வுடன் ஜுவல்ஸ் பிசினஸில் அசத்திக் கொண்டிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த கௌரிப்ரியா!

‘‘பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே கிராஃப்ட்டில் ஆர்வம். குறிப்பாக, ஆபரணங்கள் அணிவதைவிட அதை உருவாக்க, மிக்ஸிங்காக மேட்ச் செய்யவெல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில் மினியேச்சர் செய்யப் பயன்படும் பாலிமர்க்ளே கொண்டு ஆர்னமென்ட்ஸ் செய்து பார்த்தேன். அடுத்ததாக, டெரக்கோட்டா ஜுவல்ஸ் முயற்சி செய்தேன். சில்க் த்ரெட் ஜுவல்ஸிலும் கவனம் செலுத்தினேன். இதில் என் விருப்பத்தைவிட, கஸ்டமர்களின் வரவேற்புக்கு ஏற்ப ஜுவல் பேட்டர்னை மாற்றிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு பெயின்ட்டிங்கில் அதிக ஆர்வம் என்பதால், டெரக்கோட்டா ஜுவல்ஸில் பெயின்ட் செய்து பார்த்தேன். அது செட் ஆகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கிளிக் ஆனதுதான், வுடன் ஜுவல்ஸ். மரக்கட்டைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் டிசைன்கள் வரைந்து, கார்பென்டர்களிடம் கொடுத்து கட் செய்து வாங்கிக்கொள்வேன். பிறகு அதில் பெயின்ட்டிங், ஸ்டோன்ஸ், ஹூக் என்று விரும்பியதைச் சேர்த்து சூப்பர் ஃபினிஷ் செய்துவிடுவேன். எல்லாமே கைவேலைப்பாடுகள்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன், ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஆரம்பித்த இந்த பிசினஸில் இன்று நிறைவான வருமானம் கிடைக்கிறது. ஸ்டாக் வைக்க முடியாத அளவுக்கு, கஸ்டமர்கள் கிடைத்திருக்கிறார்கள். சிலர், டிசைனில் இருந்து வண்ணங்கள் வரை அவர்களுக்குப் பிடித்த மாதிரி செய்து தரச் சொல்வார்கள். அதற்கு ஈடு கொடுப்பதுடன், ஃபேஷன் ட்ரெண்டிங்கின் பாய்ச்சலுடன் இணைந்து பயணிப்பதுதான் இந்தத் தொழிலில் வெற்றிக்கான வழி!’’ என்று சிரிக்கும் கௌரிப்ரியா... வுடன் ஜுவல்ஸ் பிசினஸில் தன் அனுபவங்கள், இந்தத் தொழிலை முன்னெடுக்க நினைப்பவர்களுக்கான ஆலோசனைகள், இதில் உள்ள போட்டிகள், அதைக் கடப்பதற்கான வழிகள் என விரிவாக ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் பகிர்கிறார். 044 - 66802912 *என்ற எண்ணில் நவம்பர் 17 முதல் 23 வரை அழையுங்கள்! * சாதாரண கட்டணம்

ந.ஆஷிகா படங்கள்: எம்.உசேன்