Published:Updated:

வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

சூச்சு டிவியின் பிசினஸ் டெக்னிக்ஞா.சுதாகர்

வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

சூச்சு டிவியின் பிசினஸ் டெக்னிக்ஞா.சுதாகர்

Published:Updated:
வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!
வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

சினிமா, தொலைக்காட்சி, இணையம் என எல்லா இடங்களிலுமே குழந்தை களுக்கான உலகமும், வணிகமும் தனி. வால்ட் டிஸ்னி போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் குழந்தை களுக்கு என்றே பிரத்யேக சினிமாக்களையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கி ஹிட் அடித்தன. அதுபோல, யூ-டியூபில் குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்களை வெளியிட்டு உலகளவில் கலக்கி வருகிறது சென்னையைச் சேர்ந்த சூச்சு (chuchu) டிவி.

உலகம் முழுக்க இருக்கும் டாப் 15 யூ-டியூப் சானல்களில் எப்போதும் சூச்சு டிவிக்கு இடம் உண்டு. குழந்தைகளை அனிமேஷன் பாடல்கள் மூலம் கட்டிப் போடும் வெற்றிச் சூட்சுமத்தைப் பகிர்ந்து கொண்டார் சூச்சு டிவியின் நிறுவனர் வினோத் சந்தர். இவர் மறைந்த திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸின் மகன்.

“2013-ல் நானும் எனது நண்பர்களும் ஒரு ஐ.டி நிறுவனத்தை நடத்திவந்தோம். நான், கிருஷ்ணன், சுப்பிரமணியன், அஜித் டோகோ, சுரேஷ் என அனைவரும் 30 வருட நண்பர்கள். 2006-ல் இருந்தே      யூ-டியூபில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால், எனக்கு யூ-டியூப் நன்கு பரிச்சயமான ஒன்று. ஒரு நாள் எனது மகள் ஹர்ஷிதாவை சந்தோஷப்படுத்த நானே ஒரு அனிமேஷன் வீடியோ தயார் செய்தேன். அதனை ஹர்ஷிதாவிடம் காட்டியபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அப்போது தான் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று எனக்குப் புரிந்தது.

பிறகு முதல் முயற்சியாக chubby cheeks என்ற ரைம்ஸை யூ-டியூபில் வெளியிட்டேன். எனது மகளின் செல்லப் பெயர் chuchu என்பதால், அதே பெயரிலேயே சானல் ஒன்றைத் துவங்கி அதனை வெளியிட்டேன். இரண்டே வாரத்தில் அதனை 3 லட்சம் பேர் பார்த்திருந்தனர். எனக்கே அது ஆச்சர்யமாக இருந்தது.

வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு,  அடுத்தது ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ ரைம்ஸை அனிமேஷனாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஒரு வீடியோ மூலமாகவே சுமார் 5,000 பேர் எங்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்தார்கள். அப்போதுதான் இது எங்களுக்கு நல்ல யோசனை எனத் தோன்றியது.

முதலில் ‘பாபா பிளாக்‌ஷிப்’ பாடலைத்தான் அனிமேஷனாக வெளியிட்டோம். பல இடங்களில் அந்தப் பாடல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதில் ‘பிளாக்‌ஷிப்’ என்று வருவதால், இனவெறியின் அடையாளமாக கருதினர். அதனை மாற்றும்படி, கறுப்பு ஆடுடன், ஒரு வெள்ளை மற்றும் பிரவுன் நிற செம்மறி ஆடையும் சேர்த்து இந்தப் பாடலை அனிமேஷனாக வெளியிட்டோம். அதற்கு அமோக வரவேற்பு இருந்தது.

அதேபோல, ‘ஜேக் அண்ட் ஜில்’ என்னும் பாடலையும் அப்படியே அனிமேஷனாக மட்டும் மாற்றாமல், புதிய ஸ்டைலில் வெளியிட்டதால் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பினர்.
2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் சானலைத் துவங்கினோம். முதல் வீடியோவை வெளியிட்டு மூன்று மாதங்கள் கழித்துதான், இரண்டாவது வீடியோவை வெளியிட்டோம். பிறகு 2014-ம் ஆண்டுதான் இதில் முழு வீச்சோடு களமிறங்கினோம்.

ஆசிய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான யூ-டியூப் சானலில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.

எங்களுக்கு இந்தியாவில் இருப்பதை விடவும், அமெரிக்காவில் இன்னும் பார்வையாளர்கள் அதிகம். அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, வியட்நாம் போன்றவை எங்களின் டாப் பார்வையாளர்கள் கொண்ட நாடுகள்.

உலக அளவில் குழந்தைகள் என்பவர்கள் ஒரே மாதிரிதான் என்பதால், எங்களுக்கு நாடு என்பது ஒரு எல்லையே கிடையாது” என்று குழந்தை மாதிரி குதூகலமாகப் பேசுகிறார் வினோத் சந்தர்.

குழந்தைகள் என இல்லாமல் பொதுவானவர் களுக்கான பிரிவில் டாப் 15 இடங்களுக்குள் இருந்து வருகிறது இந்த சானல். அதேபோல, இந்தியாவில் அதிகம் பேர் சந்தாதாரர்களாக இருக்கும் யூ-டியூப் சானலில் இவர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்களாம்..

வால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்!

இதெல்லாம் சரி, வருமானம் இருந்தால்தானே, இந்த மாதிரி நிறுவனங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட முடியும். எனவே, அதுபற்றி கேட்டோம்.

‘‘விளம்பர வருமானம்தான் எங்கள்  முதன்மை யான வருவாய். டிஜிட்டல் உலகத்தைப் பொறுத்தவரை, விளம்பரங்களை எந்த நாட்டில், எந்தப் பிரிவினருக்கு, எந்த வயதினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறோம்.

 தற்போது, இந்தியாவைவிட, அமெரிக்காவில் அதிகம் விளம்பர வருவாய் கிடைக்கிறது. இங்கு ஒரு ரூபாய் கிடைத்தால், அமெரிக்காவில் நான்கு ரூபாய் கிடைக்கும். உலகம் முழுக்க இருந்து வெவ்வேறுவிதமான லாபம் வரும். ஒரே முதலீடுதான் அனைத்துக்கும்  என்பதால், எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

தற்போது இந்தியாவில் யூ-டியூப் கிட்ஸ், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் என பல நிறுவனங்கள் டிஜிட்டல் சேவையை அளிக்க உள்ளனர். இந்தியாவில் வளர்ச்சி நன்றாக இருப்பதால், டிஜிட்டல் விளம்பர வருவாயில் அமெரிக்காவின் இடத்தை இந்தியா 2020-ல் பிடித்துவிடும்’’ என்ற வினோத் தங்களின் லட்சியம் குறித்தும் சொன்னார்.

‘‘எங்களின் இலக்கு ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள்தான். அவர்களுக்கான கருத்துகளையே நாங்கள், அவர்கள் விரும்பும் வடிவத்தில் தருகிறோம். எங்கள் நிறுவனத்தை உலகப் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி அளவுக்கு  வளர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்றார் நம்பிக்கையோடு.

வித்தியாசமான முயற்சிகள் எல்லா காலங்களிலும் நிச்சயம் ஜெயிக்கும்!

படங்கள்: ப.சரவணக்குமார்