Published:Updated:

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?

கேள்வி - பதில்

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?

கேள்வி - பதில்

Published:Updated:
சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?
சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?

?என் வயது 28. ஹெச்டிஎஃப்சி மிட்கேப் -ல் முதலீடு செய்து வருகிறேன். மேற்கொண்டு மாதம்தோறும் ரூ.5,000 முதலீடு செய்யத் தயார். இதை ஒரே ஃபண்டில் போடலாமா அல்லது இரண்டு ஃபண்டுகளில் போடலாமா? சரியான ஃபண்டுகளை எனக்கு பரிந்துரை செய்யுங்கள். 15 ஆண்டுகளுக்கு இந்தப் பணம் எனக்குத் தேவை இல்லை.

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?


ஜீவா, கோவை

கா.முகைதீன் மாலிக், நிதி ஆலோசகர், பொள்ளாச்சி.


“அக்ரெஸிவ் வகையில் முதலீடு செய்ய விரும்பினால், 2,500 ரூபாயை ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனி ஃபண்டிலும் (குரோத்), 2,500 ரூபாயை டிஎஸ்பி ப்ளாக் ராக் மைக்ரோ கேப் ஃபண்டிலும் (குரோத்) முதலீடு செய்யலாம். நடுத்தர ரிஸ்க் வகையில் முதலீடு செய்ய விரும்பினால், 2,500 ரூபாயை ஃப்ராங்க்ளின் பில்ட் இந்தியா ஃபண்டிலும் (குரோத்), 2,500 ரூபாயை பிர்லா எம்என்சி ஃபண்டிலும் (குரோத்) முதலீடு செய்யலாம்.’’

?நான் ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் அளவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். எந்தெந்தத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டால் நீண்ட கால வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக இருக்கும்?

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?ராஜன், மதுரை

எம்.எஸ்.ஒ.அண்ணாமலை, பங்குச் சந்தை தரகர், சேலம்.


““பங்கு வர்த்தகத்தில் 10 வருட அளவு என்பதே அதிகம். மாதாமாதம் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்றால், மருத்துவம், உலோகம், கட்டுமானம், விவசாயம், வங்கிகள், மென்பொருள், வாகன தயாரிப்பு, நிதித் துறைகளில் பகிர்ந்து முதலீடு செய்யலாம்”

?நான் சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டு உள்ளேன். மத்திய, மாநில அரசின் கீழ் அதிகபட்சம் எவ்வளவு மானியம் கிடைக்கும்?

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?மணிகண்டன், விழுப்புரம்

கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் மாநில தலைவர், பெண் தொழில்முனைவோர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு.


“மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க பிஎம்இஜிபி (PMEGP), யூஓய்இஜிபி (UYEGP), ஜெனரல் டேர்ம் லோன், ஸ்டார்ட்அப், முத்ரா மற்றும் நீட்ஸ் திட்டம் என பல்வேறு திட்டங்கள் உள்ளன.

சரியான ஆவணங்கள் மற்றும் திட்டம் குறித்த தெளிவான சிந்தனையுடன் தொழில்முனைவோர்கள், கேவிஐசி (Khadi and Village Industries Commission) அல்லது மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். இங்கு சாதாரணமாக கடன் தொகையில் 25% முதல் 35% வரை மானியம் பெற முடியும். மகளிர், எஸ்சி, எஸ்டி மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன”

?நான் எஸ்ஐபி முறையில் மாதம் ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதேசமயம், அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் பணத்தையும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த ஆயிரம் ரூபாய் முதலீட்டைப் பிரித்து டைவர்சிஃபைடு ஆக முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். எனக்கு ஆலோசனை வழங்கவும்.

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்?


சுந்தர், அரக்கோணம்

சா.பாரதிதாசன், நிதி ஆலோகர்


“டாடா ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டில் தலா 500 ரூபாய் முதலீடு மேற்கொள்ளலாம். நீண்ட கால வளர்ச்சிக்கு இந்த இரண்டு ஃபண்டும் போதுமானது. அவ்வப்போது கிடைக்கும் பணத்தையும் இதே ஃபண்டில் முதலீடு செய்துவரலாம்.’’

?மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டினை மேற்கொண்ட பிறகு, எனது ஃபண்ட் எப்படி செயல்படுகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?”

சொந்த தொழில்... மானியம் எவ்வளவு கிடைக்கும்? ராஜாராம், கோவை

முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் மூலம் முதலீட்டை மேற்கொண்டால், பரிந்துரைக்கப்படும் ஃபண்டுகளை கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. அதே சமயம், நீங்களாகவே, உங்களுடைய ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறீர்கள் என்றால், www.valueresearchonline.com மற்றும் www.morningstar.in இரண்டு இணையதளத்தையும் பயன்படுத்தி உங்கள் ஃபண்ட்  எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்”

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.