இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யும் நிறுவனம் ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் (NSE SYMBOL: SSWL) எனும் இந்திய மற்றும் உலகளாவிய ஆட்டோமொபைல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முக்கிய உதிரிப்பாகமான சக்கரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்.

இந்த நிறுவனம் 1991-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிறுவனம் மோட்டார் வாகனங் களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்துவருகிறது. தமிழ்நாட்டில் ஓரகடம், ஜாம்ஷெட்பூர், பஞ்சாபில் டாப்பர் போன்ற இடங்களில் தொழிற்சாலையைக் கொண்டிருக்கிறது.

இதில் ஓரகடத்தில் 60 லட்சம் (கார்கள் மற்றும் மல்டி யுட்டிலிட்டி வண்டிகள்) சக்கரங்களையும், ஜாம்ஷெட்பூரில் 20 லட்சம் கனரக வாகனங்களுக்கான (ட்யூப்லெஸ் மற்றும் ட்யூபுடன் கூடிய வகையிலான) சக்கரங் களையும், டாப்பரில் 90 லட்சம் சக்கரங்களையும் (கார்கள்/மல்டி யுட்டிலிட்டி வண்டிகள்/டிராக் டர்கள்/கனரக வாகனங்களுக் கான) செய்கிற அளவுக்கான உற்பத்தித்திறனை கொண்டு ஒட்டுமொத்தமாக சுமார் 170 லட்சம் சக்கரங்களை உற்பத்தி செய்கிற திறனை

கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

மிகவும் தரம் உயர்ந்த சக்கரங்களை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால், இந்தியா மற்றும் அயல்நாட்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அதிஉயர்ந்த தரத்தில் பொருட்களை தயாரித்துத் தரமுடிகிறது இந்த நிறுவனத்தால்.

இந்திய வாகன உற்பத்தியாளர்களில் ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் களாக முன்னணி கார் உற்பத்தி யாளர்களான மாருதி சுஸூகி உள்பட பல நிறுவனங்களுக்கும், டிராக்டர் உற்பத்தியாளர்களான மஹிந்திரா, டாஃபே போன்ற நிறுவனங்களுக்கும், கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸ், டைம்லர் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கும் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது.

ஸ்டீல் சக்கர உற்பத்தியில் அதிகத் தரம் வாய்ந்த சக்கரங் களை தயாரித்து வழங்கவேண்டும் என்று உறுதிபூண்டுள்ள இந்த நிறுவனம், கடந்த 12 ஆண்டு களாகவே இந்தவகை சக்கர உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது என்றே சொல்ல லாம். இந்தவகை டெக்னாலஜி தன்னிறைவுக்கு காரணமாக இருப்பது, இந்த நிறுவனத்தின் கூட்டாளியான ரிங் டெக்ஸ் கோ லிமிடெட் எனும் ஜப்பானை சார்ந்த சுமிடொமோ மெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவிகித துணை நிறுவனமே ஆகும்.

எதிர்வரும் குறுகிய காலத்தில் ப்ளோ பார்மிங் எனும் ட்ரக்கு களில் உபயோகப்படுத்தப்படும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தும் வண்ணம் தயாரிக்கப்படும் சக்கரங்களுக்கான தொழில் நுட்பத்தை கார் மற்றும் எஸ்யூவி சக்கரங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் என்பது ஒரு தனிச்சிறப்பான விஷயமாகும்.

அவ்வப்போது தடைகள் வந்தாலுமே வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது இந்த நிறுவனம்.

2014-ம் ஆண்டு அளவீட்டில் சுமார் 19 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பைக் கொண்டுள்ளது இந்தத் துறை. மேலும், உலக நாடுகளில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங் களுக்கு பெரிய அளவில் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஸ்தலமாக திகழ்கிறது இந்தியா.

மோட்டார் வாகனங் களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் புதிய குளோபல் நிறுவனங்கள் பலவும் இந்தியா வில் காலடி பதிக்க முயன்று வருகின்றன. அதிலும் பயணி களை ஏற்றிச் செல்லும் கார்களுக் கான தேவையின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி சுமார் 66 பில்லியன் டாலர் அளவீட்டில் இருக்கும் என்கின்றன எதிர்பார்ப்புகள்.

மேலும், 2021-ல் முடியும் ஒன்ப தாண்டு காலத்தில் இந்தத் துறையின் வளர்ச்சி சுமார் 14 சதவிகித அளவில் இருக்கலாம் என்கின்றன ஆட்டோமோட்டிவ் காம்ப்போனன்ட் மேனுஃபேக் சர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் எதிர்பார்ப்புகள். கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தத் துறையில் நடந்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு சுமார் 9,300 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டுகிறது.

ரிஸ்க் ஏதும் உள்ளதா?

இந்த நிறுவனம் செயல்படும் துறையில் லாப அளவுகள் அடிக்கடி மிகவும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல், சக்கர உற்பத்தியில் பெரும்பகுதி செலவைக் கொண்டதான ஸ்டீலின் விலை அடிக்கடி மாறு தலுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதேபோல் ஃபாரெக்ஸ் சந்தையில் ஏற்படும் வாலட்டைலிட்டியும் லாபத்தை பாதிக்கும் வண்ணம் அமைந்து விடக்கூடும்.

இந்த நிறுவனம் சக்கரங்களை பெருமளவில் சப்ளை செய்யும் சில நிறுவனங்களின் மாடல்கள் விற்பனை குறையுமளவில் சந்தை சூழல் வந்தால் சக்கர விற்பனை யும் குறைய வாய்ப்புள்ளது. தவிர, மிட் கேப் பங்குகளுக்கான குணாதிசியங்கள் அனைத்தும் ஒருசேரக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

நீண்ட அனுபவத்தையும் நல்ல வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனத் தின் பங்குகளை ஒரு கடுமையான மற்றும் அசாதாராணமான இறக்கம் சந்தையில் வரும்போது, குறைந்த எண்ணிக்கையில் மத்திம கால முதலீட்டுக்காக (3-4 வருட அளவிலான) வாங்குவதற்காக ட்ராக் செய்யலாம்.

(இந்தப் பகுதி பங்கு பரிந்துரை பகுதி அல்ல. வாசகர்களின் வசதிக்காக ஒரு பங்கினைப் பற்றிப் பொதுவாகக் கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கும் பகுதியாகும். இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளரின் தனிப்பட்ட முடிவாகும்!)