Published:Updated:

உஷார் உஷார்!

வாட்ஸ்-அப் வதந்திகள்!ச.ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

‘வாட்ஸ்-அப் சேவைக்கு இனி கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இந்தக் கட்டணத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமெனில், வாட்ஸ்-அப் சேவையைப் பயன்படுத்துவதற்கான அழைப்பை 10 பேருக்கு செல்போன் மூலம் அனுப்பி வையுங்கள்’ என்று ஒரு வதந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவி, பலரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
 
காரணம், ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி அனுப்புவதில் தொடங்கி, பலவிதமான போட்டோக்கள் அனுப்ப வாட்ஸ்-அப் வசதியாக இருக்கிறது. இனி இந்த சேவையைப் பெற கட்டணம் கட்ட வேண்டுமே என்று பயந்த நம்மவர்கள், உடனடியாக அதைப் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி ரகளை செய்தனர்.

இந்தக் குறுஞ்செய்தி உண்மையா, இல்லை வதந்தியா என சமூக இணையதள வட்டாரங்களில் விசாரித்தோம். இது ஒரு கடைந்தெடுத்த வதந்தி என்பதை உடனே உறுதிப்படுத்தினர். 

‘‘சென்ற மாத இறுதியில் வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட் கட்டணங்களைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து அக்டோபர் 31-ம் தேதி இணையதளத்தைப் பயன்படுத்தாமல் பகிஷ்கரிப்போம். நஷ்டத்தை ஏற்படுத்துவோம் என்று சொன்னது இந்த வதந்தி. மறுநாளே (நவம்பர் 1) நிறுவனங்களுக்கு எவ்வளவு நஷ்டம் என்கிற தகவலும் வெளியானது.

உஷார் உஷார்!

நிறுவனத் துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மறுநாளே எப்படி சொல்ல முடியும் என்கிற லாஜிக்கில் சிக்கி, இது நிச்சயம் வதந்திதான் என்று ஊர்ஜிதமானது.

இதேபோல, இன்னொரு வதந்தி. ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்தப் பெண் உங்கள் வீட்டில் காஸ் அடுப்பை சரிபார்ப்பதாகச் சொல்லி  நுழைந்து, வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்றுவிடுவார்.

உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கை செய்தது. ஆனால், அந்தப் பெண்ணோ கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிடிக்காத யாரோ சிலர் இப்படி செய்திருப்பது பிறகுதான் தெரியவந்தது.

இப்படி பல வதந்திகள் வாட்ஸ்-அப்பில்  வர ஆரம்பித்து விட்டன. இதுமாதிரியான குறுஞ்செய்திகளை தயவு செய்து மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். சம்பந்தப்பட்ட விஷயம் உண்மை அல்லது பொய் என்று தெரியவர ஒருசில நாட்கள் ஆகலாம்.

உண்மைதான் என்று ஊர்ஜிதமானபின் உங்களுக்கு வந்த குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வது நல்லது’’ என்றனர் அவர்கள்.  சாதாரண வதந்திக்கு எட்டுகால் என்றால், வைரல் ரூமருக்கு 88 கால். எனவே, ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு