Published:Updated:

ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்... நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்...  நாள் ஒன்றுக்கு  மூவாயிரம் லாபம்!
ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்... நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லாபம்!

ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்... நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லாபம்!

பிரீமியம் ஸ்டோரி

`படிச்சுட்டு வேலைக்குப் போகாம சும்மாதானே இருக்கேனு யாராச்சும் சொன்னா செம கோபம் வரும்தானே! வீட்ல இருந்தா என்ன? இப்ப ஒரு நாளைக்கு என் கையில 3,000 ரூபாய் வருதுல்ல!’’ என நம் வாயைப் பிளக்கச் செய்கிறார் காயத்ரி நந்தகுமார். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் படித்து முடித்த 23 வயது பட்டதாரி.

`இன்ஜினீயரிங் படிச்சவங்க எல்லாம் கியூல வாங்க’ எனச் சொல்லி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கையை விரிக்கும் இந்தக் காலத்தில், வேலை கிடைத்தவர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் இந்த காயத்ரி, ஆன்லைன் ரீடெய்ல் ஷாப்பிங், கேட்டரிங், டிசைனிங்னு பல துறைகள்ல ஜெயிச்சுட்டு இருக்குற பிஸி பெர்சனாலிட்டி. தான் கலக்கிட்டு இருக்குற இந்த மூன்று துறைகளைப் பற்றியும் காயத்ரி என்ன சொல்றாங்கன்னு பாப்போமா..?

ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்...  நாள் ஒன்றுக்கு  மூவாயிரம் லாபம்!

`சென்னை 1823’

``என்னோட ஆன்லைன் ரீடெயில் ஷாப்பிங் நிறுவனத்தோட பெயர் `சென்னை 1823’. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதிரியான இது, சிறிய அளவுல இயங்கிட்டு இருக்கிற ஆன்லைன் ஷாப்பிங் பக்கம். புடவைகள், நவீன ஆடைகள், டிசைனர் நகைகள்னு பெண்கள் சம்பந்தப்பட்டப் பொருட்களை பிரத்யேகமாக ராஜஸ்தானிலிருந்து வரவழைச்சு விற்கிறேன். இது ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களை அடையாளப்படுத்துறதும் அதை சரியான நேரத்தில் கொண்டு போய் சேக்குறதும்தான் இந்தத் தொழிலுக்கு ரொம்ப முக்கியம். இதுக்காக பெருசா மெனக்கெடத் தேவை இல்ல. என்னோட பிசினஸ் தொடர்பான மொத்த தகவல்களையும் என் ஃபேஸ்புக் பக்கத்துலயே விளம்பரப்படுத்திடுவேன். பொருட்களை வாங்கி விக்குறது, டெலிவரி செலவு எல்லாம் போக ஆர்டரைப் பொறுத்து ஒரு நாளுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

என்கே’ஸ்!

என்கே’ஸ் (ENKAY’S) என்பது எனது கேட்டரிங் நிறுவனம். சின்ன வயசுல இருந்தே ஏதாச்சும் வெளியில சாப்பிட்டா உடனே அதை வீட்டுக்கு வந்து செஞ்சுப் பாத்துடுவேன். அந்த ஆர்வம்தான் கேட்டரிங்ல என்னை ஈடுபடுத்தியிருக்கு. ஆன்லைன் ஷாப்பிங் தொடங்கிய மூணு மாசங்கள்லயே நல்ல லாபம். அதுல ஒரு பங்கை எடுத்து கேட்டரிங்ல முதலீடு செஞ்சேன். பெரும்பாலும் சவுத் இந்தியன் கேட்டரிங், செட்டிநாடு போன்றவைதான் வீட்டிலிருந்து ஆர்டர் எடுத்து செய்வாங்க. ஆனா, நான் கான்டினென்டல் ரெசிப்பி செய்ய முடிவு பண்ணேன்.  கீ சிக்கன், பிஷ் பிங்கர் ஃப்ரைஸ், வெஜ் சமோசா... இதெல்லாம் என்னோட ஃபாஸ்ட் சேல் ரெசிப்பிகள்.

ஆபீஸ் கருத்தரங்குகள், பர்த்டே, வெடிங் டே, பார்ட்டி கள்னு ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும். 24 மணி நேரத்துக்குள்ள செய்து தரும்படியான ஆர்டர் வந்தால் அதை எடுத்துக்கவே மாட்டேன். நமக்கு தொழில் சுத்தம் ரொம்ப முக்கியம். அதே போல காலத்துக்கு ஏற்ப என்னோட குக்கிங் ஸ்டைலும்  மாறும்! இந்த வெயில் காலத்துக்காக ரஸ்னா போலவே புதினா – எலுமிச்சை கொண்டு ஒரு பவுடர் செஞ்சிருக்கேன். பிரிசர்வேட்டிவ் கிடையாது. ஒரு வாரம் வரைக்கும் வெச்சுக்கலாம். இதுக்கு கஸ்டமர்ஸ்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. இந்த கேட்டரிங் எனக்கு ஆர்டரைப் பொறுத்து மாசத் துக்கு  6,000 முதல் 7,000 வரைக்கும் லாபம் கொடுக்கும்.

ஜீரோ பட்ஜெட் ப்ராஜெக்ட்...  நாள் ஒன்றுக்கு  மூவாயிரம் லாபம்!

டிசைனிங்

ஆரம்பத்துல சாதாரண புடவைகளை டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். நண்பர்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்கவே, சுடிதார், பட்டுப் புடவைகளுக்கும் டிசைன் செய்யறேன். இப்போ கனடாவுல இருந்து மொத்தமா ஆர்டர் வந்திருக்கு. டிசைனிங்குக்கு தேவையான கற்கள், பொருள்கள் எல்லாம் நானே பாரிஸ் கார்னர் போய் செலக்ட் செஞ்சு வாங்கறேன். இது நிறைய நேரம் எடுக்கற தொழில். ஆனாலும் ஆர்வம் இருக்குறதால மத்த பிசினஸ்கூட இதையும் சேர்த்து என்னால சமாளிக்க முடியுது. இந்த பிசினஸ்லயும் நம்ம நேரம், ஆர்டரைப் பொறுத்து சம்பாதிக்க வழி இருக்கு. அதனால, ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தா போதும்... எத்தனை பிசினஸ் வேணும்னாலும் பண்ணலாம்.''

-  தா.நந்திதா, படங்கள்: க.சர்வின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு