Published:Updated:

கல்யாணம்... காதுகுத்து... மொய்!

கல்யாணம்... காதுகுத்து... மொய்!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணம்... காதுகுத்து... மொய்!

கருப்பு - ஓவியம்: ஹரன்

கல்யாணம்... காதுகுத்து... மொய்!

கருப்பு - ஓவியம்: ஹரன்

Published:Updated:
கல்யாணம்... காதுகுத்து... மொய்!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணம்... காதுகுத்து... மொய்!
கல்யாணம்... காதுகுத்து... மொய்!

1. கல்யாணம், காதுகுத்து, கிரஹப்பிரவேசம் இப்படி எந்த விஷேசமானாலும், மொய் வாங்குறதும் கொடுக்கிறதும் நம்ம கலாசாரம். வாசல்ல டேபிள் சேர் போட்டு நோட்டு, வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு இதெல்லாம் இருந்தா நீங்க மொய் வைக்கிற இடத்துல இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாம்.

2. பல விஷேச வீடுகள்ல நாம செஞ்ச மொய், திரும்ப வந்துரும்னு நம்பித்தான் கடனே வாங்குவாங்க. ஆனா பார்த் தீங்கனா... விஷேசத்துக்கு வர்றவங்க பண்ட பாத்திரம், கிஃப்ட்டா பிளாஸ்டிக் டப்பாக் களைக் கொடுத்து நமக்கு பி.பி ஏத்துவாங்க. சிரிச்ச முகமா கிஃப்ட்டை வாங்கிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள ‘வட போச்சே’ன்னு மனசு கதறும்.

3. மணமக்கள் ரெண்டுபேரும் படிச்சவங்களாச்சே, அறத்தைப் போதிக்கும் புத்தகங்களா கொடுக்க லாமேங்கிற நல்லெண்ணெத்துல பேக் பண்ணி கொடுத்துட்டு வந்தா, அடுத்த நாளே கிஃப்ட்டைப் பிரிச்சுப் பார்த்துட்டு, ‘உன் கல்யாணத்துக்கும் புத்தகம் மட்டும்தான்டா கிஃப்ட்டா கொடுப்பேன்’னு போன்லேயே சபதம் எடுக்கிறான் என் நண்பேன். எனக்கு கல்யாணம் ஆகுறப்ப பார்த்துக்கலாம்ன்னு கப்சிப் ஆயிட்டேன்!

4. கல்லூரி நண்பனுக்குக் கல்யாணம்னு கேள்விப் பட்டதும், நண்பர்கள் 0எல்லாம் கான்ஃபரன்ஸ் கால் போட்டு, கிட்டத்தட்ட ஒரு மாசமா வெறித்தனமா ப்ளான் பண்ணி தங்கத்துல மோதிரம் வாங்கித் தரலாம்னு முடிவு பண்ணோம். வெற்றிகரமா கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளை கையில் மோதிரத்தை மாட்டிக் கும்பலா போட்டோவும் எடுத்துக்கிட்டோம். ‘மச்சி... மோதிரம் வெயிட் கம்மியா இருக்கே. நிஜமாவே அரை பவுன்தானா? கே.டி.எம். முத்திரை இருக்கா’னு 14 பேருக்கும் கால் பண்ணி கேட்ருக்கான். இதுக்குதான் ரொக்கமா மொய் வைக்கணும்கிறது!

5. மொய் எழுதுறதும் ஒரு கலை. ஊர் பேர், செய்கிற தொழில், மொய் வைக்கிறவர் பேர், மொய்ப்பணம் இதுதான் மொய் எழுதுறதுக்கான வரிசை. அடைமொழி, பட்டப்பேர் இருந்தா, அதை அடைப்புக் குறிப்புக்குள் எழுதி வைப்பாங்க. ரேஷன் கார்டுலகூட இம்புட்டு விவரம் இருக்காது. ஆனா, இதில் அத்தனையும் இருக்கும். ஏன்னா திரும்ப மொய் செய்றப்ப, அதே அளவு பணத்தை மொய் வைக்கிறதுக்காகத்தான் இத்தனைத் தகவல்களும்! சில ஊர்ப்பக்கம் மொய் கம்மியா செஞ்சா, மைக்லேயே ‘என்னப்பு இம்புட்டுத்தான் செய்றீக’னு மானத்தை வாங்கிடுவாங்க!

6. டெக்னாலஜி வளர்ந்ததாலேயோ என்னவோ... கம்ப்யூட்டர், கீ போர்டு சகிதமா இப்ப மொய் எழுத உக்கார்ந்துர்றாங்க. 500, 1,000 செல்லாதுன்னாலும் ‘அண்ணே, நாங்க டெபிட் கார்டையும் த்துக்குவோம்ண்ணே’ன்னு  பணத்தைப் பிடுங்குறதுல படுகிரியேட்டிவ்வா யோசிக்கிறாங்க. மொய் கவுன்ட்டர் வர வர பேங்க் கவுன்ட்டரைவிட ஹை-டெக்கா போய்க்கிட்டு இருக்கு!

7. மொய்ப் பணத்தை ரவுண்டா முடிக்கக் கூடாதுங்கிறது விதிபோல. 50 ரூபாய் மொய் வைச்சாலும்கூட ஒரு ரூபாய் சேர்த்து 51 ரூபாயா எழுதுறதுதான் வழக்கம். இதுக்காகவே சில்லறைகளோட பக்கத்துல ஒரு ஆள் உட்கார்ந்துருப்பாங்க!

8. மொய் எழுதுறவங்க எல்லாம் விஷேச வீட்டு சொந்தக்காரப் பசங்களா இருப்பாங்க. மூணு வேளை சாப்பாடு, அப்பப்போ கூல் ட்ரிங்ஸ், டீ வந்துக்கிட்டே இருக்கும். இதுபோக விஷேச வீட்டு ஆளுங்களோட வசதிக்கேற்ப மொய் எழுதுறவங் களுக்கு சன்மானமும் உண்டு.

9. சில வீடுகள்ல மொய் எழுதுற அளவுக்குத் தகுந்தது போல் தாம்பூலப்பை சைஸ்கூட மாறும். மொய் எழுதி முடிச்சாச்சானு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்தான்  தாம்பூலப் பையைக் கண்ணுலேயே காட்டுவாங்க!