டாடாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார் மிஸ்திரி என்று அவரை தலைவர் பதவியிலிருந்து தூக்கினார்கள் டாடா சன்ஸ் குழும இயக்குநர்கள். இந்த முடிவே, இப்போது டாடா சன்ஸ் குழுமத்துக்கு எதிராகத் திரும்பியுள்ளது. டாடா குழுமத்தின் மீது அதன் பங்குதாரர்களும் முதலீட்டாளர்களும் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், டாடா குழுமத்தில் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

9 பக்க கடிதம்!

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து கடந்த அக்டோபர் 24-ம் தேதி நீக்கப்பட்ட மிஸ்திரி மீது கடும் கோபத்தில் இருக்கிறது டாடா சன்ஸ். மிஸ்திரியை ஒரு துரோகி என்று சித்தரிக்கும் அளவுக்கு தினமும் அவர் குறித்த ஏதோ ஒரு செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி ஒன்பது பக்க கடிதத்தை அனைத்து டாடா சன்ஸ் குழும நிர்வாகிகளுக்கும், ஊழியர் களுக்கும் அனுப்பியது. அதோடு நிறுத்தாமல் பெரும்பாலான செய்தித்தாள்களில் ஒரு பக்கம் முழுவதிலும் அச்சிடப்பட்டு அந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.

அந்தக் கடிதத்தில் மிஸ்திரியின் காலத்தில் டாடா சன்ஸ் மிகப் பெரும் சரிவைச் சந்தித்து உள்ளதாகவும், அதற்கு முற்றிலும் மிஸ்திரியின் செயல்திறனற்ற நிர்வாகம்தான் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், டாடா சன்ஸ் குழுமத்தின் 40 நிறுவனங்களிலிருந்து கிடைத்துவந்த டிவிடெண்ட் வருமானம் 2012-13-ல் ரூ.1,000 கோடியாக இருந்தது, 2015-16-ல் ரூ.780 கோடியாக குறைந்துள்ளது.

டிவிடெண்ட் குறைந்ததுடன் செலவுகளும் அதிகரித்திருக்கிறது. ஊழியர்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் 2012-13-ல் ரூ.84 கோடியிலிருந்து 2015-16-ல் ரூ.180 கோடியாக அதிகரித்துள்ளது. பிற செலவுகளும் ரூ.220 கோடியிலிருந்து ரூ.290 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், டாடாவின் போர்ட்ஃபோலியோக்களில் உள்ள முதலீடுகளை விற்பதிலும் பெரும்பாலும் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை. இதனால் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் டாடா சன்ஸ் குழுமத்தின் கடன், ரூ.69,877 கோடியிலிருந்து ரூ.2,25,740 கோடியாக அதிகரித்துள்ளது.

நெருக்கடியான சூழல்களைச் சமாளிக்க முடியாதவர் மிஸ்திரி என்றும், அவரால் இங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் பிரிவும், டொகோமோ உடனான ஜாயின்ட் வென்ச்சரும் தோல்வி அடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியதால், அவற்றின் செயல்பாட்டு வருமானமும் மிகவும் குறைந்தது. இவை அனைத்துக்கும் மிஸ்திரிதான் காரணம் என்று அவர் மீது பழியைப் போட்டது.

பதவிகளைப் பறிக்கும் டாடா!

மிஸ்திரி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்று அதற்கான காரணங்களைத் தெளிவுப்படுத்தி விட்ட டாடா சன்ஸ், அதற்குப் பிறகு ஒவ்வொரு காரணங்களாகத் தேடி எடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமத்தின் பிற நிறுவனங்களில் மிஸ்திரி வகித்து வந்த பதவிகளையும், இயக்குநர் குழுவின் உறுப்பினர் பொறுப்புகளையும்கூட அவரிடம் இருந்து பறிப்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறது.

டாடாவின் நிதி நிலை அறிக்கையைக் காப்பாற்றி வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் தற்போது இஷாத் உசைன் நியமிக்கப் பட்டுள்ளார். டாடா குழும செயல்பாடுகள் மற்றும் தொழில்களில் இவருக்கு 33 வருடங்கள் அனுபவம் உள்ளது. 69 வயதான இவர், டிசிஎஸ்-ன் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்படுவார் என்று டாடா குழும இயக்குநர்கள் குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

அடுத்ததாக, டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரி நீக்கப்பட்டு புதிய நபர் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது. மிஸ்திரி மட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸ் இயக்குநர் குழுவில் உள்ள நுஸ்லிவாடியாவையும் நீக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த சமயத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு திடீரென்று கூடி, அந்த நிறுவனத்தின் இயக்குநராக நீடிக்கும் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவளிப்பது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அந்தஅறிக்கையில் வெளிப்படையாக மிஸ்திரியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக அவரை ஆதரிப்பது போல அது இருந்தது. டாடா சன்ஸ் குழும நிறுவனமே மிஸ்திரிக்கு ஆதரவளித்து உள்ளதால், தொழில் துறை வட்டாரங்கள் மேலும் பரபரப்பாகியுள்ளன.

மிஸ்திரியின் பதிலடி!

அதே சமயம், மிஸ்திரியும் தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தையும், டாடா குழுமம் மற்றும் ரத்தன் டாடாவின் கடந்த கால செயல்பாடுகளையும் சொல்லி வருகிறார். ‘ரத்தன் டாடா, குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் இயக்குநர்களைச் சுதந்திரமாக செயல்படவிடவில்லை. டாடாவும், டாடா ட்ரஸ்ட்டில் உள்ள நிர்வாகிகளும், டாடா குழும நிறுவனங்களின் முடிவுகளில் தலையிட்டு, அவசியமான முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்ததார்கள்’ என குற்றம் சாட்டி இருக்கிறார் மிஸ்திரி.

மேலும், ‘டாடா பல நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைத்தாரே தவிர, எதில் முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டார் ரத்தன். இதனால் கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்களும், ஜாயின்ட் வென்சர் பிசினஸ்களும் பெரிய அளவில் சோபிக்காமல் நஷ்டத்தையே சந்தித்தன. இதனால் டாடா குழுமம் கடனில் தத்தளித்து, திவாலாகும் நிலையில் இருக்கிறது’ என்று மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

மோடியுடன் சந்திப்பு!

இந்தியத் தொழில் துறையில் கணிசமான பங்கு டாடா குழுமத்துக்கு உண்டு. 42 நிறுவனங்களுடன் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இந்தக் குழுமம், இப்படி சிக்கலுக்குள் இருப்பது யாருக்கும் நல்லதல்ல. அதனால் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் டாடா குழும நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகள் விதிமுறைகளின்படி நடக்கின்றனவா என்பதைக் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், டாடா குழும மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற துடிக்கிறார் ரத்தன் டாடா. இதற்காக டாடா குழும பங்குதாரர்கள், வெளி நாட்டு முதலீட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்.

நவம்பர் 15-ம் தேதி அன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து 30 நிமிடங்கள் பேசியுள்ளார் ரத்தன் டாடா. ஆனால், அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இரண்டு தரப்பிலும் நடக்கும் விஷயங்களைப் பார்த்தால், டாடா விவகாரம் இப்போது முடிவுக்கு வரும் போல தெரியவில்லை என்கிறார்கள்!