Published:Updated:

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயிலிருந்து 64 ரூபாய்க்கு மேல் சென்றிருக்கிறது குறுகிய காலத்தில். கூடிய சீக்கிரம் இது 65 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாகவும் சிலர் எச்சரிக்கிறார்கள். அப்படி 65-யைத் தொட்டால், நம் நாட்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்கிறார் இந்தியா சிமென்ட்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் சிஇஓ கே.சுரேஷ். 

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?
உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

1. இறக்குமதிக் கட்டணம் அதிகரிக்கும்!

இந்தியாவின்   ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம். தொழிற்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவையாகவே உள்ளன. ரூபாய் மதிப்பு குறையும்போது அதிக விலை தந்து மூலப்பொருட்களை வாங்க வேண்டி இருக்கும். இதனால் உற்பத்தி விலை

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

அதிகரிக்கும். இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகம் செலவாகும் விஷயமாக மாறும். இந்த வகையில் உருவாகும் நஷ்டத்தைத் தவிர்க்க இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ‘ஹெட்ஜிங்’ செய்வது அவசியம். ‘ஹெட்ஜிங்’ என்பது இன்றைக்கு நாம் புக் செய்யும் விலையிலேயே பொருளை வாங்குவதற்கான வழிமுறையாகும். நாளைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்து விலை அதிகரித்தாலும் புக் செய்த விலையிலேயே அந்தப் பொருளை வாங்கலாம். இதனை இறக்குமதியாளர்கள் பயன்படுத்தும்போது ரூபாயின் சரிவால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

2. வெளிநாட்டுக் கடன் - சிக்கல்!

சில நிறுவனங்கள்  தொழில் செய்ய வெளிநாடுகளில் கடன் வாங்கி இருக்கும். இதற்கான அசல், வட்டியை, டாலரில் செலுத்தி வருவார்கள். அப்படிச் செலுத்தும்போது ரூபாயின் மதிப்புக் குறைந்தால், அதிகமான பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ரூபாயின் மதிப்பு 8% குறைந்தால், திரும்பக் கட்டவேண்டிய தொகை கணிசமாக  அதிகரிக்கும். இதனைச் சமாளிக்கவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஹெட்ஜிங் செய்வது சிறந்தது.

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

3. பயணச் செலவு அதிகரிக்கும்!

நம்மில் சிலர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி  பயணம் செல்வோம். இதற்கான பயணச் செலவுகள் ரூபாய் மதிப்புக் குறைவதால் கணிசமாக அதிகரிக்கும்.

 உதாரணமாக, இன்றைய நிலையில் வெளிநாடு செல்ல ஒரு பயணிக்கு 1,000 டாலர் செலவாகிறது எனில், இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 63,000 ரூபாய் மட்டுமே. அதேசமயம் ரூபாயின் மதிப்புக் குறைந்து 65 ரூபாயாக மாறினால், அப்போது பயணச் செலவு 65,000 ரூபாயாக அதிகரிக்கும்.

ரூபாய் மதிப்புக் குறைவ தினால், இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும். இந்தப் பயணச் செலவுகளைச் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட்டு விலை ஓரளவுக்குக் குறைவாக உள்ளபோதே டிக்கெட்டை புக் செய்வது சிறந்தது.

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

4. கல்விக் கட்டணம் மற்றும் கடன் செலுத்துவதில் சிரமம்!

வெளிநாட்டில் படிக்கும் மாணவர் களுக்கு இது பாதிப்பாக இருக்கும். ரூபாயின் மதிப்புக் குறைந்தால் படிக்கச் செலுத்தும் பணம் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி அங்குப் படிப்பதற்காகச் செலவு செய்வது, தங்கும் கட்டணம் ஆகியவையும் அதிகரிக்கும்.

இதேபோல கல்விக் கடன் வாங்கிப் படிப்பவர்களுக்கும் வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனையும் ஹெட்ஜிங் செய்ய முடியும். அப்படிச் செய்தால், நீங்கள் படிக்கச் சேரும்போது இருந்த ரூபாய் மதிப்பிலேயே பணம் செலுத்தவும், கடனைக் கட்டவும் முடியும்.

உயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்?

5. ஏற்றுமதியில் லாபம்!

மேலே கூறிய விஷயங்கள் எல்லாம் நமக்கு பாதகம் ஏற்படுத்துபவை என்றாலும், ரூபாய் மதிப்புக் குறைந்து டாலர் மதிப்பு உயர்வதால், ஏற்றுமதியாளர் களின் லாபம் அதிகரிக்கும் என்பது சாதகமான விஷயம்.  ரூபாய் மதிப்புக் குறையும் போது டாலரின் மதிப்பு அதிகரிக்கும். ஒருவர் செய்த ஏற்றுமதிக்கு 1,000 டாலர் வர வேண்டும் எனில், தற்போதைய மதிப்பு 63,000 ரூபாயாக அது இருக்கும். ஆனால், ரூபாய் மதிப்பு குறைந்து, 65-ஐ எட்டினால், நமக்குக் கிடைக்கும் தொகை 65,000 ரூபாயாக இருக்கும்.

ரூபாயின் மதிப்பு குறைவது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் தரும் விஷயமாகவே உள்ளது. இதுபோன்ற தருணங்களை ஏற்றுமதியாளர்கள் கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.’’

ச.ஸ்ரீராம்