நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

நினைவில் நின்ற மெமரி கார்டுகள் !

பத்து வருடப் பயணம்...

இன்று அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. இதில் 1GB, 2GB தொடங்கி 128GB வரை மெமரி கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்த மெமரி கார்டுகள் பயன்பாட்டுக்கு வந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

அதற்குமுன்பு கம்ப்யூட்டரில் நாம் பதியும் தகவல்களை சேகரித்துவைக்க ஃப்ளாப்பி டிஸ்குகளையே  பயன்படுத் தினோம். இதன்பிறகு சிடி டிஸ்குகள் புழக்கத்துக்கு வந்து, ஃப்ளாப்பிகளை ஒரேயடியாக ஓரம்கட்டின. இந்த இரண்டு தொழில்நுட்பத்திலும் பல்வேறு வசதிக்குறைவுகள். ஃப்ளாப்பியில் பதிந்த தகவல்கள் அப்படியே எடுக்க முடியும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. சிடி தகடுகளில் லேசாக சிறு கீறல் விழுந்தாலும் போச்சு.

நினைவில் நின்ற மெமரி கார்டுகள் !

இந்த நிலையில்தான் 2004-ல் மிகச் சிறிய அளவிலான மெமரி கார்டுகள் அறிமுகமாகின. இந்த மெமரி கார்டுகள் ஆரம்பக் காலத்தில் சற்று பெரிதாகவும், பின்னர் சிறிய அளவிலும் வெளிவந்தன. முதலில் வெளிவந்த கார்டுகள், ஒருமுறை மட்டுமே தகவல்களைப் பதிந்து வைக்கும்படியாக இருந்தன. இதன்பிறகு  எத்தனைமுறை வேண்டுமானாலும் தகவல் களைப் பதிந்துவைக்கிற மாதிரியான கார்டுகள் புழக்கத்துக்கு வந்தன.  இந்த மெமரி கார்டுகள் இன்று பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல்கள் என அனைத்தையும் பதிவு செய்து வைக்கும் வகையில்  வடிவமைக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த மெமரி கார்டுகளும் முடிவை நோக்கி வேகமாகச் செல்கிறது.

அரை விரல் அளவு உள்ள இந்த மெமரி கார்டுகள் விரல் நுனியளவு உள்ள மெமரி கார்டுகளிடம் தற்போது தோல்வி கண்டுவருகிறது. இந்த விரல் நுனியளவு மெமரி கார்டிலேயே பல விஷயங்களை நம்மால் பதிவு செய்துவிட முடியும்.  எனினும், இந்த விரல் நுனியளவு மெமரி கார்டுகளும் கூட எத்தனை நாளைக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டால், இதற்கும் வேலை இல்லாமல் போய்விடும். 

ஸ்மார்ட் போனுக்குப் பிறகு, என்ன வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!