ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகள் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்தப் புதிய கட்டுப்பாடு களின்படி, ஒருவர் ஒரு மாதத்துக்கு, கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மெட்ரோ நகரங்களில் உள்ளவர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறையு மாக மொத்தம் 8 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.

மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ளவர்கள் மற்ற வங்கியில் 5 முறை பணம் எடுக்கலாம். இந்த எண்ணிக்கைக்குமேல் ஏடிஎம் கார்டின் மூலம் பணம் எடுக்கும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் (சர்வீஸ் சார்ஜ் தனி) வரை பயன்பாட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளினால் சாதாரண மக்கள் பலவிதமான சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சில எளிய வழிமுறை களைக் கடைப்பிடித்தால், இந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம். அந்த எளிய வழிமுறைகள் இதோ...

1. இரண்டு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்!

இன்று பெரும்பாலானோர் இரண்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அப்படி வைத்திருக்கும்பட்சத்தில் இரண்டு ஏடிஎம் கார்டு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைத்தவுடன், ஒரு கணக்கிலிருந்து சரிபாதி பணத்தை எடுத்து, இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டால் போதும்.

ஒரு ஏடிஎம் கார்டுக்கு 8 முறை என இரண்டு கார்டுகளின் மூலம் மொத்தம் 16 முறை பணம் எடுக்க முடியும். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும் வேலையை செய்ய வார இறுதியில் ஒரு நாளைக்கு வங்கிக்குப் போனால் போதும் அல்லது ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

சில வங்கிகள் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்தாலே ஏடிஎம் கார்டு தந்துவிடுகிறது. ஒரு ஏடிஎம் கார்டுக்கு ஆண்டுக்கு 150 ரூபாய் வரை பராமரிப்புக் கட்டணம் கட்டினாலே போதும். இந்த வசதி கிடைத்துவிடும்.

2. செக்குகளை பயன்படுத்துங்கள்!

பள்ளிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்ற பல்வேறு செலவுகளுக்கு ரொக்கமாக பணத்தைக் கட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக, செக்குகள் மூலம் பணத்தைக் கட்டுங்கள். எட்டு முறைக்குமேல் ஒன்பதாவது முறை நீங்கள் எடுக்கும் பணத்துக்கு ரூ.22.47 (கூடுதல் கட்டணம் + சர்வீஸ் சார்ஜ்) கட்ட வேண்டும். ஆனால், ஒரு செக் புக் பெற நீங்கள் கட்ட வேண்டியது ரூ.9.55 மட்டுமே.

3. நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்துங்கள்!

இன்றைக்கு நகர்புறத்தில் எல்லா வீடுகளிலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. இன்டர்நெட் வசதியும் பல வீடுகளில் உள்ளது. இந்த இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி, நெட்பேங்கிங் மூலம் எந்த செலவும் இல்லாமல் எளிதில் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணம் இப்படி எத்தனையோ செலவுகளை நெட்பேங்கிங் மூலம் எளிதில் கட்டி முடித்துவிடலாம். நெட்பேங்கிங் வசதியை இன்றைக்கு பல வங்கிகள் இலவசமாகத் தருவதால், இந்தச் சேவையைத் தாராளமாகப் பயன்படுத் தலாம்.

4. ஸ்வைப் செய்யுங்கள்!

ஷாப்பிங் செய்யும்போது பணத்தைக் கட்டுவதற்குப் பதிலாக டெபிட் கார்டு மூலம் பணத்தைக் கட்டலாம். இன்றைக்கு ஸ்வைப்பிங் செய்து பணத்தைக் கட்டும் வசதி மளிகைக் கடைகளில்கூட வந்துவிட்டது. எனவே, இந்த வசதியைத் தாராளமாக பயன் படுத்தலாம்.

5. திட்டமிடுங்கள்!

உங்களுக்கான ஒரு மாத செலவுகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாகச் செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனை களுக்கு மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலை உருவாகும். இந்த ஐந்து வழிகளை சரியாக பயன்படுத்தினால், ஏடிஎம் கார்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய விதிமுறை கள் நமக்கு ஒரு பிரச்னையாகவே இருக்காது!

விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறும்!

ஏடிஎம் கார்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம்.

‘‘ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். வங்கிகள் விரும்பினால் மட்டுமே இதனை வசூலிக்கலாம் என்ற விதிமுறையை ஆர்பிஐ அளித்துள்ளது.

வங்கிகள் விரும்பினால், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எடுக்கும் எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அனைத்து பரிமாற்றங்களையும் இலவசமாக அமைத்துக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ சொல்லியிருக்கிறது.

இதனால் சில வங்கிகள், கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித் திருக்கின்றன.

நிதி அல்லாத பரிவர்த்தனைகள் செய்வது, இருப்பு எவ்வளவு என்று தெரிந்துகொள்வது ஆகியவற்றுக்கு வங்கிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் விதிக்கலாம். பெரும்பாலான வங்கிகள் இதனை ஓர் எண்ணிக்கையாகக் கொள்வதில்லை. வங்கிகளின் முடிவைப் பொறுத்து சில சமயங்களில் இதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றனர்.