குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், ‘குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஆபத்தானவை’ என்றார் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் (முதலீட்டாளர் கல்வி) எஸ்.குருராஜ். நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ஈரோட்டில் நடத்திய விழிப்பு உணர்வு கூட்டத்தில் பேசிய அவர், ‘‘10,000 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த ஆறு மாதத்தில் 20,000 ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்தால் அதோ கதிதான்’’ என்றார்.

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசும்போது, உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படும் கூட்டு வளர்ச்சியின் சக்தி (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) எப்படி செயல்படுகிறது. முதலீடு செய்த பணம் எப்படி பன்மடங்கு பல்கி பெருகிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘நடுத்தர மக்கள் நீண்ட காலமாக நடுத்தர மக்களாக இருக்கக் காரணம், அவர்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க தயக்கம் காட்டுவதுதான். உலகம் முழுக்க வெற்றிகரமான முதலீட்டாளர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்துதான் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்” என்றவர், அந்த ரிஸ்க்கைத் தவிர்க்க, முதலீட்டை எப்படி போர்ட்ஃபோலியோ அமைத்து மேற்கொள்ளவேண்டும் என்பதை உதாரணங்களுடன் விளக்கிச் சொன்னார்.

இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். ‘‘எப்போது லாபத்தை வெளியே (பிராஃபிட் புக்கிங்) எடுக்கவேண்டும்?’’ என ஒரு முதலீட்டாளர் கேட்க, ‘‘உங்கள் முதலீடு லாபகரமாக இருந்து, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருந்தால், அதனை பேலன்ஸ்ட் ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். உடனடியாக பணம் தேவை இல்லை எனில், ஈக்விட்டி முதலீட்டிலேயே வைத்திருந்து நல்ல லாபம் பார்க்கலாம்’’ என பதில் சொன்னார்கள் நிபுணர்கள்.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி