Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

இரண்டு மடங்கு லாபம்... இனிக்கும் கிராஃப்ட்! கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன், தே.தீட்ஷித்

"என் படிப்பு பன்னிரண்டாவதுதான். அம்மா சொல்படி தையல் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் கணவர் சம்பாத்தியம் பற்றாக்குறையா இருந்தப்போ, 'தையல் கிளாஸ் ஆரம்பி!’னு அம்மாதான் வழிகாட்டினாங்க. இன்னிக்கு நிம்மதியா ஓடிட்டிருக்கு வாழ்க்கை'' என்று மலர்ந்த முகத்துடன் பேசும், சென்னையைச் சேர்ந்த கலா சந்திரன், கிட்டத்தட்ட 25 வருடங்களாக தையல் மற்றும் கிராஃப்ட் தொழில்களில் பயணித்துக்கொண்டிருப்பவர். ’ஸ்ரீஅன்னை அரவிந்தா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்' உரிமையாளர்!

வழிகாட்டும் ஒலி!

''ஆரம்பத்துல ஒரேயொரு தையல் மெஷினை வெச்சுக்கிட்டுதான் பயிற்சி கொடுத்திட்டிருந்தேன் நாள் முழுக்க உழைக்கிறதால களைப்பைப் பார்க்காம, அடுத்தது என்னனு யோசிச்சேன். மொத்த விலையில் புடவைகள், பிளவுஸ், சுடிதார் எல்லாம் வாங்கி, கிளாஸுக்கு வரும் பெண்கள்கிட்ட விற்க ஆரம்பிச்சேன். 'இது போதும்!’னு நின்னுட்டா, வளர்ச்சி இருக்காதே! அதனால, ஜுவல்லரி

வழிகாட்டும் ஒலி!

மேக்கிங், பெயின்ட்டிங், குழந்தைகளுக்கான கிராஃப்ட்கள், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்னு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டு, வீட்டில் செய்து விற்பனைக்கு வெச்சேன். திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், கொலு... இதுக்கெல்லாம் வெளி ஆர்டர்கள் எடுத்து பரிசுப் பொருட்கள் செய்து கொடுத்தேன். தொடர்ந்து வெளியிடங்களுக்கும் போய் பயிற்சி கொடுக்கிறேன்'' என்று சொல்லும் கலா, ”ஒரு விஷயம் தெரியுமா... கிராஃப்ட் தொழிலைப் பொறுத்தவரை, முதலீட்டைவிட இரண்டு மடங்கு லாபம் எடுக்கலாம். இந்தத் தொழிலை தொடங்கும் போது என் மகளும் மகனும் சின்னப் பிள்ளைங்க. இப்ப அவங்க சம்பாதிக்க ஆரம் பிச்சுட்டாங்க. நானும் சம்பாதிச்சுட்டு இருக்கேன்'' என்கிறார் சிரித்தபடியே.

வழிகாட்டும் ஒலி!

கைத்தொழில்கள் பற்றிய பல விவரங்களை நவம்பர் 18 முதல் 24 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் உங்களுக்காகப் பேசுகிறார் கலா.

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகளைப் பற்றி நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார், திருச்சி, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் ஆலோசகர் மணிமொழி.

கைத்தொழிலால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண...

என்ற  எண்ணுக்கு போன் போடுங்க!

அடுத்த கட்டுரைக்கு