Published:Updated:

சாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா!

கே.அபிநயா, படங்கள்: ஆ.முத்துக்குமார், கு.கார்முகில்வண்ணன்

சாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா!

கே.அபிநயா, படங்கள்: ஆ.முத்துக்குமார், கு.கார்முகில்வண்ணன்

Published:Updated:
சாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா!

விளையாட்டாக கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம், ஒரு கட்டத்தில் உயர்வுக்கான படிக்கட்டாகவே மாறி, நம்மை உயர்த்திவிடும் அதிசயம் நடக்கும். இப்படி உயர்ந்தவர்கள் இங்கே பலருண்டு. இவர்களில் ஒருவர்... சென்னை, முகப்பேரைச் சேர்ந்த லாவண்யா. சாக் லேட் மற்றும் கேக் தயாரிப்பு விஷயங்களை ஓர் ஆர்வத்தில் கற்றுக்கொண்டவர், ஒரு கட்டத்தில் அதையே தொழிலாக மாற்றிக்கொண்டு உயர்ந்த கதை, வாசகிகளில் பலருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். 'இது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி’ என்ற தலைப்பில், 17.1.12 தேதியிட்ட இதழில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறோம்.

சாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருண்டிருக்கும் நிலையில், தன்னுடைய தொழிலில் மென்மேலும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் லாவண்யா, இந்தத் தொழிலில் இறங்கத் துடிக்கும் பலருக்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்!

''முதலில் என் கணவரின் அலுவலகம், உறவுகள், நண்பர்கள்னு தெரிந்த வட்டத்தில்தான் மார்க்கெட்டிங் பண்ணினேன். எல்லாரும் 'சூப்பர்!’னு சர்டிஃபிகேட் கொடுக்க, இன்னும் புதுப்புது வகைகளில் சாக்லேட்டுகள், பேக்கிங்கில் வெரைட்டினு மெருகேறி அசைக்க முடியாத அளவுக்கு பல படிகள் ஏறி வந்திருக்கேன்! சுயதொழில் பண்ண நினைக்கும் பெண்கள், அதுக்காக புதிதா ஒரு தொழில் கற்றுக்கொள்வதைவிட, தெரிந்த ஒரு விஷயத்தை இன்னும் சிறப்பா கற்றுக்கொண்டு அதையே தொழிலா ஆரம்பிக்கலாம்... அதிக லாபம் பெறலாம், என்னைப்போலவே!''

- புன்னகைக்கும் லாவண்யா, கன்ஃபெக்‌ஷனரி தொழிலின் அடிப்படை, மார்க்கெட்டிங், லாபம் என அனைத்து விவரங்களையும் அக்டோபர் 21 முதல் 27 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார்.

சிறுதொழில்களுக்கான வங்கிக் கடன்கள் மற்றும் அரசு சலுகைகள் பற்றி அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை பேசுகிறார் சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் எஸ்.பாலச்சந்தர்.  

ஸ்வீட் எடுக்க, கொண்டாட... டயல் செய்யுங்கள் இந்த எண்ணுக்கு...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism