Published:Updated:

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை மையமாகத் திகழும் தமிழகம்!

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி...
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி...

நிகழ்வு

இந்தியாவிலேயே தமிழகம்தான் மெடிக்கல் டூரிஸத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்பதைக் கடந்த வாரம் சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த ‘தமிழ்நாடு டிராவல் மார்ட்’ கண்காட்சித் தெளிவாக எடுத்துச்சொன்னது. இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) மற்றும் மத்திய சுற்றுலாத்துறையின் ஆதரவில் இயங்கும் தமிழ்நாடு டிராவல் மார்ட் சங்கம் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை 
மையமாகத் திகழும் தமிழகம்!

கண்காட்சியில் சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தக வாய்ப்புகளுக்கான 100 அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. அரங்கின் ஒருபுறம் மருத்துவச் சுற்றுலாவுக்காகத் தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள், மருத்துவமனைகளில் வழங்கப்படும் அதிநவீன சிகிச்சைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில், இருபதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் அரங்குகள் அமைந்திருந்தன. மறுபுறம் தமிழகத்தின் சுற்றுலாப் பகுதிகளை சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளாகப் பிரித்து அரங்குகள் போடப்பட்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேர நாட்டில் கோவைப் பகுதியைச் சேர்ந்த ஸ்டார் ஹோட்டல்கள், சோழ நாட்டில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஸ்டார் ஹோட்டல்கள், பாண்டிய நாட்டில் மதுரை மண்ணின் மணம் பரப்பும் ஹோட்டல்கள், பல்லவ நாட்டில் காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை 
மையமாகத் திகழும் தமிழகம்!

இந்த அரங்குகளைப் பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள், தொழில்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு அரங்கிலும் தமிழகத்தின் பாரம்பர்ய முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் சிறப்பு நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் அரங்குகளில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாகப் பொரி உருண்டை, தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய் எனத் தமிழர்களின் பாரம்பர்ய இனிப்பு வகைகள் கண்காட்சியைப் பார்வையிட்ட வெளி மாநிலத்தவர்களையும் வெளிநாட்டவர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. இந்த நான்கு மண்டலங் களையும் பார்வையிடும் வகையில் சுற்றுலா பேக்கேஜுகளும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை 
மையமாகத் திகழும் தமிழகம்!

கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய சி.ஐ.ஐ-யின் தமிழ்நாடு மெடிக்கல் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார், “மருத்துவச் சுற்றுலாவுக்காக மிகவும் விரும்பப்படும் மாநிலங்களில் தமிழகம் கடந்த பத்தாண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர் களில் 45% பேர் தமிழகத்தில்தான் சிகிச்சை பெற விரும்புகின்றனர். இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளில் 40%-50% பேரைத் தமிழகம் ஈர்த்துக்கொள்கிறது” என்று தெரிவித்தார்.

கண்காட்சி நடைபெற்ற மூன்று நாள்களும் தமிழகத்தை மருத்துவச் சுற்றுலாவாக மாற்றுவது தொடர்பாக, துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘மருத்துவச் சுற்றுலாவுக்கான விருப்பமான இடமாகத் தமிழகத்தை மாற்றுவது எப்படி?’ என்பது குறித்த கலந்துரையாடல் சி.ஐ.ஐ-யின் தமிழ்நாடு மெடிக்கல் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரகுபதி வேலுசாமி தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தர மற்றும் நோயாளிகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் சுதாகர் சிங், “இந்தியாவின் பாரம்பர்ய சின்னங்கள் தான் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

சுற்றுலாத்துறையின் துணைத் துறையாக மருத்துவச் சுற்றுலாவும் உருவெடுத்து உள்ளது. அலோபதி சிகிச்சைக்காக மட்டுமன்றி, ஆயுர்வேதம் போன்ற பாரம்பர்யச் சிகிச்சைகளுக் காகவும் இந்தியாவை வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் நாடுகின்றனர். இந்தியா வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில் இருந்தாலும், மருத்துவத்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளில் பணியாற்றும் மருத்துவர் களில் 30% - 40% பேர் இந்தியர்கள்தான். இந்திய மருத்துவர்களின் திறமை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஈர்த்துள்ளது. அதே நம்பகத் தன்மையை நம் நாட்டில் பணியாற்றும் மருத்துவர் களிடமும் அவர்கள் வைத்திருக்கின்றனர்” என்றார்.

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை 
மையமாகத் திகழும் தமிழகம்!

வெளிநாட்டு நோயாளிகளைக் கையாள்வதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசிய இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் முன்னாள் தலைவர் மருத்துவர் டி.என்.ரவிசங்கர், “வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்குச் சிகிச்சைக் காக வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவத் துறையில் சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவறாமல் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று உள்கட்டமைப்பு வசதிகள், நவீன சிகிச்சை முறைகள், நோயாளி மற்றும் அவருடன் வரும் குடும்பத்தார் அனைவருக்கும் ஏற்றச் சூழல் என அனைத்து வசதிகளும் இருந்தால்தான், அடுத்த முறை அதே மருத்துவமனைக்கு வருவதற்கு அவர்கள் ஆர்வம்காட்டுவார்கள். தங்கள் நாடுகளுக்குத் திரும்பிய பிறகு, அங்கிருப்பவர்களுக்கும் தமிழக மருத்துவமனைகளைப் பரிந்துரைப்பார்கள். மருத்துவச் சுற்றுலாவுக்காக இந்தியா வர விரும்புவோருக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் மிகவும் உறுதுணையாக உள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் அளித்துவருகிறது” என்றார்.

“இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான மையமாக விளங்குகிறது தமிழகம். சென்னை அதில் முதலிடம் வகிக்கிறது. வெளிநாட்டவர் களுக்குச் செய்யப்படும் இதய அறுவைசிகிச்சை களின் வெற்றி 96% இருப்பதால், இதயம் தொடர்பான சிகிச்சைகளுக்காக அதிகம் பேர் தமிழகத்துக்கு வருகின்றனர். தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா மாநிலத்துக்கும் சிகிச்சைக்காக வெளிநாட்டினர் செல்கின்றனர்’’ என்றார் ‘கேமோமைல்’ மருத்துவ சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.ராகவா ராவ்.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குச் சிகிச்சைக்காக வரும் பயணிகளில் குறிப்பிட்டோருக்கு மட்டுமே, ஆங்கில வழித் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனால் வேறுநாடாக இருந்தாலும் சரி, வேறு மாநிலமாக இருந்தாலும் சரி, சிகிச்சையின்போது அவர்களின் மொழியை அறிந்த மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு தேவையாக இருக்கிறது. அப்போதுதான் நோயாளி களால் தங்கள் பிரச்னைகளைத் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும். தகவல் தொடர்பின் அசௌகர்யத்தை உணர்ந்தால் அவர்கள் தொடர்ந்து இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்.

தமிழ்நாடு டிராவல் மார்ட் கண்காட்சி... மருத்துவ சிகிச்சை 
மையமாகத் திகழும் தமிழகம்!

மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் அணுகுமுறையும் அவர்களைக் கவர வேண்டும். அதற்கான பயிற்சி களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயத்திலும் தனியார் மருத்துவ மனைகள் கவனம் செலுத்தினால், தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் மேலும் வளம்பெறும் என்பது கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது.

படங்கள் :