Published:Updated:

அம்மாவின் பெயருக்கு வீட்டை மாற்ற என்ன வழி..?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மாவின் பெயருக்கு வீட்டை மாற்ற என்ன வழி..?

கேள்வி - பதில்

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?

?எனது தந்தையின் பெயரில் எங்கள் ஊரில் மூன்று இடத்தில் வீடுகள் உள்ளன. சமீபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார். அவர் பெயரில் இருக்கும் வீட்டை எனது அம்மாவின் பெயரில் மாற்றுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? பத்திரப் பதிவுக் கட்டணம் உட்பட இதற்கான செலவு மொத்தம் எவ்வளவு ஆகும்?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizராஜேந்திரன், கிருஷ்ணகிரி
என்.ரமேஷ், வழக்கறிஞர்.


“ஓர் ஆண் இறந்தபிறகு அவரது சொத்துக்கள் அவரது வாரிசுகளான தாய், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சம விகிதத்தில் சென்று சேரும். அதன்படி, உங்கள் தந்தை இறந்தபிறகு, உங்கள் அம்மாவுக்கும், உங்களுக்கும் அவரது சொத்துக்கள் சமமாக சட்டப்படி சேர்ந்துவிட்டது. தற்போது உங்கள் தாயாரும், நீங்களும் அந்த சொத்துக்களுக்கு சம பாகஸ்தர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆவர்.

உங்களின் பாதிப் பாகத்தையும் உங்கள் அம்மா பெயரில் மாற்ற, நீங்கள் ஒரு பாக விடுதலைப் பத்திரத்தை அவர் பெயருக்கு எழுதி, அதைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் அம்மா, முழுச் சொத்துக்கும் உரிமையாளராகிவிடுவார். பத்திரச் செலவானது விடுதலை செய்யப்படும் பாக சொத்து மதிப்பில் 1% ஆகும். அதிகபட்சமாக ரூ.25,000 ஆகும். பதிவுக் கட்டணம், 4,000 ரூபாய் ஆகலாம்.”

?சென்னையை அடுத்த தாம்பரத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை ரூ.18,000 ரூபாய்க்கு வாடகைக்குவிட நினைக்கிறேன். இது சரியான முடிவுதானா?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?முத்துமாரி, சென்னை
முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“40 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குவதாக இருந்தால், 8 லட்சம் ரூபாய்க்கு முன்பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். 32 லட்சம் ரூபாய் கடனாக வாங்கலாம். குறிப்பிட்ட 20 ஆண்டுகளுக்கு கடனைக் கட்டி வர கிட்டத்தட்ட 29,000 ரூபாய் மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும். தாம்பரம் பகுதியில் 2 படுக்கை அறை  அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்கு மாதம் கிட்டத்தட்ட 12,000 ரூபாய்தான் வாடகை கிடைக்கும். இதற்கு மேல் வாடகை பெற முடியாமல் போகலாம். மீதி 17,000 ரூபாய் உங்கள் கையில் இருந்து செலுத்த வேண்டியது இருக்கும். எனவே, உங்கள் முடிவு சரியானதாக இல்லை.”

?என் குழந்தைக்கு 7 வயதாகிறது. அவனுடைய எதிர்கால கல்விச் செலவுக்காக மாதம் 5 ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு ஏற்ற சரியான ஃபண்டுகளை பரிந்துரைக்கவும்.?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?சுமதி, சேலம்
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


“உங்களைப் போன்ற இளம் தம்பதியினர் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை இரண்டாகப் பிரித்து 2,500 ரூபாய் என்ற முறையில் கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம், எஸ்பிஐ ப்ளு சிப் ஃபண்ட், ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் அல்லது டிஎஸ்பி பிளாக்ராக் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் உங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது (11 வருடங்களுக்குப் பிறகு) 12% வீதம் ரூ.13.18 லட்சம், 15% வீதம் (சிஏஜிஆர்) ரூ.15.77 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு 12% வீதம் ரூ.20.67 லட்சம், 15% வீதம் ரூ.26.23 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது.”

?எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங், ஈக்விடாஸ், ஐடிஎஃப்சி பங்குகளின் அடிப்படை எப்படி இருக்கிறது?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?ராஜாமணி, கடலூர்
எம்.எஸ்.ஒ.அண்ணாமலை, பங்குச் சந்தை தரகர், சேலம்

“எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங் பங்கின் செயல்திறன் நன்றாகவே இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு சிறந்த பங்கு. ஈக்விடாஸ் பங்கின் செயல்திறன் மற்றும் முடிவினைத் தெரிந்துகொள்ள குறைந்தது ஒரு ஆண்டு காலமாவது காத்திருக்க வேண்டும். ஐடிஎஃப்சி லிமிடெட், தற்போதைய விலையில் முதலீட்டை மேற்கொள்ள சிறந்த பங்காக இருக்கிறது.”

?நான் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏலச்சீட்டு போட்டிருக்கிறேன். எட்டு மாதம் சீட்டு கட்டிவிட்டேன். ஆனால், ஏலம் எடுக்கும் நேரத்தில் செக்யூரிட்டி கேட்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இடத்துக்கான பத்திரத்தைக் கேட்கிறார்கள். இன்ஷூரன்ஸ் பாலிசி, மாதச் சம்பளத்துக்கான சிலிப் என இதுபோன்று ஏதாவது கொடுக்கச் சொல்கிறார்கள். இவையெல்லாம் விதிமுறையில் இருக்கிறதா? ஆரம்பிக்கும்முன் இவற்றைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. இப்போதுதான் சொல்கிறார்கள். இதனைப் பற்றி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?


பாஸ்கரன், கரூர்
எம்.வி.வைத்தியநாதன், தலைவர், ஒருங்கிணைக்கப்பட்ட சிட் ஃபண்ட் சங்கம், தமிழ்நாடு.


“ஒவ்வொரு சந்தாதாரரும் ஏலத்தில், தொகையை வாங்கும்முன்னர் அல்லது ஏலம் எடுத்தபிறகு எதிர்கால சந்தாக்களுக்குப் பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் அளித்திட வேண்டும். இவ்வாறு சிட் ஃபண்ட் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சீட்டுச் சேர்க்கைக்குமுன் சந்தாதாரர்களுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும்.”

?நான் அடுத்த பத்து ஆண்டு காலத்துக்கு இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதை மாதத் தவணையாக முதலீட்டை மேற்கொள்வது சரியாக இருக்குமா அல்லது மொத்தத் தொகையாக முதலீட்டை மேற்கொள்வதா?

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?


ராஜேஷ், சிதம்பரம்
சா.பாரதிதாசன், நிதி ஆலோசகர்


“நீண்ட காலத்துக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முறையில் மாதத் தவணையாக இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்வதே சிறந்த முடிவு. ஏனெனில்
பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும், எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்வதால் ரிஸ்க் குறைவே.

இதுவே மொத்தத் தொகையை முதலீடாக மேற்கொண்டால், மார்க்கெட் குறையும்போது அதிக நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். ஆகையால், எஸ்ஐபி முறையில் முதலீட்டை மேற்கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும்.”

படங்கள்:
சு.குமரேசன்,
தே.அசோக்குமார்
.

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

அம்மாவின் பெயருக்கு  வீட்டை மாற்ற என்ன வழி..?

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.