முதல் காலாண்டு முடிவுகள்:

வேகமான வளர்ச்சியில் தனியார் வங்கிகள்!

நிறைவு பெற்ற 2015-16-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு (ஏப்ரல் - ஜூன் ) நிதி நிலை அறிக்கைகளைப் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில், சர்வதேச அளவில் பொருளாதாரம் மேம்படாத சூழ்நிலை கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் பகுப்பாய்வு அறிக்கையின்படி, கடந்த ஜூன் காலாண்டில் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் விற்பனை 7% குறைந்துள்ள நிலையில், நிகர லாபம் 2% அதிகரித்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 30 நிறுவனங்களின் ஒட்டு மொத்த விற்பனை 5% குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த நிறுவனங்களின் நிகர லாபம் அதிகரிக்காமலே இருக்கிறது. ஆறு நிறுவனங்களின் நிகர லாபம்தான் 15 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

ஏற்றம் கண்ட நிதி நிலை!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றவற்றின் நிகர லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இவை தவிர, கிராஸிம், சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப்., ஸ்ரீசிமென்ட், கும்மின்ஸ், பிரிட்டானியா, அல்ட்ரா டெக் சிமென்ட், அசோக் லேலாண்டு, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற பங்குகள் எதிர்பாராத வகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.

இறக்கம் கண்ட நிறுவனங்கள்..!

எல் அண்ட் டி, லூபின், பாரத் ஃபோர்ஜ், செயில், ஹிண்டால்கோ, பிஹெச்இஎல், கோட்டக் மஹிந்திரா பேங்க், கோல்கேட், ஓன்ஜிசி, டைட்டன் உள்ளிட்ட நிறுவங்களின் வருமான வளர்ச்சி முதல் காலாண்டில் குறைந்துள்ளது.

துறைவாரியாக பார்க்கும்போது, விற்பனை வளர்ச்சியில் தனியார் வங்கிகள் (20%), வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் ( 20%), ஐடி (15%) உள்ளிட்ட துறைகள் முன்னணியில் உள்ளன. அதேநேரத்தில், மெட்டல்ஸ் (-8%), கேப்பிட்டல் கூட்ஸ் (-1%) துறைகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் அதிகரிப்பில் தனியார் வங்கிகள் (20%), மீடியா (14%), ஹெல்த்கேர் (12%), கன்ஸ்யூமர் (12%) துறைகள் முன்னணியில் உள்ளன. ஆனால், மெட்டல்ஸ் (-31%), கேப்பிட்டல் கூட்ஸ் (-20%), சிமென்ட் (-5%) துறைகள் பின்னடைவைச் சந்தித்து உள்ளன.

நிகர லாப வளர்ச்சியில் மீடியா (37%), டெலிகாம் (13%), கன்ஸ்யூமர் (11%), தனியார் வங்கிகள் (10%) துறை முன்னணியில் இருக்கின்றன. மெட்டல்ஸ் (-51%), சிமென்ட் (-20%), பொதுத்துறை வங்கிகள் (-19%), வாகனம் (-15%) போன்ற துறை நிறுவனங்கள் வீழ்ச்சியில் இருந்தன.

மேம்படும் தொழில் துறை..!

2015 ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 1.5% அதிகரித்துள்ள நிலையில், இந்தக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள கேப்பிட்டல் கூட்ஸ் குறியீடு 3.2% உயர்ந்துள்ளது. மேலும், எல் அண்ட் டி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஆர்டர்களும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு படிப்படியாக திட்டம் அல்லாத திட்டங்களுக்கான செலவைக் குறைத்து வருகிறது. கடந்த 2012-13, முதல் காலாண்டில் 27 சதவிகிதமாக ஆக இருந்த இந்த செலவு, முடிந்த காலாண்டில் 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால், திட்டமிட்ட திட்டங்களுக்கான செலவுகளை அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், அரசின் வரி வருமானமும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நுகர்வோர் பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்துக்குக் கீழும், மொத்த விலை குறியீடு மைனஸ் 4 சதவிகிதத்துக்கும் கீழ் இறங்கி இருக்கிறது. இது இதுவரைக்கும் இல்லாத இறக்க மாகும். இவை எல்லாம் பொருளாதாரம்

மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான அம்சங்கள்.

அந்த வகையில், இரண்டாம் காலாண்டில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் வட்டி விகிதம், குறையும் பருவ மழை போன்றவற்றை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களாக இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

சி.சரவணன்.

கலைச் சொற்கள்!

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை சரியாகப் புரிந்துகொள்ள இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம்.

புத்தக மதிப்பு! (Book Value)

ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

முக மதிப்பு! (Face Value)

ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

இ.பி.எஸ்.! (Earnings per share)

ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ். எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

செயல்பாட்டு லாப வரம்பு! (Operating Profit Margin)

நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம் செயல்பாட்டு லாபம். இந்த லாபம் விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

பி/பி.வி.! (Price to Book Value)

நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்! (Market Capitalization)

ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

பி/இ விகிதம்! (Price to Earnings Ratio)

ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.சரவணன்.