நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

10 வருடப் பயணம்... முடிவுக்கு வந்த ஆர்குட்!

10 வருடப் பயணம்... முடிவுக்கு வந்த ஆர்குட்!

2000-ம் ஆண்டு Y2K பிரச்னையிலிருந்து மீண்டுவந்த கணினித் துறைக்கு புதியதாய் அறிமுக மானது சமூக வலைதளங்கள். அதில் முதலில் அறிமுகமான சமூக வலைதளம் ஆர்குட்தான். கல்லூரி மாணவர்களையும், இளைய சமுதாயத்தையும் உலகத்தோடு இணைக்கும் முயற்சியில் ஜனவரி 24-ம் தேதி 2004-ல் தன்னை இணைத்துக்கொண்டது ஆர்குட்.

10 வருடப் பயணம்... முடிவுக்கு வந்த ஆர்குட்!

ஆர்குட் ஆரம்பித்த காலத்தில் பிரபலமான வார்த்தைகளாக ‘ஸ்க்ராப்’ போஸ்ட், ஆர்குட் சாட் போன்றவை ஆர்குட் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. முன்பெல்லாம் ஆர்குட்டில் இருக்கிறேன் என்ற வார்த்தையையே பெருமையாகக் கூறும் அளவுக்கு மாறிப்போனது. ஆர்குட்டும் நான்கு வருடங்கள் அசைக்கமுடியாத நிலையில் இருந்தது. மற்ற சமூக வலைதளங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆர்குட் ஒரு முன்னோடியாக விளங்கியது என்றே கூறலாம்.

காலம் செல்ல செல்ல ஆர்குட் பயன்பாட்டாளர்களது எண்ணிக்கை மற்ற சமூக வலைதளங்களை நோக்கி பயணித்தது. இன்னும் சிலர் ஆர்குட்டின் லே-அவுட் போல் வேறு எந்த சமூக வலைதளத்திலும் இல்லை; ஆர்குட் பயன்படுத்த எளிதாக இருந்தது என கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

10 வருடப் பயணம்... முடிவுக்கு வந்த ஆர்குட்!

ஆர்குட் தளத்தை கூகுள் நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் அறிமுகமான ஆர்குட் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஹிட் அடித்த ஆர்குட்டுக்கு சோதனையாய் வந்தன அதிநவீன வசதி கொண்ட சமூக வலைதளங்கள். கூகுள் இந்தப் போட்டியைச் சமாளிக்க கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தைத் துவங்கியது. ஏற்கனவே வீழ்ச்சியின் பிடியில் இருந்த ஆர்குட்டுக்கு, இது மேலும் சரிவைத் தந்தது. தற்போது தனது சேவையை 2014, செப்டம்பர் 30-ம் தேதியோடு நிறுத்திவிட்டது.

அதுமட்டுமின்றி ஆர்குட் வலைதளம் உங்களது புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுள் பிளஸில் சேமித்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதனால் செப்டம்பர் 30-ம் தேதி ஆர்குட்டுக்கு உலகமே குட்பை சொன்னது. சிலர், என் காதலி என் போஸ்ட்டை பார்த்துவிட்டாள் என்பதை ஆர்குட் சொல்லும் போது அதனைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை, எங்கள் தலைமுறையில் பிரபலமான சமூக வலைதளம் ஆர்குட்தான்’  என தங்கள் வருத்தம் கலந்த குரலில் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.  உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் மட்டும் 40 லட்சம் பேர் ஆர்குட்டுக்கு குட் பை சொல்லி இருந்தனர்.

10 ஆண்டுகளுக்குமுன் அறிமுகமாகி முடிவுக்கு வந்துவிட்ட ஆர்குட், இன்றைய சமூக வலைதளங்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. ஆர்குட் விதைத்த விதையில்தான் இன்றும் சமூக வலைதளங்கள் வளர்ந்து நிற்கின்றன.