Election bannerElection banner
Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

பணம் கொட்டும் புடவை பிசினஸ்! கே.அபிநயா, படங்கள்: தி.குமரகுருபரன், தி.ஹரிஹரன்

வழிகாட்டும் ஒலி!

''மனித இனம் இருக்கும் வரை, ஆடைகளுக்கான தேவை இருந்துட்டேதான் இருக்கும். இதிலும் பெண்களுக்கான புடவை தொழில் என்றென்றும் வாழவைக்கும்!''

தன் அனுபவத்திலிருந்து அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயந்தி ராஜாவேம்பு. ஜூன் 8, 2007  தேதியிட்ட அவள் விகடன் இதழில் 'ஐம்பது வயதில் அசத்தல் வெற்றி!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம்பெற்ற இந்த ஜெயந்தி, இன்றும் ஏறுமுகமாகவே இருக்கிறார் தன் தொழிலில்!

''இதுல நிறைய நெளிவுசுளிவுகள் இருக்கு. தறி, மில், மொத்தக் கடைகளில் புடவைகளைக் கொள்முதல் செய்யும்போது, பெண்களோட ரசனை புரிந்து வாங்கினாதான், ஸ்டாக் தேங்காம

வழிகாட்டும் ஒலி!

விற்பனையாகும். ஒரே ரக புடவைகளா இல்லாம, சில ரக புடவைகளாவும் வாங்கிடாம, ஒவ்வொரு வயதுப் பெண்களுக்கான புடவைகள்னு பார்த்துப் பார்த்து வாங்கணும். அதிக லாபத்துக்கு ஆசைப்படக்கூடாது. 'கடையைவிட இவங்ககிட்ட விலை ரொம்ப ஜாஸ்தி’னு பேச்சு உண்டாயிட்டா... கஷ்டம். நியாயமான லாபத்தை எடுத்துக்கிறதுதான், இந்தத் தொழில்ல நிலைச்சு நிற்க வழி. ஒரு புடவையோட அழகையும், தரத்தையும் நாம எடுத்துச் சொல்றதுலேயே, வாடிக்கையாளர்களுக்கு அதைக் கட்டிப் பார்க்கிற ஆசை வந்துடணும்! பெண்கள், இந்தத் தொழிலை தைரியமா கையில் எடுக்கலாம்.  குறைந்தது மாதம் 10,000 ரூபாய் லாபம் பார்க்கலாம்'' என்று பூஸ்ட் தரும் ஜெயந்தி, புடவை தொழில் பற்றிய தகவல்களை, நுணுக்கங்களை நவம்பர் 4 முதல் 10 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார்.

சிறுதொழில் தொடங்குவதற்கான அரசின் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன் விவரங்களைப் பற்றி நவம்பர் 11 முதல் 17 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார், சென்னை, கனரா வங்கியின் பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார்.

tel:+(91)-44-66802912 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க... புடவை தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுங்க!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு