Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

போட்டித் தேர்வுகள்... கவனிக்கவும்!

வழிகாட்டும் ஒலி!

போட்டித் தேர்வுகள்... கவனிக்கவும்!

Published:Updated:

போட்டித் தேர்வுகள் பற்றியும், அதற்குத் தயாராவதற்கான ஆலோசனைகளையும் சொல்கிறார், சென்னை, ‘இந்தியன் ஐ.ஏ.எஸ். அகாடமி’யின் இயக்குநர் சுஜாதா ரமேஷ்.

வழிகாட்டும் ஒலி!

‘‘சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும்போது, முதல் நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் சிசாட் (CSAT - Civil Services Aptitude Test)  என இரண்டு தேர்வுகள் எழுத வேண்டும். இந்த ‘சிசாட்’ தேர்வில், இந்தி தாய்மொழியாக இல்லாத மற்றும் நல்ல ஆங்கில அறிவு இல்லாத மாணவர்கள் ரொம்பவே திணறிப் போனார்கள். ஆனால், இந்த வருடம் தேர்வில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது, ‘சிசாட்’டில் 33% மதிப்பெண்கள் எடுத்தால் போதும்; 80 கேள்விகளுக்கு 27 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்தால் போதும். இது வரவேற்கத்தக்கது. ‘சிசாட்’ கேள்விகள், வங்கித் தேர்வுக் கேள்விகளைப் போல, சொல்லப்போனால் அதைவிட எளிமையாக இருக்கும். அதனால், பொது அறிவுப் பாடத்தில் முழு கவனம் செலுத்துவதுடன், முந்தைய கேள்வித்தாள்களை வைத்தும் பயிற்சி செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரியில் படிக்கும்போதே அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது, அதற்கான பயிற்சி வகுப்புகள் செல்வது என்ற டிரெண்ட் இன்று மாணவர்களிடம் ஏற்பட்டிருப்பது, ஆரோக்கியமானது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே, யு.பி.எஸ்சி. தேர்வுகள் எழுதலாம். ஏற்கெனவே யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதன்மைத் தேர்வு நடக்கவிருக்கிறது. மேலும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு நவம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கிறது.  கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலைக் கொடுப்பதைவிட, மிகச் சரியான பதிலைக் கொடுப்பதுதான் மதிப்பெண்ணை அதிகரிக்கும். படித்த விஷயத்தை நிகழ்கால நடப்புகளுடன் ஒப்பிட்டு பதில் அளிக்கும் அளவுக்குப் புரிதல் இருப்பது அவசியம்.

ஐ.பி.பி.எஸ் (IBPS- Institute of Banking Personnel Selection) வங்கித் தேர்வு, அக்டோபர் மாதம் நடக்கவிருக்கிறது. இதற்கு ஆப்டிடியூட், ரீசனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இங்கிலீஷ் காம்ப்ரஹென்ஷன், பொது அறிவு போன்றவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். வங்கித் தேர்வுகளைப் பொறுத்தவரை, வேகம் மிக முக்கியம். எளிமையான கேள்விகளைக்கூட நேரமில்லை என்று தவறவிடுபவர்கள் பலர்!’’

- என்று கூறிய சுஜாதா, எந்தெந்த தேர்வுகளுக்கு எப்படி தயாராவது, ஆங்கிலப் புலமைதான் வெற்றியை நிர்ணயிக்குமா, பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்தால்தான் தேர்ச்சி பெற முடியுமா, சுயமாக எப்படி தேர்வுகளுக்குத் தயாராகலாம் என... போட்டித் தேர்வுகள் குறித்த முழுமையான வழிகாட்டலை வழங்குகிறார்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை 044 - 66802912* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, ‘வழிகாட்டும் ஒலி’யில் சுஜாதாவின் ஆலோசனைகளைப் பெறுங்கள்!

கே.அபிநயா  படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism