? சில தவிர்க்க முடியாத காரணங்களினால், கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக் கடனுக்கான இஎம்ஐயைச் செலுத்தவில்லை. இதனால் என் பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடுமா? என் மீது வங்கி ஏதாவது நடவடிக்கை எடுக்குமா?

காசிநாதன், சிவகங்கை.

பி.ரவீந்திரநாத், உதவி பொது மேலாளர், வீட்டுக் கடன் பிரிவு, எஸ்பிஐ வங்கி.

'வங்கியானது ஒரு வருடத்தில் நான்குமுறை கடன்தாரர்கள் குறித்த விவரத்தை சிபில் அமைப்புக்கு தெரிவிக்கும். அதாவது, மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் தகவல்களை அளிக்கும். இதன் மூலம் எல்லா கடன் கணக்குகளின் விவரமும் (கடன்தாரர் நிலை, தாமதமாக கடனை செலுத்துபவர்கள், சரியாகச் செலுத்துபவர்கள், வாராக்கடன் பட்டியலில் இருப்பவர்கள்) சிபில் அமைப்புக்குத் தெரிந்துவிடும். அதேபோல, கடன்தாரர் குறித்த நேரத்தில் தவணையைச் செலுத்துகிறாரா, தாமதப்படுத்துகிறாரா, தவணையைக் கட்டாமல் இருக்கிறாரா என்பன போன்ற எல்லா தகவல் களும் சிபில் ரெக்கார்டில் இருக்கும். கடன் சரியான நேரத்தில் செலுத்தப்படுவது உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் சிபில் அமைப்பு, கிரெடிட் ஸ்கோர் வழங்குகிறது.

வீட்டுக் கடன் இஎம்ஐயைத் தொடர்ந்து செலுத்த வில்லை எனில், வங்கி உங்களுக்கு தொலைபேசி, மெயில், எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை அளிக்கும். அதன் பிறகும் கடனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செலுத்தவில்லை எனில், நோட்டீஸ் அனுப்பும். இஎம்ஐ செலுத்தாத மாதங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.'

? தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு செல்போன் டவர் அமைக்க காலி மனையை வாடகைக்கு விடும்போது, என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

பாஸ்கரன், தஞ்சாவூர்.

ஜீவா, வழக்கறிஞர்.

'தொலைதொடர்பு நிறுவனங்கள் செல்போன் டவர் அமைக்க குறைந்தபட்சம் 15 வருடத்துக்காவது ஒப்பந்தம் போடும். இடையில் மனை உங்களுக்குத் தேவைப்பட்டால், அதைப் பெறுவது கடினம். மேலும், ஒப்பந்தத்திலும் நிறுவனத்தின் வசதிக்கேற்ற விதிமுறைகள்தான் இருக்கும். அதாவது, வாடகை மற்றும் அட்வான்ஸ் ஆகியவற்றை உயர்த்துவதில் சிக்கல் இருக்கும். அதேபோல, வாடகைக்கு எடுக்கும் மனையில் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகமாகச் செய்திருந்தால், அந்த இடத்தை நிறுவனம் காலி செய்வதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், வாடகை எடுக்கும் இடத்தை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து மனை உரிமையாளர் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விதிமுறைகளை உங்களால் பின்பற்ற முடியுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மனையை வாடகைக்கு விடும்போது நிறுவனத்துடன் போடும் ஒப்பந்தத்தைப் பதிவு செய்வது முக்கியம்.'

? என் வயது 38. நான் 58 வயதை அடையும்போது ரூ.3 கோடி தேவைப்படும். இதற்கு நான் எஸ்ஐபி மூலம் மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் அல்லது மொத்தமாக எனில், ஒருமுறை எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்?

சி.லோகநாதன், வேலூர்.

யு.என்.சுபாஷ், நிதி ஆலோசகர்.

'உங்களின் இலக்கை அடைய இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. எனவே, டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டின் மூலமாக ஆண்டுக்கு 15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் இலக்கை அடைய ஒரேமுறை முதலீடு எனில், ரூ.18.33 லட்சம் தற்போது முதலீடு செய்ய வேண்டும். அதுவே, எஸ்ஐபி முறை எனில், மாதம் ரூ.22,600 முதலீடு செய்ய வேண்டும். வருடத்துக்கு 10% எஸ்ஐபி தொகையை அதிகரிக்க முடியும் என்றால் மாதம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம்.'

? 450 சதுர அடி மனை என விளம்பரம் செய்கிறார்கள். இந்தக் குறைந்த அளவு மனைகளை வாங்கலாமா? இதில் வீடு கட்ட அனுமதி கிடைக்குமா?

ராஜேஷ், சென்னை.

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

'450 சதுர அடி அளவு மனை, சிஎம்டிஏ அமைப்பால் அனுமதிக்கப்பட்ட லேஅவுட் (Approved Layout) எனில், வீடு கட்ட அனுமதி கிடைக்கும். இதுபோன்ற குறைந்த அளவு மனைகளுக்கான அமைப்பு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக (Economically weaker Section) ஒதுக்கப்படுகிறது. பெரிய லேஅவுட் போடும்போது இதுபோன்ற குறைந்த அளவுள்ள மனைகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. எனவே, இந்த மனைப் பிரிவுகளுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருக்காது. மற்றபடி மனைப் பிரிவுகளுக்கு அரசு அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் மனைகளில் வீடு கட்ட அனுமதி கிடைப்பது கஷ்டம்.'

? கடந்த பத்து வருடமாக கார் இன்ஷூரன்ஸ் பாலிசியில் நான் எந்த க்ளைமும் செய்யவில்லை. இப்போது அந்த காரை என் மகளின் பெயருக்கு மாற்றப்போகிறேன். இந்தச் சூழ்நிலையில் இன்ஷூரன்ஸ் மற்றும் நோ க்ளைம் போனஸ் இரண்டையும் என் மகளின் பெயருக்கு மாற்ற முடியுமா?

வெங்கடேசன், திண்டுக்கல்.

பி.மனோகரன், துணை மேலாளர், நேஷனல் இன்ஷூரன்ஸ்.

'உங்கள் மகளின் பெயரில் காரை பதிவு செய்யும் போது இன்ஷூரன்ஸை மட்டும்தான் அவருடைய பெயருக்கு மாற்ற முடியும். மேலும், இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்துக்குள் காரை மகளின் பெயருக்கு மாற்றினால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். நோ க்ளைம் போனஸை வேறு ஒருவருடைய பெயருக்கு மாற்ற முடியாது. அதனால் இன்ஷூரன்ஸை மாற்றும்போது, நோ க்ளைம் போனஸுக்காக கழிக்கப்படும் தொகையை உங்கள் மகள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், அடுத்த மூன்று வருடத்துக்குள் நீங்கள் வேறு கார் வாங்கினால், அந்தசமயத்தில் இந்த நோ க்ளைம் போனஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.'

? ஹீலியோஸ் அண்ட் மேதீசன் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (Helios and Matheson Information Technology) நிறுவனத்தில் மூன்று வருடத்துக்குமுன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியாக பணம் தருவதில்லை என்கிறார்கள். இது உண்மையா? பணத்தைத் திரும்பப் பெற என்ன வழி?

சுப்ரமணியன், சென்னை.

ராம கிருஷ்ணன் வி.நாயக், இயக்குநர், தக்ஷின் கேப்பிட்டல்.

'புதிய கம்பெனி சட்டப்படி, நிறுவனங்கள் ரேட்டிங் இல்லாத டெபாசிட் திட்டங்கள் மூலம் முதலீடு திரட்டப் படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ரேட்டிங் இல்லாத டெபாசிட்டில் செய்தால், முதலீடு குறித்த நேரத்தில் திரும்பக் கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிட்ட நிறுவனம், ரேட்டிங் இல்லாத ஃபிக்ஸட் டெபாசிட் வெளியிட்ட நிறுவனங்களின் பட்டியலில் வருகிறது. அந்த நிறுவனத்தால் டெபாசிட் தொகையை சரியான நேரத்தில் திருப்பித் தர இயலவில்லை என்பதை உறுதி செய்ய முடியவில்லை. முதிர்வடைந்த டெபாசிட் தொகையை சரியான நேரத்தில் நிறுவனம் தரவில்லையெனில், முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் பேசி நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, விரைவாக முதலீட்டுத் தொகையைத் திரும்பத் தருமாறு கேட்கலாம்.

நிறுவனத்தின் நிர்வாகிகள், முதலீட்டாளருக்கு உரிய பதில் அளிக்கவில்லையெனில், நிறுவன சட்ட குழுவிடம், முதலீடு செய்த நிறுவனம் குறித்து புகார் தெரிவிக்கலாம். சென்னையில் உள்ள சாஸ்திரி பவனில் நிறுவன சட்ட குழு அலுவலகம் (Company Law Board) செயல்படுகிறது. மேலும், கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்துக்கு புகார் தெரிவிக்கலாம். புகாரை பதிவு தபாலில் அனுப்பலாம்.

அதன் முகவரி:

முதலீட்டாளர்கள் குறைதீர்ப்புக் குழு, கம்பெனி விவகார அமைச்சகம், 5வது மாடி, ஏவிங், சாஸ்திரி பவன், புது டெல்லி -1.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044 - 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்விபதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com