Published:Updated:

அள்ளித் தருமா வெள்ளி!

ஞானசேகர் தியாகராஜன், இயக்குநர், காம்டிரென்ட்ஸ் நிறுவனம்.

ங்கத்தின் விலை சரியும் போதெல்லாம் வெள்ளியின் விலையும் சரியும் என்பதுதான் பொதுவான நிலை. ஆனால், தற்போது கொஞ்சம் வித்தியாசமாக தங்கத்திலிருந்து தனியாக செயல்படத் தொடங்கி இருக்கிறது வெள்ளி. அதாவது, தங்கத்தின் விலை சரியவும், வெள்ளியின் விலை உயரவும் ஆரம்பித்துள்ளது.  இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடுதான் அதிகம். வெள்ளியை ஆபரணமாகப் பயன்படுத்துவது மிகவும் குறைவு. ஆனால், தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீண்ட காலத்தில் வெள்ளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

அள்ளித் தருமா வெள்ளி!

வெள்ளிக்கான தேவை இப்போதுதான் உலக அளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெள்ளியின் விலை சரிவு தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. 2015-ல் 15 சத விகிதமும், 2014-ல் 20 சதவிகிதமும், 2013-ல் 36 சதவிகிதமும் வெள்ளியின் விலை சரிவடைந் தது. வெள்ளியில் புதிய முதலீடு கள் இல்லாத காரணத்தினால், சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.வெள்ளி உற்பத்தியில் 70 சத விகிதம் தங்கம் மற்றும் காப்பர் எடுக்கும்போது உபப் பொருளாகக் கிடைக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெள்ளியின் விலை குறைவாக இருப்பதால், சுரங்க உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளதே விலை ஏற்றத்துக்குக் காரணமாக அமையலாம். 2015-ன் முதல் இரண்டு காலாண்டுகளில் வெள்ளியின் தேவை அதிகமாக இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வெள்ளியின் தேவை என்பது காயின் மற்றும் பாராகத்தான் உள்ளது. ஆபரணங்களின் தேவை தங்கத்தின் அளவுக்கு இல்லை. ஆனால், தொழில் துறையில் வெள்ளியின் தேவை மிக அதிகமாக உள்ளது. கடந்த வருடம் வெள்ளியின் மொத்த தேவையில் 50% தொழில் துறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அள்ளித் தருமா வெள்ளி!

புகைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சோலார் உற்பத்தியில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சோலார் உற்பத்தித் துறைக்கு மட்டும் ஆண்டில் 100 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி தேவைப்படு கிறது. இந்தத் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாவதற்கான வாய்ப்புள்ளது.

2027-க்குள் அமெரிக்காவில் அனைத்து வீடுகளையும் சோலார் வசதி கொண்ட வீடுகளாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவில் 500 மில்லியன் சோலார் பேனல்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவிலும் சோலாரின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு சோலார் பேனல் அமைப் பதற்கு 18-20 கிராம் வெள்ளி தேவைப்படும். இதன் காரணமாக 2015-ம் ஆண்டு சோலாரின் தேவை 30-40 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். மேலும், ஐரோப்பிய நாடுகளிலும் சோலாரின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது.

வளர்ந்துவரும் தொழில் நுட்பமான நானோ டெக்னாலஜியில் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெள்ளி சிறந்த பாக்டீரியா எதிர்ப்பாகச் செயல்படுவதால், மருத்துவத் துறையிலும் அதன் தேவை அதிகமாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி, தண்ணீர் சுத்திகரிப்பான் போன்றவற்றில் சில்வர் நானோ துகள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படு கிறது. இதன் காரணமாக 650 வகையான பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, நானோ டெக்னாலஜி ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வளரும்போது வெள்ளியின் தேவை இன்னும் அதிகரிக்கும்.

அள்ளித் தருமா வெள்ளி!

தற்போது வெள்ளியின் தேவை அதிகரித்துவரும் நிலை யில், அதன் உற்பத்தியானது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தங்கம் - வெள்ளி விலை விகிதங்களும் மாறி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, 14:1-ஆக இருந்த தங்கம் - வெள்ளி விகிதம், தற்போது 76:1 என்ற விகிதத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டு 66:1 என்ற விகிதத்தில் இருந்தது. சுரங்கங் களிலிருந்து ஒரு கிராம் வெள்ளி எடுப்பதற்கு 12.5 மெட்ரிக் டன் மண்ணைத் தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரு கிராம் தங்கத்துக்கு 250 மெட்ரிக் டன் மண் தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. இதன்படி தங்கம், வெள்ளி விலை விகிதம் 20:1 என்பது சரியாக இருக்கும். இந்த விகிதத்தில் விலை அமையு மானால் வெள்ளியின் விலை இன்னும் 340 சதவிகிதம் உயர வேண்டும்.

வெள்ளியின் விலை கிலோ ரூ.30,000-32,000 வரை சற்று சரிய ஆரம்பித்து, நீண்ட காலத்தில் விலை உயரவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,000- லிருந்து 50,000 வரை விலை உயர வாய்ப்புள்ளது. இது, நடுத்தரக் காலத்தில் ரூ.40,000 வரை விலை உயர வாய்ப்புண்டு. நீண்ட காலத்தில் வெள்ளியில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இதைக் கவனிக்கலாம்!

அள்ளித் தருமா வெள்ளி!

டிஸ்க்ளைமர்: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் கட்டுரை யாளரால் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டி கொடுக்கப் பட்டுள்ளது. இது வாங்குவதற் கான பரிந்துரை அல்ல. வெள்ளி வாங்கி விற்பதனால் ஏற்படும் லாபம் மற்றும் நஷ்டத்துக்கு கட்டுரையாளரும், நாணயம் விகடனும் எந்த விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்.

தொகுப்பு: இரா.ரூபாவதி,

படங்கள்:  ஜெ.விக்னேஷ்.

டீமேட் கணக்கு தொடங்கிய திருப்பதி தேவஸ்தானம்!

உலகிலேயே பெரிய பணக்காரக் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. இதுவரை பாலாஜியின் பக்தர்கள் ரொக்கமாகவும், தங்கம், வெள்ளியாகவும் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி வந்தனர். சமீப காலமாகச் சில பக்தர்கள் தாங்கள் வைத்துள்ள பங்குகளையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதுவரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திய பங்குகளின் மதிப்பே பல லட்சம் ரூபாய் வரை இருக்குமாம். எனவே, இந்தப் பங்குகளை நிர்வகிக்க ஒரு டீமேட் கணக்கு திருப்பதி தேவஸ்தானம் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த டீமேட் கணக்கு எண் 1601010000384828. உலகின் எந்த மூலையில் இருந்தும் டீமேட் கணக்கு உள்ள பக்தர்கள், இந்த டீமேட் கணக்குக்கு பங்குகளைக் காணிக்கையாகச் செலுத்தலாம். இனி, உலகம் முழுவதும் இருந்து வெங்கடாஜலபதிக்கு பங்குகள் காணிக்கையாகக் குவியும் என்று எதிர்பார்க்கலாம்.