Published:Updated:

வழிகாட்டும் ஒலி!

ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம்... அசத்தலா சம்பாதிக்கலாம்!

வழிகாட்டும் ஒலி!

ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம்... அசத்தலா சம்பாதிக்கலாம்!

Published:Updated:

பேரக் குழந்தைகளுக்காக வீட்டில் ஐஸ்க்ரீம் செய்யக் கற்றுக்கொண்டு, பின்னர் அதையே தன் தொழிலாக்கியிருப்பவர், சென்னையைச் சேர்ந்த ராணி. 

‘‘என் பேரக் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வாங்கிச் சாப்பிடுவாங்க. ஆனா, ‘இதுல என்னென்ன கெமிக்கல்கள், கலர்கள், பிரிசர்வேட்டிவ்கள் கலந்திருப்பாங்களோ தெரியலையே..! என்னிக்கோ ஒரு நாள்னா பரவாயில்ல... குழந்தைங்க இப்படி தொடர்ந்து சாப்பிடுறதால ஏதாச்சும் பாதிப்பு வருமோ?’னு மனசு அடிச்சிக்கும். அப்போதான், `சரி, நாமளே இனி அவங்களுக்கு வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செஞ்சு கொடுக்கலாம்'னு முடிவெடுத்து, ஐஸ்க்ரீம் செய்யக் கத்துக்கிட்டேன்.

வழிகாட்டும் ஒலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் நான் செஞ்ச ஐஸ்க்ரீம்களை நண்பர்கள், உறவினர்கள்கிட்ட கொடுத்து ‘எப்படி இருக்கு?’னு கேட்டப்போ, டேஸ்ட், கலர், வடிவம்னு அவங்க சொன்ன திருத்தங்களை எல்லாம் குறிச்சிக்கிட்டு, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரிபண்ணினேன். `வீட்டுல செய்றதால குறிப்பிட்ட ஃபிளேவர்தான் கொண்டு வர முடியும், என்னதான் இருந்தாலும் பிராண்டட் ஐஸ்கிரீம் மாதிரி வராது...' அப்படிங்கறதை எல்லாம் பொய் ஆக்குற அளவுக்கு, ஒரு கட்டத்தில், ஐஸ்க்ரீம் செய்றதில் நான் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். பாராட்டுகள் குவிஞ்சது. இப்படி குழந்தைகளுக்காக ஐஸ்க்ரீம் செய்ய ஆரம்பிச்சு, கடந்த அஞ்சு வருஷமா அதுவே என் தொழில் ஆகிருச்சு. மாசாமாசம் இதில் நல்ல வருமானமும் கிடைக்குது.
 
`ஐஸ்க்ரீம் பிசினஸுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? செய்ற ஐஸ்க்ரீம்களை எங்கே மார்க்கெட்டிங் பண்றது? ஒருவேளை உருகிட்டா, நஷ்டம் ஆகிடுமே... இதில் லாபம் எப்படி இருக்கும்?' - இப்படி இந்த பிசினஸ் சம்பந்தமா உங்ககிட்ட எக்கச்சக்க கேள்விகள் இருக்குதானே? எல்லாத்துக்கும் நான் பதில் சொல்றேன்... ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில்! ஆகஸ்ட் 25 முதல் 31 வரை 044 - 66802912* என்ற எண்ணை டயல் பண்ணுங்க!’’ என்று உற்சாகத்துடனும், அக்கறையுடனும் கூறுகிறார் ராணி.

வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்... வாழ்க்கையில் முன்னேறுங்கள்!

ந.ஆஷிகா, படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism