Published:Updated:

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் பகுதியில் ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட் (Star Ferro and Cement Limited- NSE SYMBOL: SFCL) எனும் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம். மேகாலயா மற்றும் அஸ்ஸாமில் உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் வடகிழக்கு மாநிலங்களின் மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது.

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

சிமென்ட் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட் என்றதொரு துணை நிறுவனத்தின் கீழ் தற்சமயம் சிமென்ட் உற்பத்தியைச் செய்துவருகிறது இந்த நிறுவனம். அதேபோல், மேகாலயாவில் ஃபெரோ அலாய் உற்பத்தி செய்யும் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. மேற்கு வங்கம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் மெள்ள கால்பதித்து வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் நிறுவனம், சிமென்ட் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனத்தை துணை நிறுவனமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த துணை நிறுவனம் மெகா டெக்னிக்கல் அண்ட் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நூறு சதவிகித துணை நிறுவனமாகவும், ஸ்டார் சிமென்ட் மேகாலயா லிமிடெட் என்ற நிறுவனத்தை மேகா டெக்னிக்கல் அண்ட் இன்ஜினீயர்ஸ் லிமிடெட்டுடன் சேர்ந்தும் நிர்வகித்து வருகிறது.

சிமென்ட் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மேகாலயாவில் லும்ஷ்னாங் எனும் இடத்தில் வருடத்துக்கு சுமார் 0.8 மில்லியன் மெட்ரிக் டன் கிளிங்கர் உற்பத்தி செய்யும் வசதியையும், வருடத்துக்கு சுமார் 0.59 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கிரைண்டிங் வசதிகளையும், அஸ்ஸாமில் சோனாபூரில் வருடத்துக்கு சுமார் 1.6 மில்லியன் டன் அளவிலான கிரைண்டிங் வசதியையும், மேற்கு வங்கத்தில் வருடத்துக்கு சுமார் 0.40 மில்லியன் டன் அளவிலான கிரைண்டிங் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

அதேபோல், மேகா டெக்னிக்கல் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் கீழ் மேகாலயாவில்

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

லும்ஷ்னாங் எனும் இடத்தில் சுமார் வருடத்துக்கு 0.67 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கிரைண்டிங் வசதியையும், 9 மெகாவாட் மின்சார உற்பத்தி வசதியையும் கொண்டிருக்கிறது.

மற்றுமொரு துணை நிறுவனமான ஸ்டார் சிமென்ட் மேகாலயா லிமிடெட் நிறுவனத்தின் கீழ் வருடத்துக்கு சுமார் 1.75 மில்லியன் டன் அளவிலான கிளிங்கர் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. சிமென்ட் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் மற்றுமொரு துணை நிறுவனமான மேகாலயா பவர் லிமிடெட் எனும் நிறுவனத்தின் கீழ் சுமார் 51 மெகாவாட் மின்சார உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிளிங்கர் உற்பத்தி வசதி சுமார் 20.43 சதவிகித அளவிலும் (சிஏஜிஆர்), சிமென்ட் உற்பத்தி செய்யும் திறனும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 27.21 சத விகித அளவிலும் (சிஏஜிஆர்) வளர்ந்துள்ளது. மின் உற்பத்தித் திறன் அளவீட்டில் கடந்த மூன்று நிதியாண்டுகளை வைத்து அளவீடு செய்யும்போது சுமார் 44.84% அளவில் (சிஏஜிஆர்) வளர்ச்சி விகிதம் உள்ளது.

ஸ்டார் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதனுடைய முழுமையான பலமே சிமென்ட் உற்பத்தியில் மிக முக்கியமான சந்தைக்கும் மூலப்பொருட் களுக் கும் அருகே உற்பத்தி வசதியை கொண்டிருப்பது ஆகும். பெரும்பாலான இடங்களில் சந்தைக்கும் உற்பத்தி வசதிக்கும் இடையே அதிகபட்ச தூரமாக 350 முதல் 550 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே இருக்கிறது.

அஸ்ஸாம், மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, சிக்கிம், மிசோரம், மேற்குவங்கம், பீஹார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்வதையே திட்டமாகக் கொண்டுள்ளது ஸ்டார் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் சிமென்ட் தயாரிப்பதற்குத் தேவையான லைம்ஸ்டோன் கிடைக்கும் இடத்துக்கும் சுமார் 3 கி.மீட்டர் தூரமே சராசரியாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அதேபோல், வடகிழக்கு மாகாணம் ஆகையால் நிலக்கரி யும் அருகாமையிலேயே கிடைக் கிறது என்பது  கூடுதல் நன்மை யாகத் திகழ்கிறது. நிலக்கரி கிடைப்பது இந்த நிறுவனம் கொண்டிருக்கும் 51 மெகாவாட் மின் உற்பத்தி வசதிக்கு நல்ல தொரு பக்கபலமாய் அமைகிறது.

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

சிமென்ட் போன்ற எடை அதிகம் கொண்ட தயாரிப்பு களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மூலப்பொருட் களையும் அதனைக் கொண்டு தயாரித்த பொருட்களையும் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தூரமே செலவுகளில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த வகையில் ஸ்டார் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி வசதிகளையும் சந்தையையும் வெகு அருகே கொண்டிருப்பதால், செலவினங்களை ஓரளவு கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. அதனாலேயே லாபமும் கணிசமாக வருவதற்கு உண்டான வாய்ப்பு உருவாகிறது. 2000-த்துக்கும் மேற்பட்ட டீலர்களையும், 5,000-த்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை யாளர்களையும் கொண்டுள்ளது. இதுவரை 11 மாநிலங்களில் கால் பதித்துள்ளது இந்த நிறுவனம்.

புதிய போட்டி நிறுவனங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உருவாவதற்கான வாய்ப்புகளும் சற்றுக் குறைவுதான். நல்லதொரு பிராண்ட் மதிப்பை இந்த மாநிலங்களில் ஸ்டார் நிறுவனம் கொண்டிருப்பதும் சிறந்ததொரு வியாபாரத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே  செய்யும்.

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் சிமென்ட் விற்பனை யில் சுமார் 23 சதவிகித சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.  அதேபோல், கிழக்கு இந்தியாவில் மெள்ள மெள்ள நல்லதொரு நிலையில் கால் பதித்துவருவதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகவே கருதப்பட வேண்டும். சமீப காலத்தில் ஸ்டார் ஆண்ட்டி ரஸ்ட் சிமென்ட் என்ற (கான்கிரீட்டில் கலக்கும்போது கம்பிகளைத் துருப்பிடிக்க வைக்காத சிமென்ட்) புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

இந்தியாவின் கிழக்கு மாநிலங் களில் தனிநபர் பயன்பாட்டில் (பெர் கேப்பிட்டா கன்செம்ஷன்) சிமென்ட்டின் அளவு மிகவும் குறைவான 131 கிலோவாக இருக்கிறது. இதே இந்திய அளவில் சராசரியாக 210 கிலோ கிராம் இருக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் வட கிழக்கு மாநிலங்களுக்கான சாலை, இருப்புப் பாதை மற்றும் விமானப் போக்குவரத்துத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது சிமென்ட்டுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல், இந்த மாநிலங் களில் மின்சார உற்பத்திக்கான கட்டுமானத்துக்கான வாய்ப்பு கள் அதிகமாக இருக்கின்றன. இந்த வகையிலும் சிமென்ட்டுக் கான தேவை சற்றே அதிகமாகும் என்றே எதிர்பார்க்கலாம்.

மேலும், வடகிழக்கு மாநிலங் களில் பெரும்பாலான வீடுகள் தற்காலிக அமைப்பிலேயே இருக்கின்றன. இவற்றை நிரந்தர வீடுகளாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும்போதும் சிமென்ட்டுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமென்ட் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்று பார்த்தால், பொருளாதார முன்னேற்றம் எதிர்பார்த்த வேகத்தில் நடக்காமல் போதல், அரசியல் சார்ந்த நிகழ்வுகள், மூலப் பொருட்கள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வு போன்றவை ரிஸ்க்குகளாக விளங்குகின்றன.

பங்குச் சந்தை வியாபாரத்தில் அன்றாட எண்ணிக்கையில் கணிசமாகக் குறைந்த அளவில் வியாபாரம் நடக்கும் பங்கு என்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீட்டுக் காக இந்தப் பங்கை ட்ராக் செய்யலாம்.

ஓர் அசாதாரண விலை இறக்கம் சந்தையின் இறக்கத்தின் போது வந்தால், நீண்ட கால முதலீட்டுக்காக இந்தப் பங்கை ட்ராக் செய்யலாம்.