புத்தகத்தின் பெயர்: கர்மயோகி – எ பயோகிராஃபி ஆஃப் இ.ஸ்ரீதரன்

ஆசிரியர்: எம்.எஸ்.அசோகன்

பதிப்பாளர்:  போர்ட்ஃபோலியோ, பெங்குவின் இந்தியா

தான் செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்கிற நிலையில் அந்தக் கடமைகளை எந்தவிதக் குறைபாடும் இன்றி தர்மநெறியில் நின்று செய்பவர்களை `கர்மயோகிகள்’ என அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒருவர்தான் `மெட்ரோ மேன்’ என உலகளவில் அறியப்படுகிற இ.ஸ்ரீதரன்.

இவரது வாழ்க்கை வரலாறு முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டது. இது இப்போது ஆங்கிலத்தில் `கர்மயோகி – எ பயோகிராபி ஆஃப் இ. ஸ்ரீதரன்’ என மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. 1932-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கருக்காப்புத்தூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீதரன். சுவாரஸ்யமான இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்...

பாம்பன் பாலம் புனரமைப்பு!

1949-ம் ஆண்டு காக்கிநாடா அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, 1954-ம் ஆண்டு `இண்டியன் ரயில்வேஸ் இன்ஜினீயரிங் சர்வீஸ்-ல் சேர்ந்தார் ஸ்ரீதரன். பத்து ஆண்டுகள் கழித்து, அதாவது டிசம்பர் 23, 1964 அன்று அடித்த புயலில் ஆங்கிலேயர்களின் அற்புதம் என அறியப்பட்ட பாம்பன் பாலம் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடி என்கிற சிற்றூர் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அப்போதிருந்த அரசு இந்தப் பாலத்தை இனி புதுப்பிக்க வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம் என நினைத்தது. ஆனால், வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரம் என்பது முக்கியமான புண்ணியஸ்தலம் என்பதால், ராமேஸ்வரம் தீவை நிலப்பகுதியோடு இணைக்கக்கூடிய பாலத்தை மறுபடியும் கட்டியே தீரவேண்டும் என வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்த, ராமேஸ்வர தீவு மக்களுக்கு `விமோசனம்’ கிடைத்தது.

இந்த இயற்கைச் சீற்றம் ஏற்பட்டபோது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ஸ்ரீதரன் தனது சொந்த ஊரான கருக்காப்புத்தூருக்குச் சென்றிருந்தார். விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்பும்படி அவரை அழைத்தது ரயில்வே நிர்வாகம். புயலில் சிதைந்துபோன பாம்பன் பாலத்தை ஆறே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டிய பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பதாக கூறி அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆவணங்களை எல்லாம் அவரிடம் கொடுத்தார்கள்.

புயலில் அடித்துச் சென்ற 126 உத்தரங்களையும் மீண்டும் தயாரிக்க வேண்டும். இதற்கான வசதி/பணிமனைகள் குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்தன. ஒருநாள்கூட வீணாகக் கூடாது என்கிற நெருக்கடியில் இருந்த ஸ்ரீதரன், தனது குருவாக மதிக்கும், அப்போது தென்னக ரயில்வேயின் பொது மேலாளராக இருந்த பிரபலமான சிவில் இன்ஜினீயர் கங்குலியையும் சந்திக்கச் சென்றார். இந்த வேலையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சகம் புது உத்தரவு அனுப்பி இருப்பதாகச் சொன்னார் அவர். அங்கிருந்து நேராக பாலம் உடைந்த பகுதிக்குச் சென்று முழுவதுமாக ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு தெரிய வந்தது, இதை சரிசெய்ய ஆறுமாதம்கூட போதாது என்று!

அப்போது அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும்போது புயலில் அடித்துச் செல்லப்பட்ட உத்தரங்கள் கடலுக்கு அடியில் இருப்பதைப் பார்த்ததாக கூற, அவர் களோடு ஸ்ரீதரன் சென்றார். பெரும்பாலான உத்தரங்கள் கடலில் 40-50 அடிக்குக் கீழ் இருப்பது தெரியவந்தது. அதன்பின் அதை மீட்கும் பணியில் கேரளாவில் மலப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்களை (இவர்கள் எடை மிகுந்த பொருட்களை மீட்டு எடுப்பதில் புகழ் பெற்றவர்கள்) ஈடுபடுத்தினார்.

இரவு பகலாக உழைத்ததில், 90 நாள் வேலையை 46 நாட்களில் வெற்றிகரமாக முடித்தார். இதற்காக 1965-ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் இவருக்குக் கொடுத்த சன்மானம் ரூ.1,000. இதுதான் இவருக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்!

கொல்கத்தா மெட்ரோ!

பாம்பன் பால வேலையை முடித்த கையோடு அவர் மீண்டும் பெங்களூர் சென்றார். அந்த சமயத்தில் கொல்கத்தா மெட்ரோ திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது. 1971-ம் ஆண்டு கொல்கத்தா மெட்ரோ திட்டத்தில் ஒருவராக ஸ்ரீதரன் நியமிக்கப் பட்டார். கொல்கத்தா மெட்ரோ ஆசியாவில் ஐந்தாவது மெட்ரோ திட்டமாகும்.

1972-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு விதமான நெருக்கடிகளை (நிதி பற்றாக்குறை, நிலம் கையகப்படுத்தலில் தாமதம், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காதது, கான்ட்ராக்டர்கள் பாதியிலேயே திட்டத்தை விட்டுவிட்டு சென்றது) சந்தித்தது.

முதல் கட்டமாக 9 கி.மீட்டர் தூரம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டது. இதற்கே 11 ஆண்டுகள் ஆயின. கொல்கத்தா மெட்ரோ திட்டத்தின்படி, அனைத்துப் பிரிவுகளும் முடிவதற்கு மேலும் 11 ஆண்டுகள் ஆயிற்று. ஆக, 1972-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 1994-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த காலதாமதத்தின் விளைவு, ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிதியை விட 14 மடங்கு அதிகமாக செலவானது.

கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்துக்குப்பின், திருநெல்வேலி – நாகர்கோவில் தடம், கரூர்-திண்டுக்கல் தடம், மெட்ராஸ் – வில்லிவாக்கம் - ஆவடி தடவரிசையை மூன்று மடங்காக்கியது, போத்தனூர் – எர்ணாகுளம் தடவரிசையை இரட்டிப்பாக்கியது, சென்னை மாடி ரயில் திட்டம் வடிவமைப்பும், கட்டமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது.

கொங்கன் ரயில்வே திட்டம்!

760 கி. மீட்டர் தொலைவு, 59 நிறுத்தங்கள், 92 சுரங்கப்பாதை வழித்தடங்கள், மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, கோவா என நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரமாண்டமான திட்டம் சொல்லி வைத்தாற் போல குறிப்பிட்ட காலகட்டத் துக்குள் முடிக்கப்பட்டது. தென் மாநிலங்களை மும்பையுடன் இணைப்பதால், இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு பல வகைகளில் உதவக்கூடும் என பலகட்ட ஆய்வுகளும், நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இறுதியாக ஜார்ஜ் பெர்னான்டஸ் ரயில்வே மந்திரியாக இருந்த 1990-ம் ஆண்டு, ஸ்ரீதரன் தலைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்துவதில் ஸ்ரீதரன் தனிக் கவனம் செலுத்தினார். தகுதி, திறமை தவிர்த்து நாணயம், நேர்மை, கடமை உணர்ச்சி கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தினார். ரோஹாவில் ஆரம்பித்து கார்வாரில் உள்ள தோப்பூர் வரையிலான ரயில் தடம் இது.
மணிக்கு 160 கி.மீ வேகம் செல்லக்கூடிய ரயில் போக்குவரத்தை தாங்கக்கூடிய சக்தி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வேலை நடக்கும்போது பல தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிட்டது. அதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 14-ம் தேதி `ஷ்ரம் சக்தி’ நினைவுச் சின்னத்தில் நினைவேந்தல் நடைபெற்று வருகிறது. மே 1998-ம் ஆண்டு இந்தத் திட்டம் முழுமை அடைந்தது.

டெல்லி மெட்ரோ!

35 வருடம் ரயில்வே துறையிலும், கொங்கன் திட்டத்தில் ஏழாண்டு காலமும் உழைத்த ஸ்ரீதரன் ஓய்வு பெறலாம் என நினைத்தபோது, டெல்லி மெட்ரோ திட்டம் குறித்த அழைப்பு வந்தது. அந்தத் திட்டத்துக்கு தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராக ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டார். கடைசியாக அந்தத் திட்டத்துக்கு அவரே தலைவராக இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு எம்.ஆர்.சி.யின் தலைமை அதிகாரியாக ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா மெட்ரோ ரயில் படிப்பினைகள் இப்போது உதவியாக இருந்ததால், எந்தவிதத் தாமதமும் இன்றி, தான் தேர்ந்தெடுத்த சிறந்த பொறியியலாளர்கள், பணியாளர்களுடன் வேலையை கனகச்சிதமாக மேற்கொண்டார்.

2002-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் கட்ட வழித்தடத்தை நாட்டுக்கு அர்பணிக்கும் விழாவின் போது 10.20 மணிக்கு மின்சாரத் தடை ஏற்பட்டது ஆனால், இந்த நிகழ்ச்சிகூட தாமதம் அடையாத படிக்கு மின்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது அவரது தீர்க்க தரிசனத்தைக் காட்டுவதாக இருந்தது.

டெல்லி மெட்ரோ குறுக்கும் நெடுக்குமாக 124.63 கி.மீ தூரத்தையும், 85 நிறுத்தங் களையும் உள்ளடக்கியது. டெல்லி மெட்ரோ கட்டு மானத்தின்போது ஏற்பட்ட விபத்தில் பல தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அமைச்சகம் அதை ஏற்கவில்லை.

இன்றைக்கு தனது 83-வது வயதிலும் கொச்சி மெட்ரோ திட்டத்துக்கு ஆலோசகராக இருந்து செயல்பட்டு வருகிறார். தன் சொந்த வாழ்விலும், தொழிலிலும் கீதோபதேசத்தை கடைப்பிடித்து வரும் இவர், தான் மேற்கொண்ட ஒவ்வொரு திட்டத்திலும் எதிர்கொண்ட சவால்கள் சொல்லி மாளாதாவை.

ஆனால், தனது வெளிப்படையான பேச்சாலும், நேர்மையாலும், கடமை உணர்ச்சியாலும், தீர்க்கதரிசனத்தாலும், எளிமையாலும் அவையனைத்திலிருந்தும் மீண்டு அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர் இந்த கர்மயோகி.

இவர் டெல்லி மெட்ரோவின் தலைமைப் பொறுப்பிலிருந்த காலத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளமாகப் பெற்றுக் கொள்ளவில்லை. அதுபோல, விருதுகளின் மூலம் கிடைத்த பரிசு பணம் அனைத்தையும் தனது அம்மா பெயரில் நடத்தும் டிரஸ்ட்டுக்கு கொடுத்துவிடுவார். அதைக்கொண்டு பல சமூக நிலத் திட்டங்களை அவரது கிராமத்தில் அந்த டிரஸ்ட் மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்கு நன்மை அளிக்கும் அரசாங்கத் திட்டங்களை சிறப்பாக செய்து தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த ஸ்ரீதரனின் இந்த வாழ்க்கை வரலாற்று புத்தகம் நம் எல்லோருக்கும் உற்சாக டானிக் என்றே சொல்லலாம். இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நிச்சயம் உணர முடியும்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

ஸ்ரீதரின் வெற்றிக்கான `மேஜிக்’ மந்திரங்கள்!

‘‘தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நேர்மையாக இருந்தால் யாரையும் சமாதானப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் ஏற்படாது. உங்கள் பணியை செய்யும்போது நீங்கள் எடுத்த முடிவிலும், ஏன் அந்தமாதிரியான முடிவை எடுத்தீர்கள் என்பதிலும் உறுதியாக இருங்கள். உங்கள் தொழில் சார்ந்த திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் வெகு விரைவில் காணாமல் போய்விடுவீர்கள். எந்தவொரு கீழான நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டாலும் நாணயமாக இருக்கும்பட்சத்தில் அது உங்களைக் கைவிடாது தூக்கி நிறுத்தும்.நேர்மையாகவும், தார்மீகத்துடனும் இருங்கள். மனதையும், உடலையும் புத்துணர்வாக வைத் திருக்கக்கூடிய பழக்கங்களைக் கடைப்பிடியுங்கள்.’’

இவ்வளவு சாதனைகள் புரிந்திருக்கும் இவர் தனது ஐம்பதாண்டு கால பணியில் ஒரு நாள்கூட குறிப்பிடப்பட்ட அலுவலக நேரமான எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்தது கிடையாது என்பது பலருக்கும் தெரிந்திராத ஆச்சரியமான விஷயமாகும். இவரைப் போல அரசுத் துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.