Published:Updated:

சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

CIBIL - ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்செ.சல்மான்

சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

CIBIL - ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்செ.சல்மான்

Published:Updated:
சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

நீங்கள் வங்கியில் கடன் வாங்குகிறீர்களா? நீங்கள் கடன் தொகையைச் சரியாகக் கட்டினாலும்,  கட்டாவிட்டாலும் வெளி நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?  

அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எவை? நம் நாட்டு மக்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை அந்த நிறுவனங்கள் எப்படிக் கண்காணிக்கின்றன என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிகளில் வாங்கப்படும் கடன் தொடர்பான புள்ளிவிவரங்களை அளிக்கிற சிபில் (CIBIL - Credit Information Bureau (India) Limited) நிறுவனத்தில், நம் இந்திய வங்கிகளின் பங்கு சுமார் 40% என்கிற அளவிலேயே இருக்கிறது.  60 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்கை வெளிநாட்டு நிறுவனங்களே வைத்திருக்கின்றன. Equifax Credit Information Services Pvt Ltd, CRIF HIGH MARK Credit Card Information Services Pvt Ltd, Experian Credit Information Company of India ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களே நமது வங்கிகள் அளிக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து, நமது கடன் பெறும் தகுதியையும் தீர்மானிக்கின்றன.

கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனிகளுக்கான சட்டத்தை 2005-ல்தான் ஆர்பிஐ அமல்படுத்தியது. 2010-ல் ஆர்பிஐ-யினால் அனுமதி அளிக்கப்பட்ட மூன்று கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்களும் 2012-லிருந்து செயல்பட்டு வருகின்றன. கடன்தாரர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சிபிலின் விதிமுறைகள் தவறாக உள்ளன. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான         கே.கிருஷ்ணாவும், ஷேக் சிக்கந்தர் பாட்சாவும். இந்த வழக்கைத் தொடர்ந்த தற்கான காரணத்தை வழக்கறிஞர் கே.கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

“வங்கிக் கடன், கிரெடிட் கார்டு கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வங்கிகள் , இந்த கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்களுக்குத் தரவேண்டுமென்பது ஆர்.பி.ஐ-யின் உத்தரவு. ஒருவர் சின்னதாக ஒரு கடனை வாங்கினாலும், கடன் வாங்கிய தேதியிலிருந்து அது முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படுகிற வரையிலான அனைத்துத் தகவல்களையும் வங்கிகளின் மூலம் பெறும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள், அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மதிப்பெண் (Credit Score) வழங்குகிறது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் வங்கிகள் கடன் தரும் முடிவை எடுக்கின்றன.

வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான கடனில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையிடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நிறுவனங்கள் சிபில் மூலம் அளிக்கும் மதிப்பெண் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை பல்வேறு இடங்களில் கேட்கிறோம். இதனால் நல்ல வாடிக்கையாளர்களால்கூட வங்கிகளில் கடன் வாங்க முடியாத நிலை உருவாகி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.  

தவிர, கடன் வாங்கும்போது நாம் வழங்கும் ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என எல்லா ஆவணங்களும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் சிக்கிவிடுகின்றன. இதனால் நமது மக்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும்     வெளிநாட்டு நிறுவனங்களிடம்  சிக்கிவிடு கின்றன. இதன் மூலம் நமது நாட்டு மக்களின் நிதிப் பயன்பாட்டை இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் எளிதில் தெரிந்துகொண்டுவிட முடியும் அல்லவா! இதை நம்மால் எப்படித் தடுக்க முடியும்?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வேலையைச் செய்வதற்கு அனுமதி அளிக்காமல், நம் நாட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களின் கடன் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 

சென்னையில் ஐ.டி. கம்பெனி இன்ஜினீயர் ஒருவர் தனியார் கிரெடிட் கம்பெனி ஒன்றில், 2007 ஜூலையில் கிரெடிட் கார்டு வாங்கினார். ஆனால், அவர் 2007 பிப்ரவரியிலிருந்து பல பொருட்களை வாங்கியதாக பில் வர, வாங்காத பொருட்களுக்கு அவர் பணம் கட்ட மறுத்துவிட்டார். இதனால் அவர் பெயர் சிபில் ரிப்போர்ட்டில் இடம்பெற்றது. வேறு வழி இல்லாமல், வாங்காத பொருளுக்கான பணத்தைக் கட்டிய பின்பே அவர் பெயர் சிபிலில் இருந்து நீக்கப்பட்டது. 

சிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

கிரெடிட் கார்டு கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியானது கந்து வட்டி அளவுக்கு அதிகமானது. எனவே, கிரெடிட் கார்டு தொடர்பான சர்ச்சை சிபில் ரிப்போர்ட்டில் இடம்பெறுவது கூடாது. 

இந்த நிலையில், 1) நமது மக்களின் தனிப்பட்ட புள்ளிவிவரங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பது ஆபத்தானது. இந்திய வங்கிகளே இந்த வேலையைச் செய்யும்படி மாற்ற வேண்டும்; 2) சிபில் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும்  வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்; 3) எதிராளியின் தரப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை சிபில் எப்போதும் பின்பற்றுவதில்லை. இதை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து வழக்கு தொடர்ந்தோம்.

ஆனால் உயர் நீதிமன்றமோ, ‘சிபில் நடைமுறை களினால் தனிமனிதர்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப் படாமல் போனோலோதான் அது தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முடியும். இந்த ரிட் பெட்டிஷனில் அது மாதிரி  பாதிப்புகள் எதுவும் எடுத்துச் சொல்லப்படவில்லை. அப்படிச் சொன்னால், நீதிமன்றம் தலையிட்டு, உரிய நியாயத்தை வழங்கும்’ என்று சொல்லி விட்டது.  இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறோம்’’ என்று முடித்தார் வழக்கறிஞர் கே.கிருஷ்ணா.

கடன் வாங்கியவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள், வங்கிகள் மேற்கொண்டு கடன் வழங்குவதற்கு அவசியம் தேவை என்றாலும், அதில் குளறுபடிகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாமே!

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism