Published:Updated:

பால், கார்ட்டூன், பல்லாயிரம் கோடி வருமானம்... எப்படி சாதித்தது இந்த பிசினஸ் நிறுவனம்...!

அமுல் நிறுவனம்
News
அமுல் நிறுவனம்

மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் செயல்பட்டு வருகிறது அமுல். ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட போது இது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்றே பேசப்பட்டது...

பால், கார்ட்டூன், பல்லாயிரம் கோடி வருமானம்... எப்படி சாதித்தது இந்த பிசினஸ் நிறுவனம்...!

மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் செயல்பட்டு வருகிறது அமுல். ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட போது இது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்றே பேசப்பட்டது...

Published:Updated:
அமுல் நிறுவனம்
News
அமுல் நிறுவனம்

The Taste of india இந்த வார்த்தையை கேட்டவுடன் அது எந்த பிராண்ட் என்பதை கண்டு பிடித்திருப்பீர்கள். யெஸ். இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது அமுல் குறித்துதான். ஒவ்வொரு நிறுவனமும் எதாவது ஒரு வகையில் முன்னுதரமாக இருக்கும். ஆனால் அமுல் பல  விஷயங்களுக்காக முன் உதாரணத்தை குறிப்பிட முடியும்.

அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம்

கிராமபுர மேம்பாடு குறித்து பேச வேண்டும் என்றால் அமுல் நிறுவனத்தால் பேச முடியும்.  தன்னிறைவு என்று பேச வேண்டும் என்றால் அமுல் நிறுவனத்தால் பேச முடியும். ஒரு கூட்டுறவு நிறுவனத்தை எப்படி நடத்துவது என்றால் அமுல் நிறுவனத்தால் பேச முடியும். பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் எப்படி போட்டி போட முடிந்தது என்றால் அமுல் நிறுவனத்தால் போட்டி போட முடியும்.

காலத்துக்கு ஏற்ப பிராண்டிங் செய்வது என்றால் அமுல் நிறுவனத்தால் பேச முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புதிய புராடக்ட்களை எப்படி உருவாக்க முடிந்தது என்றால் அதையும் அமுல் நிறுவனத்தால் பேச முடியும்.

அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம்

மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் செயல்பட்டு வருகிறது அமுல். ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்ட போது இது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்றே பேசப்பட்டது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் காலத்துக்கு ஏற்ப மாற்றத்தை கண்டுவந்திருக்கிறது அமுல். கடந்த நிதி ஆண்டில் 46,480/- கோடி ரூபாய் விற்பனையில் செயல்பட்டு வருகிறது அமுல்.

இடைத்தரகர்களை நீக்க!

சுதந்திரத்துக்கு முன்பாக மும்பையின் தேவைக்கு ஏற்ப பாலினை கொண்டுவர முடியவில்லை. அதனால் அருகில் இருக்கும் நகரங்கள் மூலமாக பாலினை கொண்டுவரும் முயற்சியை அப்போதைய பாம்பே அரசு எடுத்தது. குஜராத்தில் உள்ள ஆனந்த என்னும் நகரில் இருந்து பாம்பேக்கு பாலினை கொண்டு வரும் பணியை பால்சன்ஸ் என்னும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த வேலையை செய்த பால்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை சந்திதது.

சர்தார் வல்லபாய் படேல்
சர்தார் வல்லபாய் படேல்

ஆனால் பால் உற்பத்தியாளர்களுக்கு வருமானமே இல்லை. உற்பத்தியாளர்களை விட இடையில் இருக்கும் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை சந்தித்தது. அப்போதைய முக்கிய தலைவராக இருந்த சர்தார் படேல் இடைத்தரகர்களை நீக்கிவிட்டு நாமே ஏன் கூட்டுறவு சங்கத்தை தொடங்க கூடாது என ஆலோசனை வழங்கினார். ஆர்மபகாலத்தில் சில சிக்கல்கள் இருக்கும், நஷ்டம் கூட வரும். ஆனால் கொஞ்சம் தாக்குப்பிடித்தால் பெரிய அளவுக்கு சாதிக்கலாம் என வல்லபாய் படேல் பேசினார். இதனை செயல்படுத்த மொராஜிதேசாய் கய்ரா மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இந்த சங்கத்துக்கு அப்போதைய பாம்மே அரசு அனுமதி அளிக்கவில்லை, அதனால் ஸ்ட்ரைக் நடந்தது. பாம்பே நகரத்துக்கு பால் சப்ளை முற்றிலும் தடைபட்டது. வேறு வழியில்லாமல் அப்போதைய பாம்மே அரசு அனுமதி வழங்கியது.

அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம்

பெரும்பானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களால் இந்த சங்கத்தை தொடர்ந்து நடந்த முடியாது. எப்படியும் 15 நாட்களில் அவர்களால் சப்ளை செய்ய முடியாது எனும் திட்டத்தில்தான் பாம்பே அரசு அனுமதி வழங்கியது.

கைய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எனும் பெயரில் 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 76 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இந்தியாவின் மில்க் மேன்

இந்தியாவின் மில்க் மேன் என்று அழைக்கபடும் வர்கீஸ் குரியன் இந்த கூட்டுறவு சங்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார். சென்னை கிண்டி கல்லூரியில் படித்தவர். அரசாங்கத்தின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் டெய்ரி  இன்ஜினீரியங் படித்தார். அரசாங்க பணிக்காக இந்த சங்கத்தை பார்த்துக்கொள்ள வந்தார். அதன் பிறகு அரசாங்க வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இங்கேயே இருந்துவிட்டார்.

வர்கீஸ் குரியன்
வர்கீஸ் குரியன்

        சங்கம் மூலம் விற்பனை செய்வதால் கூடுதல் உற்பத்தி கிடைத்தது. அதனால் உபரியாக இருக்கும் பாலில் இருந்து பவுடரை தயாரிக்க தொங்கினார்கள். அதனை தொடர்ந்து பாலினை பதப்படுத்தி அதில் இருந்து பால் சார்ந்த புராடக்ட்களை உருவாக்கும் ஆலை 1955-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.  அப்போதுதான் அமுல் என்னும் பிராண்ட் உருவாக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேசிய பால்வள மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக வர்கீஸ் குரியன் இருந்தார். குஜராத்தில் செய்ததை நாடு முழுவதும் செய்த்தால் பாலில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கிறது. மேலும் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

கூட்டுறவு திட்டம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்றால் இதே மாடலை மற்ற துறைகளிலும் கொண்டுவருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும் என கேட்கத்தோன்றும். அப்போதுதான் அமுலின் வெற்றி ரகசியம் புரியும். கூட்டுறவு மாடலால் மட்டுமே அமுல் வெற்றி அடையவில்லை. கூட்டுறவு, புதிய புராடக்ட், டெக்னாலஜி, ஏற்றுமதி, லாபத்தை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல காரணங்களால் மட்டுமே அமுலின் வெற்றி சாத்தியமடைந்திருக்கிறது.

அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம்

தற்போது, பெரும் விவாத பொருளாக மாறி இருப்பது பால் விலை உயர்வுதான். இதற்கு அமுல் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பெட்ரோல் விலை உயர்கிறது, லாஜிஸ்டிக்ஸ் கட்டணம், டெக்னால்ஜி, சம்பளம் உயர்கிறது உள்ளிட்ட பல விஷயங்களும் உயர்கிறது. ஆனால் பால் விலையை ஒரிரு ரூபாய் உயர்த்தினால் உடனே பணவீக்கத்துடன் தொடர்பு படுத்துவது எந்தவகையில் நியாயம் என கேட்டிருக்கிறார்.

இதுவரை பால் மற்றும் பல் சார்ந்த பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அமுல் காய்கறிகள் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறியிருக்கிறது. நாடு முழுவதும் ஆர்கானிக் மூலம் விவசாயம் செய்யும்  விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அமுல் களம் இறங்கி இருக்கிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருக்கும் அமுல் என்ன செய்யப்போகிறது..? இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம் பால் துறையில் சர்வதேச பெஞ்ச்பார்க் நிறுவனமாக மாறி இருக்கிறது..