இலக்கியத் திருவிழா பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், வணிக இலக்கியங்களுக்கென ஒரு திருவிழா சமீபத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக பெங்களூருவில் உள்ள செஞ்சுரி க்ளப்பில் நடந்தது. இந்த ஒருநாள் திருவிழாவில் தொழில், நிதி, மார்க்கெட்டிங், லீடர்ஷிப், தொழில்முனைவோர் சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் `பிங் பேப்பர்’ என அழைக்கப்படும் வணிகப் பத்திரிகையாளர்கள், மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் சேர்மன் ரகுநாதன் (சிஇஓ – ஜிஎம்ஆர் வரலட்சுமி ஃபவுண்டேஷன்) தொடக்க உரையில், ‘‘சீனாவில் வருடத்துக்கு 4,40,000 புத்தகங்களும், அமெரிக்காவில் 1 மில்லியன் புத்தகங்களும் (இதில் 75% புத்தகங்கள் புத்தக ஆசிரியர்களே பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் – அதாவது, Self-Publishing), இங்கிலாந்தில் 1,84,000 புத்தகங்களும் வெளியானது. ஆனால், இந்தியாவில் வெளியான புத்தகங்களின் எண்ணிக்கை வெறும் 90,000 மட்டுமே. அதிலும் மொழிவாரி யாகப் பார்த்தால், 25% புத்தகங்கள் ஆங்கிலத்திலும், 25% இந்தியிலும், 50% மற்ற மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. அதிலும் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் பிசினஸ் புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. தொழில் சார்ந்தோர் புத்தகம் எழுத முன்வராதது இதற்கு முக்கிய காரணம்’’ என்றார் அவர்.

அதற்கடுத்த அமர்வில் பேசிய பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ வினிதா பாலி தன்னை உத்வேகப்படுத்திய, தொழில்ரீதியில் சில கடினமான முடிவுகள் எடுக்க உதவி செய்த புத்தகங்கள் குறித்துப் பேசினார். அதில் குறிப்பிடத்தக்கவை – The Essential Peter Drucker, My Years with General Motors by Alfred Sloan, Charles Handy, Gary Hamel எழுதிய புத்தகங்கள், Human Dynamics by Sandra Seagal, David Horne (25 கலாச்சாரத்தைச் சேர்ந்த 40,000 பேர்களைச் சந்தித்து, ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம்) – என புத்தகப் பட்டியலை அடுக்கினார். ‘‘இருப்பினும் தனது படிப்பார்வத்துக்கு வித்திட்டது `தி எகானமிஸ்ட்’ இதழ்தான். இக்கட்டான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் தனக்கு `ஆலோசகராக’ இருந்து வழிநடத்த உதவியது'' எனவும் கூறினார் பாலி.

இந்தியாவில் `பிசினஸ்’ சம்பந்தப்பட்ட எழுத்துத் துறை எப்படியிருக்கிறது என்பது பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ஐஐஎம் பேராசிரியர் வைத்தியநாதன், பி.சங்கர், எழுத்தாளர் தீரஜ் சின்ஹா ஆகியோர் பேசினார்கள். இந்த அமர்வை நடத்தித் தந்த மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் ஹரீஷ் பிஜூர், `ஸ்டார்ட் அப்’ ஊரான பெங்களூருவில் இந்த விழா முதன் முறையாக நடத்தப்படுவது சாலப் பொருத்தம். 741 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெங்களூருவில் மட்டும் கிட்டத்தட்ட 5,840 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதாவது, 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சுமார் எட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்’’ என்றார்.

‘‘முன்பு இருந்ததைவிட இப்போது பிசினஸ் எழுத்துத் துறை வளர்ந்திருக்கிறது. ஆனால், குறு, சிறு, மத்திய அளவிலான நிறுவனங்கள் (கிட்டத்தட்ட 70 சதவிகித உற்பத்தி யையும், சேவையையும் நாட்டுக்கு வழங்குவது இந்த வகையைச் சார்ந்த நிறுவனங்கள்தான்) இன்னும் கண்டுகொள்ளப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களான டாடா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற குழுமங்களே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’’ என பேராசியரும், `இண்டியா அன் இங்க்’ என்கிற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியருமான வைத்தியநாதன் கூறினார். `மேக் இன் இண்டியா’ எனப் பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

இந்தத் திருவிழாவின் சுவராஸ்யமான நிகழ்வாக சிபிசென் மாத்யூ ஐ.ஆர்.எஸ் தலைமையில் ஒரு அமர்வு நடந்தது. ஊழல் பற்றிய புத்தகங்கள் எழுதிய ராபின் பானர்ஜி, தமால் பந்தோபாத்யாயா ஆகியோர் பங்கேற்றனர். ராபின் பானர்ஜி ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். அவர் இந்தியாவில் நடந்த 450 ஸ்காம்களை அலசி ஆராய்ந்து எழுதிய புத்தகம் `Who Cheats and How’.

அவரைப் பொறுத்தவரையில், ரான்பாக்ஸி நிறுவனம் சான்றிதழில் மோசடி செய்து தனது மருந்துகளைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாக அமெரிக்காவுக்கு அனுப்பி வந்ததுதான். இதனால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் மருந்து தயாரித்து ஏற்றுமதி செய்யும் அனைத்து நிறுவனங்களின் மீதும் சந்தேகம் ஏற்பட ஆரம்பித்தது.

இந்தக் குற்றத்துக்காக ரான்பாக்ஸி நிறுவனத்துக்கு சுமார் 500 மில்லியன் (அரை பில்லியன்) டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பதைச் சொன்னார்.

தமால் எழுதிய புத்தகம் சஹாரா குழும மோசடி பற்றியது. அது `சஹாரா இன்சைட் ஸ்டோரி’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவருவதற்கு முன்பு அதை வெளிவராமல் செய்வதற்கு 200 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாம்.

ஆனால், அதற்கு தமால் மசியவில்லை. அவர் மீது அவதூறு வழக்குப் போடப்பட்டு அலைக்கழித்தார்கள். அவர் எதற்கும் சளைக்கவில்லை. புத்தகமும் வெளியானது. ஆக, கார்ப்பரேட் தகிடுதத்தங்களை வெளிக் கொண்டுவர நினைக்கும் எழுத்தாளர்கள் பல சவால்களை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்பது இந்தக் கலந்துரையாடல் மூலம் தெரியவந்தது.

முத்தாய்ப்பாக, மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ பக்ஷி, பார்வையாளர்களுடன் கலந்துரையாடும்போது தனது தொழில் ரீதியான பயணத்தையும், அப்போது எதிர்கொண்ட சவால்களையும், தொழில் முனைவோர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எளிமையாக உதாரணங்கள் மூலம் சொல்லி உத்வேகத்தை ஏற்படுத்தினார்.கிட்டத்தட்ட 9 மணி நேரம் பல கலந்துரையாடல்கள் நடந்ததோடு, பிசினஸ் புத்தகம் எழுதுவது எப்படி, பிசினஸ் கட்டுரைகள் எழுதுவது எப்படி, படத்துக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என மூன்று சிறு பட்டறைகளும் நடைபெற்றன.

பொருளாதார வளர்ச்சி பற்றி பேசிவரும் இந்தக் காலகட்டத்தில் `வணிக இலக்கியமும் அது சார்ந்த சிந்தனை’யும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற வணிக இலக்கியத் திருவிழாக்கள் தமிழத்திலும் நடந்தால் தொழில்முனைவோர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்!