காஸ்ட்லி கலாட்டா!
Published:Updated:

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

தமிழில் காஸ்ட்லி பட்ஜெட் சினிமா என்றால் ஷங்கரின் எந்திரன்தான். அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார்

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

150 - 175 கோடிக்குள் இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரை காஸ்ட்லி பட்ஜெட் டில் தயாரான சினிமா என்றால் அது 'அவதார்’தான். 2009 - ல் வெளிவந்த இந்தப் படத்தின் பட்ஜெட்

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

421 கோடி.  

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன்தான் இந்தப் படத்தையும் இயக்கினார். முதலில் அவதார் படத்தை எடுத்து விட்டு அதற்குப் பிறகுதான் டைட்டானிக் படத்தை எடுக்க நினைத்திருந்தாராம் கேமரூன். ஆனால், அந்தக் கதை முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் செய்ய நினைத்ததால் அதற்கான தொழில்நுட்ப வசதிகள் அவருக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை. எனவேதான் முதலில் டைட்டானிக் படத்தை எடுத்தாராம்.

ஒன்றுக்கு இரண்டு தந்த அவதார்! - சினிமா

1994-ம் ஆண்டு அவதார் திரைக்தையை எழுதிய ஜேம்ஸ் கேமரூன், 2009-ல் அதை படமாக்கி ரிலீஸ் செய்தார் என்றால் மனிதர் எவ்வளவு பெரிய பொறுமைசாலி என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.  

'இந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு தேவைதானா? போடுகிற  பணம் திரும்பவருமா?’ என்றெல்லாம் சிலர் சந்தேகக் கேள்வி எழுப்பினார்களாம். ஆனால், கேமரூன் தன் திரைக்கதை

மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். விளைவு, இரண்டு பில்லியன் டாலர் பணத்தை வசூல் செய்து கொடுத்ததோடு, ஒன்பது ஆஸ்கார் விருதுகளையும் வாங்கித் தந்தது அவதார்.

##~##
இன்னொரு காஸ்ட்லியான விஷயத்தையும் செய்திருக்கிறார் கேமரூன். இவர், டெர்மினேட்டர்-2 படம் எடுத்த போது அதன் கதாநாயகியான லிண்டா ஹாமில்டனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஆனால், டைட்டானிக் படத்தில் சிறு வேடத்தில் நடித்த இன்னொரு நடிகையான சுசி ஆமீஸை காதலிக்க, லிண்டா விவாகரத்து கேட்டார்.   கிட்டத்தட்ட  ஐம்பது மில்லியன் டாலர்  ஜீவனாம்சம் கொடுத்துத்தான் விவாகரத்தைப் பெற்றார். அதிலும் காஸ்ட்லிதான்!

-பானு, செ.கார்த்திகேயன்