மத்திய அமைச்சர்கள் பல்வேறு பத்திரிகைகளுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது வழக்கமான விஷயம்தான். ஆனால், ஆண்டுக்கொரு முறை பொருளாதார ஆசிரியர்களை அழைத்து, அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தெரியப்படுத்துவார்கள். அந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் டெல்லியில் நடந்தது. டெல்லியில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊடகத் செய்தித் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், இந்தியா முழுக்க உள்ள பொருளாதார ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டை துவக்கி வைத்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர் சக்திகந்த தாஸ், முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “இந்தியாவில் பன்னாட்டு முதலீடு அதிகரித்துள்ளதோடு, உள்நாட்டுத் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் நீண்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தப்படும்போது, தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வரும்” என்றார்.

மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, ‘‘தூத்துக்குடி - இலங்கைக்கு இடையேயான சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப் பாதையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன் பேசும்போது, ‘‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மந்தநிலை நிலவுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதனால் பெரு, சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த நாடுகளுக்கு மருந்துகள், பொறியியல் பொருள்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியும்.

மேலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். ஐடி சேவைகள் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். சென்னை - தூத்துக்குடி - குளச்சல், சென்னை - பெங்களூரு தொழில் பாதையை மேம்படுத்த இருக்கிறோம். மீண்டும் ஈரானுக்கு தேயிலை, அரிசி போன்றவற்றை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்” என்றார்.

மாநாட்டின் இரண்டாம் நாளில் முதலில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். “பிரதமர் மோடி கறுப்புப் பணம் மீது போர் தொடுத்து இருக்கிறார். பிரதமர் மோடி மூன்று மந்திரங்களைச் சொல்லி இருக்கிறார். சீர்திருத்தம், திறமையாக செயல்படுதல் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று மந்திரங்களை சொல்லி இருக்கிறார். பொதுமக்கள் ‘உடல், மனம், பணம்’ இந்த மூன்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடும், அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் பொதுமக்களை சென்றடைவதற்காகத்தான் இந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘‘இந்தியாவின் வளர்ச்சி, அதன் டிஜிட்டல் வளர்ச்சியில் இருக்கிறது. நாட்டில் இ-காமர்ஸ் சந்தையின் வளர்ச்சி, கடந்த ஓராண்டு காலத்தில் 100 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டிருக்கிறது.

புதிய சாஃப்ட்வேர் புராடக்ட் பாலிசி வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டிருக்கிறோம். நாட்டில் இன்டர்நெட் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ, அந்த அளவுக்கு குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கண்காணித்து குறைக்க, அனைத்து துறைகளிலும் சைபர் செக்யூரிட்டி ஆபீஸர் நியமிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

இரு நாட்களும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தனர்

நாணயம் விகடன் கேள்விக்கு தமிழிலேயே பதில்!

இந்த மாநாட்டில் நாணயம் விகடன் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சக்திகந்த தாஸ் தமிழிலேயே பதில் அளித்தார். இதனை அடுத்து இந்தியா முழுக்க வந்திருந்த பல பத்திரிகையாளர்கள் அவர்களின் தாய்மொழியிலே கேள்விகளை கேட்டு, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பதில் பெற்றனர். அமைச்சர் நிர்மலா சீதாரராமன் இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்து கைதட்டல் பெற்றார்.