Published:Updated:

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

Published:Updated:
சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

மிக சாதாரண உடையோடு முல்லா ஓர் ஓட்டலுக்குள் நுழைந்தார். அந்த ஓட்டலில் இருந்த சர்வர் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஏனோதானோ என்றுதான் அவரைக் கவனித்தார். இதையெல்லாம் கவனித்த முல்லா, சாப்பிட்ட பிறகு அந்த சர்வருக்கு மிகவும் வெயிட்டாக டிப்ஸ் தந்தார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த ஒட்டலுக்குப் போனார் முல்லா.

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த முறை அதே சர்வரிடமிருந்து தடபுடலான கவனிப்பு! சாப்பிட்டு முடித்த பிறகு இந்த முறையும் வெயிட்டாக டிப்ஸ் தருவார் என சர்வர் எதிர்பார்த்தார். ஆனால், முல்லா டிப்ஸ் எதுவும் தராததைப் பார்த்து, அவரிடமே கேட்டார். முல்லா என்ன சொன்னார் தெரியுமா? ''நீங்கள் இப்போது செய்த சேவைக்கு கடந்த முறையே தந்துவிட்டேனே!''  

இந்த கதையில் வரும் சர்வரின் நிலைமைக்கும் ரிலையன்ஸில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நிலைமைக்கும் பெரிய வித்தியாசமில்லை. காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்த மறுநாள் அந்த பங்கின் விலை ஏகத்திற்கும் உயரும் என்று எதிர்பார்த்தால் விலை தாறுமாறாக குறைந்துவிடும். ஏனடா குறைகிறது என்று பார்த்தால், காலாண்டு முடிவு வருவதற்கு முன்புதான் நல்ல ஏற்றம் கண்டிருக்கும். இந்த முறையும் ரிலையன்ஸ் பங்கில் இதுதான் நடந்திருக்கிறது.

முந்தைய காலாண்டைவிட லாபம் தந்தபிறகும் ஏன் இந்த பங்கின் விலை சரிகிறது? ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு என்னதான் பிரச்னை என்று மும்பையில் இருக்கும் சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சொக்கலிங்கத்திடம் பேசினோம். முழுமையாக எடுத்துச் சொன்னார் அவர்.  

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

''ஏற்கெனவே ரிலையன்ஸ் பங்கு கடுமையாகச் சரிந்திருக்கிறது. இனிமேலும் சரிவதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாப் பொருளுக்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையில் இந்த பங்கு தற்போது இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த பங்கு பெரிய அளவில் உயரவில்லை, இனியும் ஏறப் போவதில்லை என்று நினைக்கலாம். ஆனால், இந்த பங்கு நமக்கு வெல்த் கிரியேஷனை கொடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை'' என்றவர், அதற்கான காரணங்களை அடுக்க ஆரம்பித்தார்.

சர்ச்சை ரிலையன்ஸ்: முல்லாவாக இருங்கள்!

''முதலாவது காரணம், இந்த நிறுவனத்திடம் இருக்கும் உபரி பணம். தற்போதைய நிலையில் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கையிருப்பு இருக்கிறது. இந்த பணம் விரைவில் ஒரு லட்சம் கோடியாக உயர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. சிலர் இவ்வளவு பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கிறார்களே என்று நெகட்டிவ்வாக பார்க்கிற வர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், ரிலையன்ஸ் போன்ற நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கெல்லாம் பிஸினஸை ஆரம்பிக்க முடியாது. அப்படிச் செய்தால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகப் போய்விடும். ரீடெய்ல் மற்றும் பெட்ரோல் பங்க் போன்ற பிஸினஸ்களில் ஈடுபட்டார்கள். அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பிஸினஸ்கள் சிறப்பாக நடைபெற்றிருந்தால், உபரி பணத்தை முதலீடு செய்து இன்னும் பெருக்கி இருக்க முடியும். எனது கணிப்பின்படி, கூடிய விரைவில் அவர்கள் புதிதாக ஒரு பெரிய பிஸினஸில் தடம் பதிக்கப் போகிறார்கள். அது உரம் சம்பந்தப்பட்ட துறையாக இருக்கலாம்.

##~##
இரண்டாவது, எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த நிறுவனத் திடம் அதிகமாக இருக்கிறது. உலகப் பொருளாதாரமே எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்துதான் இருக்கிறது. இதனிடம் பணமும் சேரும் போது இந்த நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வருகிற 2014-ம் ஆண்டு எரிவாயுக்கு கொடுக்கும் விலையை மத்திய அரசு மாற்றி அமைக்கும். அதன் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபம் உயர வாய்ப்பிருக்கிறது.

இந்த பங்கின் தற்போதைய விலை குறைவுக்கு காரணமே எரிவாயு உற்பத்தி குறைவது தான். தற்போதைய நிலையில் 23 கிணறுகள் இருக்கின்றன. இதில் 2 கிணறுகளில் உற்பத்தி தொடங்கவே இல்லை. மீதமிருக்கிற 21 கிணறுகளிலும் உற்பத்தி குறைவாக இருக்கிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியத் துடன் ஒப்பந்தம் போட்டி ருப்பதால் விரைவில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. (இதுவரை 7.2 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள்.) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மூன்று வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்பவர்கள் இந்த விலை சரிவை பயன் படுத்தி இந்த பங்கை தாராளமாக வாங்கலாம்'' என்றார்.

முல்லா தரும் டிப்ஸை ரிலையன்ஸ் எப்போது தந்தால் என்ன, நமக்கு தேவை நல்ல லாபம் தானே!

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism