Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

கே.அபிநயா,  படங்கள்: ஏ.சிதம்பரம், ப.சரவணகுமார்

வழிகாட்டும் ஒலி!

கே.அபிநயா,  படங்கள்: ஏ.சிதம்பரம், ப.சரவணகுமார்

Published:Updated:

‘‘ஒரு பக்கம் காலேஜ்...  இன்னொரு பக்கம் பிசினஸ்!’’

‘‘நான் இன்னிக்கு இந்த பிசினஸில் வெற்றிகரமா இயங்குறதுக்கு, என் பெற்றோரும் அத்தையும்தான் காரணம்!’’ என்று நன்றி செலுத்தி ஆரம்பிக்கும் ரேவதி, சென்னை, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு ஃபேஷன் டிசைனிங் மாணவி. பார்ட் டைமாக, சாக்லேட் பிசினஸ் செய்து வருகிறார்!

‘‘என் அப்பா, ஆர்ட் துறையில் ஆர்வத்தை உருவாக்கினார். என் அத்தை சமையலில் ஆர்வத்தை உண்டாக்கினாங்க. நான்... ஆர்ட் மற்றும் சமையலை இணைத்து, விதம்விதமான வடிவம், சுவைகளில் சாக்லேட்டுகள் செய்து விற்பனை செய்யும் தொழிலை எனக்காக உருவாக்கிக்கிட்டேன். அதை ஸ்டால் போட்டு முன்னேற்றிச் செல்லும் பாதையை என் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க. அதனால, இவங்க மூணு பேருக்கும் நான் நிறைய தேங்க்ஸ் சொல்லணும்.

என் படிப்பு, அதிக அழுத்தம் இல்லாத கோர்ஸ். அதனால, கிடைக்கற ஓய்வு நேரத்தையெல்லாம் சாக்லேட் தயாரிப்பில் திருப்பினேன். அப்படி ஆரம்பிச்சது, இப்போ 25 பேருக்கு குக்கரி கிளாஸ் எடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கு. இன்னொரு பக்கம், சாக்லேட் பிசினஸும் போயிட்டு இருக்கு. இப்போ பலரும் விரும்புறது `சாக்லேட் பொக்கே’தான். அதனால, அதில் நிறைய மாடல்கள் செய்றேன். நண்பர்கள், உறவினர்கள், அப்பாவோட அலுவலக நிர்வாகம்னு எல்லாரும் ஆர்டர் கொடுத்து ஊக்குவிக்கிறாங்க. வெளி ஆர்டர்களும் தொடருது.

வழிகாட்டும் ஒலி!

ஒரு மதிய நேரம், நான் காலேஜில் இருக்கும்போது, ‘நாளைக்கு காலையில 10 சாக்லேட் பொக்கே வேணும்’னு ஆர்டர் வந்தது. பதற்றம், சந்தோஷம்னு கலவையான உணர்வோட வேலை செய்தேன். அன்னிக்கு நைட்டே ரெடி செய்து காலையில டெலிவரி கொடுத்தப்போ, அவ்ளோ திருப்தியா, பெருமையா இருந்துச்சு.

சாக்லேட் பிசினஸ் யார் வேணும்னாலும் செய்யலாம். காலேஜ் கேர்ள்ஸ், இதை பார்ட் டைமா செய்ய, நானே உதாரணம். இதில் 2,000 ரூபாய் முதலீடு போட்டா... கண்டிப்பா குறைந்தது 1,500 ரூபாய் லாபம் கிடைக்கும். உங்க கைப்பக்குவம் ருசியாவும், கிரியேட்டிவிட்டி புதுமையாவும் இருந்தா, வெற்றி நிச்சயம்! இப்போ நான் 19 வகையான சாக்லேட்டுகள் செய்றேன்'' என்று சொல்லும் ரேவதி,
``என் குறிக்கோள், பெரிய ஸ்நாக்ஸ் ஷாப் வைக்கணும்; பிராண்ட் நேம் உருவாக்கணும்!’’ என்கிறார் சின்னக் கண்களில் பெரிய கனவுகளுடன்!

சாக்லேட் பிசினஸ் பற்றின தகவல்களை ‘வழிகாட்டும் ஒலி’யில்

டிசம்பர் 16 முதல் 22 வரை பேசுகிறார் ரேவதி.

என்ற எண்ணுக்கு போன் போடுங்கள். சாக்லேட் பிசினஸில் லாபம் சம்பாதியுங்கள்.

‘‘பிளாகிங் மூலம் சம்பாதிக்கலாம்!’’

‘‘பி.டெக்., பயோடெக்னாலஜி, எம்.பி.ஏ எல்லாம் முடிச்சுட்டு, ஒரு வேலைக்குப் போனேன். ஆனா, அதில் என்னால் தொடர முடியல. காரணம், கிச்சன்லதான் எனக்கு ஆர்வம். இதையே பிசினஸா செய்யலாம்னு, இன்டர்நெட் மூலமா நான் உருவாக்கின பிளாக்ல (Blog) ரெசிபீஸ் எழுதி சம்பாதிக்க ஆரம்பிச்சேன். கூடவே, குக்கிங், பேக்கிங் பிசினஸும் பண்ணிட்டு இருக்கேன்!’’ என்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா பிரமிள். 

‘‘இதுக்காக குக்கரி கிளாஸ் எதுவும் போகல. சின்ன வயசுல இருந்தே இதுல எனக்கு ஆர்வம். ப்ளஸ் டூ படிக்கும்போதே, பிரஷர் குக்கர் கேக் செய்தேன். தவிர, டி.வி ஷோ, புத்தகங்கள்னு சமையல் தொடர்பான விஷயங்களைத் தேடித்தேடிக் கத்துக்கிட்டேன். புத்திசாலித்தனமா யோசிச்சு பிளாக் ஆரம்பிச்சு, ரெசிப்பிகளை போஸ்ட் பண்ணினேன். இப்படித்தான் என் உறவினரின் பொண்ணோட பிறந்த நாளுக்கு செய்து கொடுத்த கேக்கை, பிளாக்ல போஸ்ட் பண்ணினதோட, ஃபேஸ்புக்லயும் ஷேர் செய்தேன். நிறைய ஆர்டர்கள் கிடைச்சுது. இப்போ பிளாக் மூலமா மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.

வழிகாட்டும் ஒலி!

10 வகையான கேக்குகள் செய்து கொடுக்கிறேன். இந்த பிசினஸை பொறுத்தவரை முதலீட்டில் இருந்து மூணு மடங்கு லாபம் கிடைக்கும். முதல் கட்டமா, ‘அவன்’ மற்றும் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள் வாங்குறதுதான் பெரிய செலவா இருக்கும். இது வாழ்நாளுக்கான முதலீடு. மற்றபடி ஒவ்வொரு முறையும் கேக் செய்யும்போது, மைதா, சீனினு சில நூறு முதலீடு போட்டா போதும்.

பெண்கள் வீட்டில் இருந்தே இந்த தொழிலை ஆரம்பிச்சு, ஒரு பிளாக்கும் ஆரம்பிச்சு, சின்சியரா வேலை பார்த்தா... நல்லா சம்பாதிக்கலாம். சினிமா விமர்சனம், வீடியோனு மற்றவங்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துற விஷயங்களையும் பிளாக்ல பகிர்ந்துகிட்டே இருந்தா... அது உங்க பிளாக்கை லைவ்வா வெச்சிருக்கும். கூடவே, ஃபேஸ்புக், டிவிட்டர்னு ஷேர் செய்து, அதிகபேருக்குத் தெரியப்படுத்திட்டிருந்தா... உங்கள அடிச்சுக்கவே முடியாது’’ என்று சிரிக்கும் திவ்யா பிரமிள், ``குக்கிங், பேக்கிங் கிளாஸ் ஆரம்பிக்கணும். என் பிளாக்கை, பெரிய வெப்சைட்டா மாத்தணும். இது ரெண்டும்தான் இப்போதைக்கு என்னோட குறிக்கோள்!’’ என்று கட்டைவிரல் உயர்த்துகிறார்.

கேக் பிசினஸ் மற்றும் பிளாக் ஆரம்பிப்பது பற்றிய தகவல்களை ‘வழிகாட்டும் ஒலி’யில் டிசம்பர் 23 முதல் 29 வரை பேசுகிறார் திவ்யா பிரமிள்.

கேக் பிசினஸில் சூப்பராக சம்பாதிக்க

என்ற எண்ணைத் தொர்புகொள்ளுங்கள்.