Published:Updated:

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

கவர் ஸ்டோரி

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

கவர் ஸ்டோரி

Published:Updated:
காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

இதோ... ஓரிரு நாட்களில் தீபாவளி! நிறைய பேர்கள் தங்களது குடும்பத்தினருக்குப் புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பதோடு தீபாவளிப் பரிசாக ஏதாவது பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி ஏதோ ஒரு பொருளை பரிசாக வழங்குவதைவிட, ஒரு மாறுதலுக்கு இம்முறை ஒரு முதலீட்டையோ அல்லது முதலீட்டு வழியையோ பரிசாகக் கொடுத்துப் பாருங்களேன்... எதிர்காலத்தை மனதில் வைத்து அளிக்கும் அந்தப் பரிசுகள் நிச்சயமாக காலத்துக்கும் கை கொடுக்கும். யாருக்கு என்ன மாதிரியான ஃபைனான்ஷியல் கிஃப்டுகள் கொடுக்கலாம்? இதோ சில சிபாரிசுகள்...

மனைவிக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

''வழக்கமாகத் தங்கத்தை நகைகளாக எடுத்துக் கொடுத்து போரடித்துப் போனவர்கள், இம்முறை கோல்டு இ.டி.எஃப்-ல் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வகையில் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். முதலில் மனைவி பெயரில் ஒரு டீமேட்  கணக்குத் துவங்கி, ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் கோல்டு இ.டி.எஃப்-ல் ஒரு தொகையைச் செலுத்திக் கொடுத்து, அதை மாதாமாதம் தொடரச் செய்யலாம்!

கணவனுக்கு...

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

பெண்கள் எப்படி தங்கத்தையும் பட்டுப் புடவைகளையும் விரும்பு கிறார்களோ அதேபோல் ஆண்கள் தீபாவளி சமயத்தில் டி.வி. வாங்கலாமா, லேப்டாப் வாங்கலாமா, செல்போன் மாதிரியான பொருட்களை வாங்கலாமான்னு யோசிப் பாங்க. மனைவியும் கணவரை மகிழ்ச்சியடையச் செய்ய தங்கள் செலவுகளைக்கூட குறைத்துக்கொண்டு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இதற்குப் பதிலாக இம்முறை ஷேர்களை வாங்கிக் கொடுக்கலாம். அதிலும், அதிர்ஷ்டவசமாக இந்த தீபாவளியையட்டி பங்குகள் எல்லாம் குறைந்த விலையிலேயே வர்த்தகம் ஆகிறது. அதனால், இந்த சூழ்நிலையைப் பயன் படுத்தி நல்ல கம்பெனி ஷேர்களாக வாங்கிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அறுவடை செய்யலாம். தீபாவளியன்று முகூர்த் டிரேடிங் என்ற பெயரில் ஸ்பெஷலாக சுமார் ஒரு மணி நேரம் சந்தையில் வியாபாரம் நடக்கும். அந்த நல்ல முகூர்த்தத்தைக்கூட உங்கள் அன்பைச் சொல்லும் சந்தர்ப்ப மாக்கிக் கொள்ளலாமே!

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!


பெற்றோர்களுக்கு...

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

 இந்த தீபாவளிக்கு அம்மாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை, அவங்களுக்குப் பிடித்த கலர்ல எடுத்துக் கொடுக்கணும் என்று சிலபேர் நினைத்துக் கொண்டிருப் பார்கள். இதேமாதிரி போன தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த பட்டுப் புடவையோட நிலை என்ன ஆச்சுன்னு கொஞ்சம் யோசித்துப்  பார்க்கணும். நாம பரிசா கொடுக்கிற பொருட்களைப் பயன் படுத்தாமல் பெட்டியில் வைத்துக்கொண்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

பரிசு குடுக்கறவங்களுக்கு அந்த பரிசு கடைசி வரைக்கும் பயனுள்ளதா இருக்கணும்ங்கறது தான் முக்கியம். அன்புக்காகவும், பாசத் துக்காகவும் ஏங்குகிற வயதில் இருக்கும் பெற்றவர் களுக்கு கண்டிப்பாக காசு பணம் முக்கியமாக இருக்காது. இருந்தாலும், அவர்களோட எதிர்காலத் தேவைக்காக இந்த தீபாவளியில் இருந்து ஏதாவது ஒரு வங்கியில் மூத்த குடிமக்களுக்கான கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகையை அதில் முதலீடு செய்து அதிலிருந்து ஒரு வருமானம் அவர்களுக்கு கிடைக்கும்படிச் செய்யலாம். ஹெல்த் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் இல்லாத வர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுக்கலாம். இது அவர்களது வாழ்நாள் முழுக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!


குழந்தைகளுக்கு...

##~##
தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு பட்டாசுதான் சரியான பரிசாக இருக்கும் என்பதுதான் பெரும் பாலானவர்களின் எண்ணம். அது ஒன்றும் பெரிய தவறும் கிடையாது. கொண்டாட்டங்கள் இல்லாத பண்டிகைகள் போர்தான்! இருந்தாலும் பட்டாசில் கொண்டுபோய் ஆயிரக்கணக்கான ரூபாயைப் போட்டு கரியாக்குவதைவிட, கொஞ்சம் பணத்துக்கு பட்டாசு வாங்கிக் கொண்டு, மீதத்தை நல்ல ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குழந்தையின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வருடா வருடம் இப்படி கொடுப்பது அவர்களோட எதிர்காலத்துக்கான பயனுள்ள பரிசாக இருக்கும்.

 இந்த தீபாவளிக்கு அழிந்தும் கிழிந்தும் போகக்கூடிய பரிசுகளைத் தவிர்த்துவிட்டு, வாழ்நாளுக் குப் பயன்படுற மாதிரியான ஃபைனான்ஷியல் பரிசுகளை கொடுப்பதே நல்லது!

காலத்துக்கும் கை கொடுக்கும்.. தீபாவளி பரிசு!

 -செ.கார்த்திகேயன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism