நாணயம் விகடனும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO-Federation Of Indian Export organization) இணைந்து ‘ஏற்றம் தரும் ஏற்றுமதி’ என்ற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மீண்டும் சென்னையில் கடந்த எப்ரல் 9, 10 தேதிகளில் நடத்தியது.

இந்த பயிற்சி வகுப்பில் முதலில் பேசிய இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல உதவி இயக்குநர் திருமதி செல்வநாயகி,“ ஏற்றுமதியாளர் களுக்கு உதவி செய்வதற்கு பல புரமோஷனல் கவுன்சில்கள் இருக்கின்றன. அதில் ஃபியோவும் ஒன்று. பெரும்பாலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இதில் உறுப்பினராக இருந்தாலே போதுமானது” என்றார்.

அவரைத் தொடர்ந்து ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையான அடிப்படைகளையும் அதற்குத் தேவையான விஷயங்களை யும், சட்ட ரீதியான நடைமுறைகளை யும் வழக்கறிஞர் எஸ்.சிவராமன் பேசினார். புளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன், ஏற்றுமதி தொழிலில் உள்ள நுட்பங்கள், சவால்கள், நெளிவுசுழிவுகளை விளக்கமாக எடுத்துகூறி, பங்கேற்பாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

அவரைத் தொடர்ந்து, இறக்குமதியாளரின் நம்பகத்தன்மை மற்றும் நாம் அனுப்பும் பொருளுக்கான காப்பீடு எப்படி செய்துகொள்வது போன்றவை குறித்து இ.சி.ஜி.சி.-ன் (ECGC) ஓய்வுபெற்ற துணை பொது மேலாளர் ஆர்.சத்தியநாராயணனும் ஏற்றுமதி தொழிலில் உள்ள வணிக வரி நடைமுறைகள், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (TNVAT), மத்திய மதிப்புக் கூட்டு வரி (CST) வாங்கும் முறை குறித்தும், அதை சமர்ப்பிக்கும் முறை குறித்தும், விற்பனை வரி குறித்தும் வணிக வரித்துறை அதிகாரி(ஓய்வு) ஆர்.கதிரேசன் தெளிவுபடுத்தினார். ஏற்றுமதி தொழிலுக்கான கடன் எப்படி பெறுவது, பேமென்ட் நடைமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுபெற்ற உதவி மேலாளர் ஸ்ரீதரன் விளக்கமாக எடுத்துச்சொன்னார்.

இறுதியாகப் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பயிற்சியாளர்கள் பதிலளித்தனர்.

நீங்களும் இதில் பயிற்சி பெற முன் பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்ய: http://bit.ly/1qPSUQO

படங்கள்: தி.குமரகுருபரன்.