நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

உலகை மாற்றிய புதுமைகள்!

தேட வைத்த கூகுள்!ச.ஸ்ரீராம்

முன்பெல்லாம் ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஊரில் உள்ள நூலகம் அல்லது செய்தித்தாள்கள் இருந்தன. பின்னர் ரேடியோவும், தொலைக்காட்சியும் அதனைச் சுலபப்படுத்தின. இருந்தாலும், பல வருடங்களுக்குமுன் நடந்த செய்தி, அரிய தகவல் இவற்றை நம்மால் தேட முடியாமல் இருந்தது.

அதன்பின் உருவானதுதான் இணையதளங்கள். ஆனால், அமெரிக்காவைப் பற்றிய தகவலை எந்த இணையதளம் வைத்திருக்கிறது என்ற விவரம் இணையதளப் பயன்பாட்டாளர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்த இணையதளங்கள் தரும் தகவலைத்தான் அன்றைய சூழலில் அறிய முடிந்தது.

உலகை மாற்றிய புதுமைகள்!

இந்தச் சிக்கலை சமாளிக்க 1994-ம் ஆண்டு தேடுதல் தளங்கள் உருவாக்கப்பட்டன. வெப் க்ராளர்தான் உலகின் முதல் தேடுதல் தளமாக உருவானது. ஆனால், 1998-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்னின் ஆண்டு ஆய்வறிக்கைக்காக உருவாக்கப்பட்டதுதான் கூகுள். உலகத்தில் எந்தத் துறை பற்றி கேள்வி கேட்டாலும் கூகுள் பதில் தேடித்தரும். அதுமட்டுமின்றி கண் இமைப்பதற்குள் ஒரு மில்லியன் பதில்களைத் தரும் அளவுக்கு  திறன்மிக்கதாக உருவாக்கினார்கள்.

கூகுளில் அப்படி என்ன சிறப்பு? கூகுள் இணையதளம் மட்டும் மற்ற இணையதளங்களைப் போல அல்லாமல் சீக்கிரமாக லோடு ஆகிவிடும். காரணம், அதில் 10-15 வார்த்தைகள் மட்டுமே முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். அது லோடாக நேரம் ஆகாது. தேடும் வார்த்தைகளுக்கு அதிநவீன தேடுதல் ஃபார்முலாக் களைக் கொண்டு அதிவேக பதில்களைத் தந்தது கூகுள்.

உலகை மாற்றிய புதுமைகள்!

பின்னர் சமூக வலைதளம், வீடியோதளம் என்று அனைத்திலும் தன்னை அப்டேட் செய்துகொண்ட கூகுள் இன்றைக்கு உலகின் நம்பர் 1 இணைய தளமாக மாறியுள்ளது. உலகில் உள்ளவர்களில் 80% இணையதளப் பயன்பாட்டா ளர்கள் கூகுளில்தான் தேடுகிறார்கள். இந்த மாற்றத்தை கூகுளுக்கு முன் வந்தவர்களும், கூகுளுக்குப்பின் வந்தவர்களும் இன்றளவும் செய்ய முடிய வில்லை.
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் செய்த மாற்றம் இன்று உலகையே கூகுளில் தேட வைத்துள்ளது.