Published:Updated:

விலை குறையும் கச்சா எண்ணெய்... பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

ச.ஸ்ரீராம்

விலை குறையும் கச்சா எண்ணெய்... பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

ச.ஸ்ரீராம்

Published:Updated:

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக குறையத் தொடங்கியது. சில மாதங்களுக்குமுன் ஒரு பேரல் 90 டாலர் என்ற அளவில் இருந்த கச்சா எண்ணெய்யின் விலை, தற்போது ஒரு பேரல் 75 டாலர் என்ற அளவுக்கு அதிரடியாக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைவுக்கு காரணம், அமெரிக்கா கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்வதும், சர்வதேச நாடுகளில் எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதுமே.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும் என்று பலமாக எதிர்பார்த்தனர் மக்கள். ஆனால், விலையைக் குறைக்க எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை. சர்வதேச நிலவரங்களால் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், இந்திய சந்தை களில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என்று கேட்கத் தொடங்கி இருக்கின்றனர் மக்கள். இந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேட ஆரம்பித்தோம்.

மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. ஆனால், உற்பத்திக் கேற்ப அங்கு  தேவை இல்லை என்பதால் கச்சா எண்ணெய்யின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 30% குறைந்துள்ளது. இதன் காரணமாக, உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசலின் விலை குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலை குறையும் கச்சா எண்ணெய்... பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

விலை குறையாதது ஏன்?

சர்வதேச அளவில் விலை குறைந்த அளவுக்கு இந்தியாவில் விலை குறையவில்லை. அதற்குப் பதிலாக, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங் களுக்கு உற்பத்தி மற்றும் கலால் வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.13,000 கோடி வருமானம் கிடைக்கும். அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 டாலர் குறைந்தால், இந்தியா இறக்குமதி செய்யும் தொகையில் சுமார் ரூ.9,000 கோடி லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

விலை குறையும் கச்சா எண்ணெய்... பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

மத்திய அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை அதிகப்படுத்தியதன் பின்னணி என்ன?  இன்று கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதால், விலை கணிசமாகக் குறைகிறது. இதை நம்பி பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துவிட்டால், நாளைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது பிரச்னை வந்தால், மீண்டும் அதன் விலை வேகமாக ஏறிவிடும். அப்போது திடீரென விலையை அதிகரித்தால், மக்களிடம் அதிருப்தி உருவாகும். அப்போது கலால் வரியை நீக்குவதன் மூலம் பெட்ரோல், டீசலின் விலையைக் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நோக்கில் மத்திய அரசாங்கம் தற்போது கலால் வரியை அதிகரித்துள்ளது.

இந்த வரி விதிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்காது. அப்படி குறைத்தாலும் வரியோடு சேர்க்கும்போது  பழைய விலையே இருக்கும். பின்னர் சர்வதேச சந்தையில் விலை ஏறினாலும் சிறிய விலை ஏற்றத்தோடு மக்களை எதிர்கொள்ள முடியும் என்ற முடிவில் இந்த வரி விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விலை குறையுமா?

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறைய வாய்ப்புள்ளதா, எண்ணெய் நிறுவனங்கள் விலையை எப்போது குறைக்கும் என்பது குறித்து மத்திய அரசின் முன்னாள் நிதித் துறை செயலாளர் எம்.ஆர்.சிவராமனிடம் கேட்டோம்.
‘‘கச்சா எண்ணெய்யின் விலை குறைவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தேவைக் குறைவால் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும். ஆனால், இந்தியாவில்  விலை குறையாததற்கு காரணம், நம் நாடு கச்சா எண்ணெய் பெற வெளிநாடு களையே நம்பி இருக்கிறது.  நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் எனில், தேவை அதிகரிக்க வேண்டும். அப்படி தேவை அதிகரித்தால், அதனைச் சமாளிக்க அந்நிய கையிருப்பு போதிய அளவு  நம்மிடம் இருக்க வேண்டும். இந்தியாவில் அந்நிய கையிருப்பு போதிய அளவு இல்லை. அந்நிய கையிருப்பு எப்போது அதிகரிக் கிறதோ, அப்போதுதான் தேவை அதிகமாகி விலை குறையும்.

தவிர, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியங்களாக அரசு அதிக தொகையை வழங்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே நஷ்டத்தில் உள்ளன. இதனை சரிசெய்து மீண்டு வந்தால், அப்போதும் சர்வதேச சந்தைகள் இதேபோன்ற வீழ்ச்சியில் இருந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரை பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

விலை குறையும் கச்சா எண்ணெய்... பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

விலை குறையாததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும். ஆனால், மற்ற போக்கு வரத்துகளில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

உதாரணத்துக்கு, 10 டன் பொருளை கொண்டு செல்லும் ஒரு ட்ரக்குக்கு 3 கி.மீட்டருக்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகிறது எனில், அதனால் ஒரு கிலோ பொருளின் விலை சிறிய அளவிலேயே உயரும். இதனால் அவர்களும் இந்த விலையேற்றத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படப் போவதில்லை. அதனால் பெட்ரோல் விலை குறையும் வாய்ப்பு மிகக் குறைவுதான்’’ என்றார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் இந்தச் சமயத்தில் அதன் விலையைக் குறைத்து மக்களுக்கு நன்மை செய்ய நினைக்காமல், விலை யேற்றத்தினால் தனக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. பெட்ரோல், டீசலின் விலையை மத்திய அரசாங்கம் ஓரளவுக்கு குறைத்தால்தான் மக்கள் தப்பிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism