Published:Updated:

இது இளைஞர்களின் காலம்!

இது  இளைஞர்களின் காலம்!
இது இளைஞர்களின் காலம்!

சும்மா வருமா வேலை..?பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ளைஞர்கள் வேலைத் திறன்களை வளர்த்துக்கொண்டால் வெற்றித் திருமகள் வாசல் தேடி வருவாள் என்பது நூறு சதவிகிதம் நிஜம். வேலைத் திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும் nanayam.vikatan.com இணையதளத்துக்கு வாருங்கள்!

‘‘நான் விரும்பற வேலை கிடைக்கணும். அதுக்கு என்ன பண்ணனும்...?”

இப்படி கேட்கும் எல்லா இளைஞர்களுக்கும் ஒரே பதில்தான்... கிடைக்கும். ஆனா, நம் விருப்பம்

இது  இளைஞர்களின் காலம்!

சரியானதா... அதுக்கான தகுதி, திறமை நமக்கு இருக்கான்னு பார்க்கணும். நம்முடைய தகுதியைவிட அதிகமான தகுதிகளோட, எத்தனை பேர் போட்டியில இருப்பாங்கன்னு பார்க்கணும். அது உங்களை மேலும் தகுதிப்படுத்திக்கொள்ள உதவும்.

உதாரணத்துக்கு, ஓட்டுனர் பணி. பத்தாவது தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்தான். ஆனா, எத்தனை பட்டதாரிகள் போட்டிக்கு வர்றாங்கன்னு பார்க்கணும்.

கல்வியின் அடிப்படையில் பார்த்தால், அனேகமாக அத்தனை பேருக்குமே, பணிக்கான தகுதி இருக்கவே செய்கிறது. இதற்கு மேல் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் பணித் திறன்கள்தான். பணி தேடும் முயற்சியில், இதுவே முக்கிய அங்கமாகும்.

இடையறாத, நீடித்த, தொடர் அறிவு (constant, sustained up-dating of knowledge) மட்டும்தான், நல்ல வேலையைப் பெற்றுத் தரும்; பணியில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருக்கணும்; கத்துக்கிட்டே இருக்கணும். அப்பதான், ‘ஜாப் மார்க்கெட்’ல மரியாதை. இல்லைன்னா.., அவ்வளவுதான். நமக்குப் பின்னால இருக்கறவன், நம்மளை பாஸ் பண்ணிக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பான். இதுதான் யதார்த்தம்.

வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞன், இளைஞியும் நாள்தோறும் தவறாமல் செய்தே தீர வேண்டிய காரியம் - ‘knowledge up-date’. இதிலே கோட்டை விட்டு விட்டால், திண்டாட்டம்தான். யாராலும் உதவ முடியாது, நினைவிருக்கட்டும்.

பணிச் சந்தையில் சாதிக்கத் தேவையான மற்றொரு அம்சம்,  முற்றிலும் சுய மனிதனாக இருப்பது. விண்ணப்பம், ‘பயோ-டேட்டா’ தொடங்கி, உடல்மொழி,  அணியும் உடைகள் தொடங்கி அணுகுமுறை வரை அனைத்தி லும் தனித்துவத்துடன் விளங்குவது அவசியம். யாரோ எழுதிய பயோ-டேட்டாவை உங்கள் பயோ-டேட்டா என்று சொந்தம் கொண்டாடுவது அழகல்ல!

ஒரேமாதிரியாக, ‘ஸ்டீரியோ டைப்’ பதில்களும், சிந்தனைகளும், எதிர்மறைப் பலன்களையே தர வல்லன. வித்தியாசமாக, முற்றிலும் புதிய கோணத்தில், தன் சொந்த, சுய சிந்தனையில் உதித்த கருத்துக்களுடன்  வேலைக்கு முயற்சிக்கும் எவரும், வாழ்க்கையில் வெல்வது, உறுதியிலும் உறுதி.

இது  இளைஞர்களின் காலம்!

புதிய  ‘ஐடியா’வை உள்வாங்கிக் கொள்ளுங்கள்; எழுத்தில் கொண்டு வாருங்கள்; மேலும் மேலும் மெருகு ஏற்றுங்கள்; தொடர்ந்து ‘இம்ப்ருவைஸ்’ செய்த வண்ணம் இருங்கள். மன நிறைவுடன், இறுதி வடிவம் தாருங்கள். களத்தில் இறங்குங்கள்.

‘சார்...  ஒரு நல்ல கான்செப்ட் வச்சிருக்கேன். நல்லா வரும்னு நம்பிக்கை இருக்கு சார். ஒரு பத்து நிமிஷம் டைம் குடுத்தீங்கன்னா, ‘ப்ளே’ பண்ணிக் காட்டறேன்; பார்க்கறீங்களா..?’ இப்படிப்பட்ட  முயற்சிகளை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு முன்னேற்றம் நிச்சயம்.இப்படிப் பட்டவர்கள் யாரும் தோல்வியுறுவதே இல்லை.

ஆம். உலகம் இன்று, புதிய சிந்தனைகள், புதிய மாறுபட்ட முயற்சிகளை அரவணைத்து ஆதரவு தர, காத்துக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க, எல்லா நாடுகளிலும், எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை. இது, இளைஞர்களுக்கு அன்றி, யாருக்கு சாத்தியம்? அதனால்தான் சொல்கிறோம்... இது இளைஞர்களின் காலம்.

அறிவை மேம்படுத்திக் கொள்ளல், தொடர்ந்த, கடுமையான உழைப்புக்கு தன்னைத் தயார் செய்து கொள்ளல், தனது சுய சிந்தனை, முயற்சிகளுக்கு ஊறுவராமல் பார்த்துக் கொள்ளல், தளராத தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளல்... 

இவை போதும்.இமாலய வெற்றி, இன்றே நம் கண் முன்னால்...  இப்போதே நம் கைமேல்!

சும்மா வருமா வேலை தொடரை முழுமையாகப் படிக்க : http://bit.ly/1HdKRyj

அடுத்த கட்டுரைக்கு