காலை கண் விழித்ததும் நாம் குடிக்கும் பாலின் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது. பாலைக் காய்ச்ச பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தினமும் பயன்படுத்தும் செல்போனின் கட்டணம் உயர்ந்ததுடன், அதற்கு சார்ஜ் போட பயன்படும் மின்சாரக் கட்டணமும் உயரப்போகிறது. பால் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே வந்துவிட்டாலும், பிறவற்றின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்பதே இன்றைய நிலைமை.

பற்றாக்குறையை அதிகரிக்கும் பால் விலை!

அத்தியாவசிய பொருள்களின் விலையேறும்போது அது மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. அந்தவகையில் பால் விலையேற்றம் பலரது வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தமிழக அரசு திடீரென பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகம் உயர்த்தியதால், விற்பனை விலையை உயர்த்தி இருப்பதாகச் சொல்கிறது அரசாங்கம். மேலும், கடந்த மூன்று வருடங்களாக பால் விலையை உயர்த்தவே இல்லை என்றும் சொல்கிறது.

பால் விலை உயர்வினால், அதை பயன்படுத்துபவர்கள் மட்டும் பாதிப்படைவதில்லை. பால் விலை உயர்ந்தவுடன், காபி, டீ விலை உயரும். அதோடு, பால் மூலம் தயாரிக்கப்படும் மற்ற பொருள்களின் விலையும் உயரும். இதனால் ஒரு நடுத்தரக் குடும்பமானது 400 - 600 ரூபாய் வரை கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதாவது, 20,000 ரூபாய் மாத வருமானம் பெறுகிற ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் பாலை பயன்படுத்துகிறார் எனில், ஒரு நாளைக்கு 15 ரூபாய் விதம் மாதமொன்றுக்கு 450 ரூபாய் கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

இதெல்லாம் ஆவின் பால் பயன் படுத்துபவர்களுக்குதானே! நான் பிற நிறுவனங்கள் விற்கும் பாலை வாங்கிக் கொள்கிறேன் என்பவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. உள்ளூர் கொள்முதல் விலையை அதிகரிக்கும் போது தனியார் நிறுவனங்களும் அதிக விலை தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும். அல்லது மற்ற மாநிலங்களில் இருந்து பாலை வாங்கி அதனைத் தமிழகத்துக்கு கொண்டுவந்து விற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவர்களுக்கு உற்பத்தி செலவு கணிசமாக அதிகரிப்பதால், தனியார் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கவே செய்யும். ஆக, அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, பால் விலை உயர்வினால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்!

மின்சாரக் கட்டணத்தைக் கூடிய விரைவில் உயர்த்த தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 15 சதவிகிதமும், தொழிற் சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 31 சதவிகிதமும், வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 15 சதவிகிதமும் கட்டணம் அதிகரிக்கப்போவதாக மின்சார வாரியம் கூறியுள்ளது.

ஏற்கெனவே 100 யூனிட் வரை ஒரு கட்டணம், அதைத் தாண்டினால் முதல் யூனிட்டிலிருந்தே விலையேறும் என்ற அளவுக்கு மின்சாரக் கட்டணம் உள்ளது. இதையே எப்படி கட்டுவது என்று தெரியாமல் சாமானிய மக்கள் கஷ்டப்படும்போது, கட்டணத்தை மேலும் உயர்த்தினால், அதைச் சமாளிக்க மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

சராசரியாக 20,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் தன் வீட்டில் ஒரு மாதத்துக்கு 150 யூனிட் மின்சாரம் செலவழிக்கிறார் என்று எடுத்துக்கொண்டால், தற்போது அவர் செலுத்தும் மின் கட்டணம் 300 ரூபாய். ஆனால், மின் கட்டணம் உயர்ந்தால், அவர் செலுத்த வேண்டிய மின் கட்டணம் 350 ரூபாயாக உயரும். ஏசி, வாஷிங்மெஷின் என்று வாழ்கிறவர்கள் 100-200 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டி யிருக்கும்.
இதெல்லாம் சொந்தமாக வீடு வைத்திருப்பவர் களுக்கே. சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விநோதமான இன்னொரு பிரச்னையைச் சந்திக்க வேண்டும். சென்னையில் பல பகுதிகளில் வாடகை வீட்டில் குடியிருக்கிறவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 6-7 ரூபாய் வரை தருகிறார்கள். மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், இது 8 ரூபாய் வரை உயர வாய்ப்புண்டு. அந்த நிலையில் அவர்கள் மாதமொன்றுக்கு 100 யூனிட் பயன்படுத்தினாலே 800 ரூபாய் கட்ட வேண்டி யிருக்கும். இதனால், சென்னையில் வசிக்கும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வாடகை வீட்டுவாசிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாவார்கள்.

கிறுகிறுக்க வைக்கும் செல்போன் சேவைக் கட்டணம்!

செல்போன் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலைதான் கணிசமாகக் குறைந்துள்ளது என்றாலும், செல்போன் கட்டணங்கள் மூன்று மடங்கு விலையேற்றம் கண்டுள்ளன. முன்பு 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், சுமார் 80 ரூபாய்க்கு பேச முடிந்தது. இப்போது 70-75 ரூபாய்க்கே பேச முடிகிறது. இரண்டு ஆண்டுகளில் இன்டர்நெட் சேவைக் கட்டணம் ஒரு ஜிபி டேட்டா 68 ரூபாயில் இருந்து 197 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது 3ஜி ஏல செலவுகளைச் சமாளிக்க மீண்டும் கட்டணங்களை உயர்த்தப்போவதாக இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறி வருகிறது. ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்த இந்த நிறுவனங்கள் தயங்காமல் விலை உயர்த்தத் திட்டமிட்டு வருகின்றன.

ஏன் இந்த விலையேற்றம்?

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் இந்த நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர என்ன காரணம் என சென்னை பல்கலைக்கழக எக்கனாமெட்ரிக்ஸ் துறை பேராசிரியர் இராம.சீனுவாசனிடம் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.

‘‘தமிழகத்தில் பால் உபயோகிப்பவர் களில் ஆவின் பாலை பயன்படுத்துபவர் களின் விகிதம் ஒரு சிறிய பகுதிதான். அதில் பெரும்பாலும் நகரம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். இன்றும் கிராம மக்கள் அமைப்புசாரா பால் விற்பனையாளர்களை நம்பியே உள்ளனர்.
இருந்தாலும் அரசாங்கம் பால் விலையை உயர்த்தினால் மற்ற பால் உற்பத்தி நிறுவனங்களும் விலையை உயர்த்தவே செய்யும்.

பாலை தொடர்ந்து மின்சாரம், செல்போன், பேருந்து கட்டணம் ஆகியவற்றில் விலை ஏறப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த விலை யேற்றத்தினால் அரசு ஊழியர்களைவிட தனியார் ஊழியர்கள் அதிகம் பாதிப்படைவார்கள். அரசு துறைகளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குச் சம்பளப்படி குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை உயர்த்தப்படும். ஆனால், இன்று பெரும்பாலானோர் தனியார் துறை களில் பணிபுரிபவர்களாக உள்ளனர். அவர்களது சம்பள உயர்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இந்த விலையேற்றத்தால் 8 மணிநேரம் வேலை செய்யும் ஒருவர் 10 மணிநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்.

அதிலும், தொழில்நுட்பமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் திறன்மிக்க பணியாளர்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற சூழல் உருவாகி யுள்ளது. நாட்டின் பணவீக்கமும் வருமானமும் ஒன்றையொன்று சார்ந்தவையே. நமது திறன்களை வளர்த்துக் கொண்டு நம் வருமானத்தைப் பெருக்கினால் மட்டுமே இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க முடியும்’’ என்றார்.

எப்படி சமாளிக்கலாம்?

அத்தியாவசியமாகத் தேவைப்படும் இந்தப் பொருள்களின் விலை உயர்வுக்காக ஒரு நபர் சராசரியாக 800 முதல் 1,500 ரூபாய் வரை கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. நுகர்வோர் பணவீக்கம் 6.46 சதவிகிதமாக உள்ள நிலையில் வருமானத்தில் விலைவாசி உயர்வு 8 சத விகிதத்தைத் தாண்டிச் செல்லும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது. இந்த விலையேற்றங்களைச் சமாளிப்பது எப்படி என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

1. அத்தியாவசிய பொருள்களுக்கு செலவு செய்வதைத் தவிர்க்க முடியாத போது, வசதிக்காக வாங்கும் பொருள்கள் மற்றும் பொழுதுபோக்கு செலவுகளைக் கூடியமட்டும் குறைக்கலாம். கடந்த இரண்டு வருடங்களாக சினிமா கட்டணம் ஏறவில்லை. ஆனால், அங்கு விற்கப்படும் பாப்கார்ன் விலை ஏறியுள்ளது. இதை புரிந்து கொண்டால், அநாவசிய செலவுகளைத் தடுத்துவிடலாம்.

2. தனிமனித பணவீக்கமும் விலைவாசி உயர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, சராசரியாக போக்குவரத்து செலவுகளுக்காக ஒருவர் செலவழிக்கும் தொகை என்பது மாறக்கூடியது. தற்போது 1000 ரூபாய் செலவழிப்பவர் போக்குவரத்து வசதிக்காக ஒரு வாகனத்தை வாங்கினால், அவரது போக்குவரத்துச் செலவு 3000 ரூபாயாக மாறும். இது 20,000 சம்பாதிப்பவரின் சம்பளத்தில் 15% ஆகும். இதேபோல், ஒவ்வொரு பொருளும் உங்களது தேவையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அளந்துபார்த்து அதற்கேற்ப செலவு செய்தால், அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

3. உங்களுக்கு வரும் போனஸ் அல்லது தொழிலில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா லாபம் ஆகியவற்றை வைத்து எதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்காமல், அது உங்கள் பட்ஜெட் தாண்டிய வருமானம் என்று நினைத்து, முதலீடு செய்தால், அடுத்தமுறை விலையேற்றத்தைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.

4. குடும்பத்தில் உள்ள அனைவரின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியம். ஒரு மாதத்துக்கு நீங்கள் செய்யும் தேவையற்ற செலவுகள் எவ்வளவு, இதில் எந்த செலவுகளையெல்லாம் குறைக்க முடியும் என்று பார்த்து அதைக் குறைக்கலாம். உதாரணமாக, மாதம் இரண்டுமுறை குடும்பத்தோடு ஹோட்டலுக்குச் செல்வதை ஒருமுறையாகக் குறைத்துக் கொள்ளலாம்.

5. பணவீக்கம் எப்படி இருக்கிறது என்று பார்த்து, அடுத்த விலையேற்றம் எப்படி இருக்கும் என ஓரளவுக்கு யோசித்து இப்போதே அதற்கேற்ற சரியான முதலீடுகளில் சேமிக்கும்போது நிச்சயம் அடுத்த விலையேற்றத்தைக் கண்டு பயப்பட வேண்டிய தேவை இருக்காது.’’

ஆக, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை நம்மால் தவிர்க்க முடியாது என்றாலும், அதைச் சமாளிக்கும் வழிகளை நாம் தெரிந்துகொண்டு பின்பற்றினால், இந்த விலையேற்றம் தரும் பாதிப்புகளிலிருந்து எளிதில் தப்பிவிடலாம்!