி றோமே, எல்லோரும் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பும்போது நாம் வேலைக்கு ஆள் சேர்ப்போமே என்று நினைத்தாராம் ஆசிரியர்.

என்ன கான்செப்ட்டில் வேலை செய் வது என்று யோசித்தபோது, ‘‘ஜயன்ட் சைஸ் மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டரில் ஆரம்பித்து, டெஸ்க் டாப், லேப் டாப் என கம்ப்யூட்டரின் சைஸ் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தது என்ன வாக இருக்கும் என்று யோசித்தேன். சைஸ் குறையும்; கையிலும் பையிலும் வைத்துச்செல்லும் வண்ணம் மாறும் என்று தோன்றியது. இது சாத்தியமா என்று நினைத்தேன். ப்ராசஸிங் பவர் அதிகரித்துக்கொண்டே செல்லும் வேகம், ஸ்டோரேஜ் அதிகரிக்கும் வேகம், இ்ன்டர்நெட் பேண்ட்விட்த் அதிகரிக்கும் வேகம் மூன்றையும் பார்த்தால் இது சாத்தியம்’’ என்றே தோன்றியதாம் ஆசிரியருக்கு. உடனடி யாக கம்பெனியை ஆரம்பித்தாராம். ‘விஷனரி ஆப்ஸ் எல்எல்சி' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆப்ஸ் டெவலப் செய்தாராம் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : ஞானக்கண் கொண்டு பாருங்கள்!

இந்த நிறுவனத்தில் ஆசிரியர்கள் சொல்லும் ஏழு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்துப் பார்த்துள்ளனர்.  இந்த வழிமுறைகளை கடைப்பிடித்ததனாலேயே வெற்றிகரமாக இன்றைக்கு பல ஆப்ஸ்களை தயாரித்து வருகிற விஷனரி ஆப்ஸ் தனது தயாரிப்புகளை வெற்றிகரமாக விற்பனை செய்தும் வருகிறது என்று சொல்லும் ஆசிரியர்கள், இது எங்களால் மட்டுமில்லை, உங்களாலும் முடியும் என்கின்றனர். 

புதிய முயற்சிகளை எடுக்க நினைப்ப வர்களும், தொழிலில் தேக்க நிலை என்று சொல்பவர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்)