Published:Updated:

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

Published:Updated:

இனிய லாபம் தரும் இயற்கை உரம்!

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி,  மின் நகரில் மூலிகைத் தோட்டம் சூழ்ந்த தன் பசுமையான வீட்டில், பணிவாக ‘வணக்கம்!’ வைக்கிறார், பேராசிரியை, டாக்டர் விஜயலக்ஷ்மி... ‘பூஜ்யக் கழிவுத் திட்ட’த்துக்கு தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருபவர்.

‘‘பூஜ்யக் கழிவு பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். கழிவை இழிவாக எண்ணாமல், செத்தையைச் சொத்தாக மாற்றலாம் என்பதுதான் இதன் தாரக மந்திரம். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் எரி வாயு கலனிலிருந்து வெளியாகும் கழிவை வைத்து மீன் வளர்த்தோம். மீன் மற்றும் சாணக்கழிவை வைத்து மண்புழு உரம் தயாரித்தோம். உரத்தைப் பயன்படுத்தி மூலிகைச் செடி வளர்த்தோம். இதே உரத்தை உபயோகித்து காளானை மூன்று முறை வரை அறுவடை செய்யலாம். காளான் கழிவை மீண்டும் உரமாக்கலாம், இதன் மூலம் கழிவு என்பதே இல்லாமல் லாபம் ஈட்டலாம்!” என்கிறார் விஜயலக்ஷ்மி.

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

கடல்வாழ் உயிரியலில் பட்டப்படிப்பை முடித்த விஜயலக்ஷ்மி, குற்றாலம் பராசக்தி கல்லூரி விலங்கியல் துறையில் பேராசிரியையாக பணியாற்றியவர்.

‘‘இப்போது நான் சுயமாக மண்புழு உரம் தயாரித்து நெல்லை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறேன். இதுதவிர எக்ஸ்னோரா நிறுவனத்தின் உதவியுடன் இயற்கை உரத்தை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறேன். உரம் தயாரிப்பில் கிடைக்கும் லாபம் பற்றி நான் சொல்வதைக் கேட்டால், சகோதரிகள் இதில் ஆர்வம் கொள்வீர்கள்.

ஒரு டன் உரம் தயாரிக்க 1,500 ரூபாய் முதலீடு போதும். அதை 7,000 ரூபாய்க்கு விற்கலாம். சுயதொழிலாக இதைச் செய்யலாம்!’’ எனும் விஜயலக்ஷ்மி, ‘பரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மைய’த்தின் நிறுவனராக இருப்பதுடன், 10,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்குக் கழிவு மேலாண்மை பற்றிக் கற்றுக்கொடுத்து அவர்கள் சுயதொழில் செய்ய வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார். இவரின் எதிர்கால இலக்கு...

அவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’!

‘‘மண்புழு உரம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். பூஜ்ஜியக் கழிவுத் திட்டத்தை முடிந்தவரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்!’’

எந்தக் கழிவுகளை எல்லாம் உரமாக்கலாம், எப்படி உரம் தயாரிப்பது, கழிவுகளில் இருந்து வருமானம் ஈட்ட என்னென்ன வழிகள் என்பது பற்றியெல்லாம் ‘வழிகாட்டும் ஒலி’ குரல்வழியில் சொல்கிறார் விஜயலக்ஷ்மி. செப்டம்பர் 22 முதல் 28 வரை 044-66802912* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்... வளம் பெறுங்கள்.

கே.அபிநயா, ந.ஆசிபா பாத்திமா   படம்: மீ.நீவேதன்