?‘பில் இல்லாமல் பொருள் வாங்கினால் டாக்ஸ் கட்டத் தேவையில்லை. பொருளின் விலையில் 5,000

ரூபாய் குறைத்துத் தருகிறோம்’ என்று சொன்னதால் நம்பி, ஏ/சி ஒன்று வாங்கிவிட்டேன். ஆனால், ஏற்கெனவே பழுதான பொருளை தலையில் கட்டிவிட்டார்கள். நான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீட்டைப் பெற முடியுமா?

@ சங்கர், வேலூர்.
த.ஜீவா, வழக்கறிஞர்.

“வழக்குப் பதிவு செய்ய பில் கட்டாயம் தேவை. பில் இல்லாமல் உங்கள் கூற்றை நிரூபிக்க முடியாது. உங்கள் மீது கூட தவறு உள்ளது. வரி ஏய்ப்பு செய்ய பில் இல்லாமல் ஏ/சி வாங்கியுள்ளீர்கள்; இது எப்படி சரியாக இருக்கும்? பரிவர்த்தனையின் போது முதலில் நாம் சரியாக இருக்கவேண்டும். உங்களிடம் அந்தக் கடையில் ஏ/சி வாங்கியதற்கு ஏதாவது ஓர் ஆதாரம் இருந்தால் மட்டுமே சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறமுடியும்.”

?ஒரு எண்டோவ்மென்ட் பாலிசியில் நான்கு வருடம் தொடர்ந்து பிரிமீயம் செலுத்தி வந்தேன். பிறகு கடந்த ஐந்து வருடங்களாக பிரீமியம் செலுத்த இயலாமல் விட்டுவிட்டேன். அந்த பாலிசியை என்ன செய்வது?

@ சின்னமணி, அரவக்குறிச்சி.
வி.கிருஷ்ணதாசன், நிதி ஆலோசகர்.

“ஆயுள் காப்பீட்டு விதிகளின்படி, ஒற்றை பிரீமியம் கட்டும் பாலிசி (single premium policy) தவிர, பிற பாலிசிகளில் குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்காவது தொடர்ந்து பிரீமியம் செலுத்த வேண்டும். ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிரீமியம் செலுத்தினால் குறைவான தொகையே சரண்டர் வேல்யுவாக (surrender value) கிடைக்கும். நீங்கள் நான்கு வருடம் மட்டுமே பிரீமியம் செலுத்தியிருப்பதால், கட்டிய பிரீமியத்தின் 50% மட்டுமே சரண்டர் வேல்யூவாக கிடைக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பிரீமியம் கட்டத் தவறிய காலத்திலிருந்து ஐந்து வருடம் வரை பாலிசியை புதுப்பித்துக்கொள்ள அவகாசம் அளிக்கின்றன. இந்த இடைவெளி ஐந்து வருடத்துக்கு மிகுதியாக இருந்தால், நிறுவனங்கள் பெரும்பாலும் புதுப்பிக்க அனுமதிப்பதில்லை. சில நிறுவனங்கள் அரிதாக சிறப்பு சலுகை முறையில், சில சமயங்களில் ஐந்து வருடத்துக்கு மிகுதியான காலம் பிரீமியம் செலுத்தத் தவறினாலும் புதுப்பிக்க அனுமதிக்கலாம்.

நீங்கள் வைத்திருக்கும் பாலிசி எது எனக் குறிப்பிடாததால், இது நல்ல பலன் அளிக்கக்கூடிய பாலிசியாக இருப்பின், காப்பீட்டு நிறுவனத்தை அணுகிப் புதுப்பிக்க முயற்சிக்கலாம். ஐந்து வருடத்துக்கு மிகுதியான இடைவெளி இருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்தால் புதுப்பிக்க இயலாமல் போனால், பாலிசியை சரண்டர் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.”

?நான் அப்ரூவல் மனையில் வீடு கட்டி மூன்று வருடங்களாக குடியிருந்து வருகிறேன். ஆனால், இதுவரை வீட்டு வரிக் கட்டவில்லை. நகராட்சியும் நோட்டீஸ் அனுப்பவில்லை. நான் கண்டிப்பாக வீட்டு வரி

செலுத்த வேண்டுமா?

@ வேலுச்சாமி, செங்கல்பட்டு
மணி சங்கர், தலைவர், பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்

“வீடு கட்டிய ஆறு மாத காலத்துக்குள் வீட்டு வரி கட்டாயம் செலுத்தவேண்டும் என்பது சட்டம். மூன்று வருடங்கள் ஆகியும் வரியை கட்டவில்லை என்று சொல்லுவதே தவறு. நீங்கள் செங்கல்பட்டில் இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம், “கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த ஊரில், இந்த தெருவில் நான் வீடு கட்டி வசித்து வருகிறேன். இன்னும் என்னிடம் வீட்டு வரி வசூலிக்கப்படவில்லை. வீட்டு வரி செலுத்தத் தயாராக இருக்கிறேன். யாராவது வந்து வசூலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு ஏதாவது அபராதம் இருந்தாலும் அதை செலுத்தத் தயாராக இருக்கிறேன்” என்று கடிதம் மூலம் எழுதி அனுப்பி முறையிடலாம். அதே சமயம், வரி வசூலிப்பவர்கள் குறைவாக இருந்தால், நீங்கள்தான் நேரில் சென்று வரியை செலுத்தவேண்டும்.”

?என் வயது 55. ஓரளவு ரிஸ்க் எடுக்கத் தயார். அடுத்த 15 வருடங்களுக்கு முதலீடு செய்துவிட்டு காத்திருக்க முடியும். ஈக்விட்டி ஃபண்டுகளில் 20 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்குமா?

@ கருணாகரன், சேலம்.

ச.இராமலிங்கம், நிதி ஆலோசகர்.

‘‘55 வயதுள்ள நீங்கள் எஸ்ஐபி மூலம் அதுவும் நீண்ட கால (15 வருடங்கள்) அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்கது. மோட்டார் சைக்கிள் ரேஸ் பந்தயத்துக்குத் தயாராகும் வீரர் முதலில் சைக்கிள், பிறகு 100சிசி பைக், பிறகு பந்தயத்துக்கு ஏற்ற பைக் ஓட்டக் கற்று பயிற்சி எடுத்துக் கொள்வதுபோல், முதன் முதலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது 30% லிக்விட் ஃபண்டில் (ஆக்ஸிஸ் / ரிலையன்ஸ் லிக்விட் ), 50% பேலன்ஸ்டு ஃபண்டில் (எல் & டி இந்தியாபுரூடன்ஸ் / ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்ட்), 20% ஈக்விட்டி மிட்கேப் / ஸ்மால்கேப் (ரிலையன்ஸ் ஸ்மால்கேப் / டிஎஸ்பி பிளாக்ராக் ஸ்மால் & மிட்கேப்) அல்லது புளூசிப் (எஸ்பிஐ புளூசிப்/ மிரே அசெட் எமர்ஜிங் புளூசிப்) திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். 2-3 வருடங்களில் ஒரு சிறந்த அஸெட் அலோகேஷனுடன் கூடிய ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.’’

? நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பணியாற்றி விட்டு, தற்போது சொந்த பிசினஸ் தொடங்கியுள்ளேன். என் பிஎஃப் கணக்கில் எட்டு லட்ச ரூபாய் உள்ளது. இனி நான் வேறு எந்த நிறுவனத்துக்கும் வேலைக்குச் செல்லாத சூழலில், என் பிசினஸுக்காக அந்தப் பணத்தை முழுவதையும்

எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அப்படிச் செய்வது சரியா அல்லது என் ஓய்வுக்காலத்துக்காக அந்தப் பணத்தை அப்படியே விட்டுவிடலாமா?

@ கதிரேசன். விழுப்புரம்.
கே.ஆர்.சத்ய நாராயணன், ஆடிட்டர்

“வேலையைத் தொடரப் போவதாக இருந்தால், பிஎஃப் கணக்கையும் தொடரலாம். ஆனால், நீங்கள் வேலையைத் தொடராமல், சொந்த பிசினஸ் செய்யப் போவதால், பிஎஃப் கணக்கை முடித்துவிடலாம். அதிலிருந்து கிடைக்கும் பணத்தை எடுத்து, பிசினஸுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின், எஸ்பிஐ அல்லது தபால் அலுவலகம் மூலமாக ஒரு புதிய பிபிஎஃப் கணக்கைத் தொடங்கி முதலீடு செய்துகொள்வது ஓய்வுக் காலத்துக்கு நல்லது.”

?குறுகிய கால முதலீட்டுக்கு கடன் ஃபண்டுகளை தேர்வு செய்யலாமா? இதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு எப்படி வரி கட்டவேண்டும்?

@ பாலாஜி பாலகுருசாமி, சென்னை.
ஏ.கே.நாராயண், முதலீட்டு ஆலோசகர்.

“ஒரு வருட குறுகிய கால முதலீட்டுக்கு கடன் (டெப்ட்) சார்ந்த ஃபண்டுகள் பொருத்தமானது. எஸ்ஐபி முறையில் டெப்ட் ஃபண்டுகளில் முதலீடுகளை மேற்கொண்டு ஒரு வருடத்துக்குள் பணத்தைத் திரும்ப எடுக்கும்போது வெளியேறும் கட்டணம் (எக்ஸிட் லோட்) செலுத்தவேண்டி இருக்கும். கடன் சார்ந்த ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குள் முதலீட்டைத் திரும்ப எடுத்தால், வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்டவேண்டும். மூன்றாண்டுக்கு மேற்பட்டால், பணவீக்க சரிகட்டலுக்கு பிறகு 20% வரி கட்டினால் போதும். அந்த வகையில் மூன்று ஆண்டுகள் வரை காத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.”

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan
twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.