Published:Updated:

15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!

15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!

நாராயண ஹிருதயலயா தேவி ஷெட்டியின் வெற்றிக் கதைஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!

நாராயண ஹிருதயலயா தேவி ஷெட்டியின் வெற்றிக் கதைஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!
பிரீமியம் ஸ்டோரி
15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!

ருத்துவ சிகிச்சைகள், முக்கியமான இருதய அறுவை சிகிச்சைகள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் இந்தியாவின் ஹெல்த்கேர் துறை வளர வேண்டும்’ என்ற மிக உயர்ந்த கனவைக் கண்டவர் தேவி பிரசாத் ஷெட்டி. சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், இந்தியாவின் மருத்துவத் துறையில் முக்கியமானதொரு நபராக எப்படி மாறினார்? 

15 ஆயிரம் இதயங்களின் சொந்தக்காரர்!

கனவைத் துரத்து!

கர்நாடகா மங்களூர் மாவட்டத்தில் கின்னிகோலி கிராமத்தில், தனது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் தேவி ஷெட்டி. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே இதய அறுவை சிகிச்சை நிபுணராக ஆகவேண்டும் என்ற கனவு அவருக்குள் பிறந்தது. அவரது பள்ளி ஆசிரியர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி பேச, மருத்துவர் ஆகவேண்டும் என்கிற ஆசை அவர் மனதில் உண்டானது.   அவரது மூத்த சகோதரர் டாக்டர் ஆனதைத் தொடர்ந்து தானும் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தார். 

ஆனால், மருத்துவம் படிப்பதற்கான தேர்வில் முதன்முறை தேவி ஷெட்டி  தேர்வாகவில்லை.  மனம் தளறாமல் மீண்டும் படித்துத் தேர்ச்சி பெற்றார். மங்களூர் கஸ்தூர்பா கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற இங்கிலாந்தில் உள்ள கைஸ் மருத்துவமனையில் (Guy’s Hospital) சேர்ந்தார். அங்கு சிறப்பான பயிற்சி பெற்று, அங்கேயே சில வருடங்கள் மருத்துவராக இருந்தார் தேவி பிரசாத் ஷெட்டி.

  தாய்நாட்டுக்கு மருத்துவம்!

1989-ல் இந்தியாவுக்கே திரும்பி வந்தார். கொல்கத்தாவில் பி.எம்.பிர்லா மருத்துவ மனையில் சில வருடங்கள் மருத்துவராக இருந்தார். 1992-ல் பிறந்து ஒன்பது நாட்களே ஆன ‘ரோனி’ என்ற குழந்தைக்கு முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்தார். ஆனால், ஒரு ஆண்டுக்கு 2.6 கோடி குழந்தைகள் இதயப் பிரச்னைகளுடன் பிறக்கின்றன. குழந்தைகளுக்கு தாராளமாக அறுவை சிகிச்சை செய்யலாம்; சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப் போல வாழலாம் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. 2001-ல் பெருங்களூருவில் உள்ள பொம்மசந்த்ராவில், நாராயண ஹிருதயலயா என்ற பல்நோக்கு மருத்துவமனையை சொந்தமாகத் தொடங்கினார் டாக்டர் தேவி ஷெட்டி. தற்போது 1000 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவ மனையாக இது விளங்குகிறது. ஒரு நாளைக்கு 30 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு 15 ஆயிரத்துக்கும் மேலான புற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.

  ஆர்வம், ஆலமரமான கதை!


மருத்துவத் துறையில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால், பெயர் சம்பாதிப்பது மிகவும் கடினம். மருத்துவத் துறையில் மிக நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்க வேண்டுமெனில், மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம். ‘நாம் எதற்காக மருத் துவத் துறையில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் நோக்கம் என்ன என்பதிலும் நேர்மை வேண்டும்’ என்பதில் தீர்க்கமாக இருந்தார் டாக்டர் தேவி ஷெட்டி.  

நகர்ப்புறங்களில் உள்ள பணக்காரர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்தே பல்வேறு மருத்துவமனைகள் இயங்கிவந்த நிலையில், எல்லாத் தரப்பினருக்கும் நியாயமான கட்டணத்தில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் மருத்துவ சிகிச்சையை தனது நாராயண ஹிருதயலயாவின் மூலம் தருவது அவசியம் என்று நினைத்தார் டாக்டர் தேவி ஷெட்டி.
  
  எப்படிச் சாத்தியமானது?

மருத்துவத் துறையில் இதுவரை இல்லாத பல புதிய விஷயங்களை அவர் கொண்டு வந்தார். அதில் ஒன்று ‘அசெம்ப்ளி லைன் ப்ரெசிஷன்’ கட்டமைப்பு. இது கார் உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறை. இதனை மருத்துவத் துறையிலும் செயல்படுத்தினார் ஷெட்டி. இதற்காக வால் ஸ்டிரீட் பத்திரிகை இவரை, இதய அறுவை சிகிச்சையின் ஹென்றி ஃபோர்ட் என்ற பட்டம் வழங்கி கெளரவித்தது. இந்த ‘அசெம்ப்ளி லைன் ப்ரெசிஷன்’படியே இவரது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சைகளைச் செய்து வருகின்றனர்.

மேலும், முடிந்தவரை செலவுகளைக் குறைத்தால், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் மருத்துவம் இருக்கும் என்று நம்பினார். அதற்காக மருத்துவ மனைக்குத் தேவையான உபகரணங்களை வாங்கும் போது, இவர் நேரடியாக உற்பத்தியாளரிடம் பேசிக் குறைந்த விலைக்கு வாங்கினார். விலை உயர்ந்த உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும், இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படுகிற தரமான மருத்துவ உபகரணங்களை வாங்கினார்.
 
மேலும், நாராயண ஹிருதயலயா மருத்துவமனைகள் பெரும்பாலும் ‘No-Frills’ அடிப் படையில் கட்டப்பட்டுள்ளன.  அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக கூடுதலாக செய்யப் படும் வசதிகளைத் தவிர்த்த மருத்துவமனைகளையே இப்படி சொல்கிறார்கள். ‘திரும்பத் திரும்ப மருத்துவமனையைத் தேடி வர வேண்டும் என்று நினைப்பதற்கு மருத்துவமனைகள் ஒன்றும் ஹோட்டல்கள் அல்ல; நோயாளிகள் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மருத்துவ மனையைத் தேடி வராதபடிக்கு நம் சிகிச்சை இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.
 
  குறைந்த கட்டணத்தில்..!

அதனால்தான் 25 வருடத்துக்கு முன்பே ரூ.1.5 லட்சமாக இருந்த இதய அறுவை சிகிச்சையை இன்று 80 ஆயிரத்துக்கு அவரால் செய்ய முடிகிறது. மேற்குலக நாடுகளில் இதய அறுவை சிகிச்சை செய்ய இதைவிட பல மடங்கு அதிகம் செலவாகிறது. ஒஹியோ க்ளெவ்லேண்ட் க்ளினிக்கில் 1 லட்சம் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67 லட்சம்) மேல் செலவாகிறது.

அறுவை சிகிச்சைகளை மலிவான கட்டணத்தில் செய்வதோடு மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை திட்டங்களைச் செயல்படுத்துகிறார். செலவுகளைக் குறைக்க ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறார். இதன் மூலமும் எதிர்காலத்தில் பெருமளவில் செலவுகளைக் குறைக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.

இதயப் பிரச்னைகளில் சிறு சதவிகித அளவுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை என்று சொல்லி பணம் பறிப்பது இவரது அகராதியில் இல்லை. எதைச் செய்யவேண்டுமோ, அதை மட்டுமே இவரது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செய்கிறார்கள். இங்கு சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவராக இருக்கிறார். இதுவரை 15 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். அந்த இதயங்கள் ஆரோக்கியமாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனது நிறுவனத்தை பங்குச் சந்தையிலும் பட்டியலிட்டுள்ளார். பொதுப் பங்கு வெளியீட்டில் நாராயண ஹிருதயலயாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து, எட்டு மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டது. காரணம், இதனுடைய பிசினஸ் மாடல்தான்.

  எதிர்கால லட்சியம்!

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 30 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மனைகளை அடுத்த சில வருடங்களில் அமைப்பதே அவரது லட்சியம். ஏனெனில் அதற்கான தேவை உலகம் முழுக்க இருக்கிறது. இந்த லட்சியத்துக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார் டாக்டர் தேவி ஷெட்டி. இந்தியாவில் மட்டுமே ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், இங்கிருக்கிற மருத்துவமனைகள் அனைத்தும் சேர்ந்து  ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் அறுவை சிகிச்சைகளையே செய்கின்றன. இந்த 25 லட்சம் அறுவை சிகிச்சையையும் மருத்துவமனைகள் செய்யும் நிலைக்கு வந்தால், சிகிச்சைகளை இன்னும் மலிவாக வழங்க முடியும்.

எனவேதான், இந்தியா முழுவதும் பல மருத்துவ மனைகளைத் தொடங்க, அசென்ஷன் ஹெல்த் நிறுவனத்தின் பகுதி நிறுவனமான  ‘ட்ரைமெட்எக்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு உள்ளது நாராயண ஹிருதயலயா. மேலும், கேமென் தீவுகளில் 2000 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனையை அமைக்கவும் அது திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொல்கத்தாவில் ரபிந்தரநாத் தாகூர் பெயரில் கார்டியாக் சைன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஒன்றை நிறுவியுள்ளார். மேலும், கர்நாடக அரசின் உதவியுடன் பெங்களூருவில் 5,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகில் கட்டுவதற்கான ஒப்பந்தமும், குஜராத் அரசுடன் அகமதாபாத்தில் ஒரு மருத்துவ மனை கட்டுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளன. இது மட்டுமல்லாமல், மேலும் ஆறு மருத்துவமனைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளார் டாக்டர் தேவி ஷெட்டி.  

தரமான மருத்துவச் சேவை எல்லோருக்கும் குறைந்த செலவில் கிடைப்பதற்கான தொழில்நுட்ப வழிகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் தேவி ஷெட்டி. அவரது தேடல் வெற்றி அடைந்தால் ஹெல்த் கேர் துறையில் நம் இந்தியா உலகுக்கே முன்னுதாரணமாக மாறும்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

6 நாட்களில் 9 லட்சம் வங்கிக் கணக்குகள்!

பழைய 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான தொழிலாளர்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து வருகிறார்கள். தொழில் யூனியன்கள் சார்பில் நடத்தப்பட்ட விழிப்பு உணர்வு மூலம் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் ஆறு நாட்களில் மொத்தம் 9 லட்சம் வங்கிக் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. அட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism