ஒருவர் தனது வாழ்க்கையில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவே முடியாது. வாழ்க்கையின் பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கடன் தேவைப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான டிவி, ஏசி போன்ற பொருள்களையும் கடனில்தான் வாங்கு கிறோம். இந்தக் கடனை யார், எவ்வளவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம் நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் எஸ்.ீதரன் விளக்குகிறார்.

“வாழ்க்கையில் தேவை ஏற்படும் போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. படித்து முடித்தபின் முதல் சம்பளத் திலிருந்தே கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் பலர்.

வேலைக்குச் சேர்ந்தவுடனே சம்பளத்துக்காக வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும்போதே கிரெடிட் கார்டும் கிடைத்துவிடுகிறது. ஆக, வருமானம் ஈட்டத் தொடங்கும் முன்பே கடன் வாங்குவதற்கான வழிகளைச் சொல்லிக் கொடுத்துவிடுகிறது நம்முடைய சமூகம்.

கடன் நல்லதா, கெட்டதா?

கடனே வாங்காமல் இருக்க முடியாது. கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கான வட்டி விகிதம் என்பது அதிகமாக இருக்கும். மேலும், இதன் மூலமாகச் சொத்து உருவாக்கம் என்பது இருக்காது. ஆனால், வீட்டுக் கடன் என்பது அவசியமான கடன். இதை வாங்குவதில் தவறேதும் இல்லை. மேலும், இந்தக் கடன் மூலமாகச் சொத்து உருவாகும்.

கிரெடிட் கார்டு கடன்!

கிரெடிட் கார்டு கடனை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கு வட்டி அதிகமாக இருக்கும். அதேபோல கடன் வாங்கிக் குறிப்பிட்ட காலத்தில் திரும்பச் செலுத்தவில்லையெனில் அபராதம் அதிக மாக இருக்கும். கடைசிவரை கட்டவில்லை எனில், கடன் வாங்கியவரின் பெயர் சிபில் பட்டியலில் சேரு வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தக் கடனை கவனமாகக் கையாள்வது அவசியம்.

கார் கடன்!

கார் கடனை பெரும்பாலான நிறுவனங்கள் அதிகபட்சம் 7 வருடங் களில் திரும்பக் கட்ட அனுமதிக்கின்றன. இந்தக் கடனை அதிகபட்சம் 4 வருடங் களில் கட்டிவிடுவது நல்லது. நம்முடைய சொந்த பங்களிப்பு 20 முதல் 30 சத விகிதமாகவும் மீதத்துக்குக் கடனாகப் பெறுவதும் நல்லது. இரண்டு சக்கர வாகனத்துக்கு முடிந்தவரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

எந்தக் கடன் எவ்வளவு வாங்கலாம்?

ஒருவரின் நிகர மாத வருமானத்தில் 50 சதவிகிதத்துக்குக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அதாவது, 50% என்பது ஒரு அளவுகோல்தான். இதற்குக் குறைவாகவே கடன் வாங்குவது நல்லது. 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அதைவிட முக்கியம். கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், வாகனக் கடன், நகை அடமான கடன் ஆகியவை குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருப்பது நல்லது. இந்தக் கடன்கள் அனைத்துமே குறுகிய காலக் கடன்கள். இவற்றைத் தவிர்க்க முடியாத அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

மேற்கூறிய கடன்கள் அனைத்தும் சேர்த்து உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதம் வந்துவிடுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விண்ணப்பித்தீர்கள் என்றால், உங்கள் வருமானத்தில் அதிகபட்சம் 20% மாத தவணை கட்டுமளவுக்கே கடன் கிடைக்கும். இதனால் வீடு வாங்கும் திட்டம் நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, எந்தக் கடனை வாங்குவதற்கு முன்பும் அது அவசியம் தேவையா என நன்கு யோசித்து வாங்குவது நல்லது. இந்தக் கடனை மொத்தமாக வாங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது அவசியம்.

எதிர்காலத் தேவை அறிந்து கடன் வாங்குவது!

இன்றைய வருமானத்தையும் செலவையும் மட்டும் மனதில் வைத்து கடன் வாங்கக் கூடாது. எதிர்காலத்தில் வருமானம் அதிகரித்தாலும் தேவைகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் எதிர்காலத்தில் குழந்தைகளின் கல்வி, பெற்றோர்களின் பராமரிப்புச் செலவு, மருத்துவச் செலவு ஆகிய தேவைகளை மனதில் வைத்து கடன் வாங்குவது நல்லது.

50 வயதுக்குமுன் கடன்!

எந்தக் கடன் வாங்குவதாக இருந்தாலும் அதை உங்களது 50 வயதுக்கு முன்பே திரும்பச் செலுத்தும் வகையில் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஏனெனில், 50 வயதுக்குப் பிறகு கடன் இருந்தால், பணி ஓய்வுக்குப் பிறகும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணி ஓய்வின்போது உங்கள் உடல்நலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. மேலும், 50 வயதில்தான் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் வரும். அந்தச் சமயத்தில் கடன் அதிகம் இருந்தால், வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது.

கடன் வாங்குவதற்குமுன் அதைத் திட்டமிட்டு செய்வது அவசியம். அதாவது, வீட்டுக் கடன் எத்தனை வயதில் வாங்கப் போகிறீர்கள், எவ்வளவு ரூபாய் வாங்கப் போகிறீர்கள், அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் காலம் எவ்வளவு என்பதைத் திட்டமிட்டு அதற்கேற்ப மற்ற கடன்களை வாங்குவது நல்லது.

கடன் அளவாக இருந்தால், அது தேனாக இனிக்கும். அது அளவுக்கு அதிகமாக இருந்தால், முதுமையில் வேம்பங்காயாகக் கசக்கவே செய்யும்!