Published:Updated:

ரூ.1,000 கோடி மதிப்பில் தயாராகும் மஹிந்திரா குழுமத்தின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை!

மஹிந்திரா வாகன துறை இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர்
News
மஹிந்திரா வாகன துறை இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர்

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கெனவே எலெக்ட்ரிக் கார் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது மஹிந்திரா குழுமமும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ளது.

உலகில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு காரணமாகவும், அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாகவும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் வகை வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

புனேவில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் ஆலை!
புனேவில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் ஆலை!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கெனவே எலெக்ட்ரிக் கார் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது மஹிந்திரா குழுமமும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக் களத்தில் இறங்கியுள்ளது.

மஹிந்திரா குழுமம் தற்போது புனேவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க மகாராஷ்டிரா அரசு தங்களது வாகன தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அனுமதி அளித்துள்ளது. இந்த ரூ.1,000 கோடி முதலீட்டை மஹிந்திரா குழுமம் இன்னும் 7 - 8 ஆண்டுகளில் தங்களது துணை நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்!
மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி இங்கிலாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களை, மஹிந்திரா நிறுவனம் தற்போது உருவாகவுள்ள புதிய ஆலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மஹிந்திராவின் வாகன துறை இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர், ``புனேவில் எலெக்ட்ரிக் கார் ஆலையை அமைப்பதற்கு மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், கடந்த 70 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மஹிந்திராவின் சொந்த மாநிலமாக இருப்பதாகவும், அரசின் தொடர் ஆதரவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மையமாக மாற்றப்போவதாகவும் கூறியுள்ளார்.