Published:Updated:

வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு சவால்விட்ட இந்தியர்!

வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு  சவால்விட்ட இந்தியர்!
பிரீமியம் ஸ்டோரி
வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு சவால்விட்ட இந்தியர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு சவால்விட்ட இந்தியர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

Published:Updated:
வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு  சவால்விட்ட இந்தியர்!
பிரீமியம் ஸ்டோரி
வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு சவால்விட்ட இந்தியர்!

க்கர் கணக்கில் எஸ்டேட் இருந்தபோதும் அத்துடன் ஒடுங்கிவிடாமல், தனது எல்லை களையும் இலக்குகளையும் அதிகப்படுத்திக் கொண்டே இருக்க விரும்பினார் வி.ஜி.சித்தார்த்தா. அவர் தொடங்கிய ‘கஃபே காபி டே’ இன்று இந்தியாவில் உலக பிராண்டுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. காபி முதல் ஐ.டி வரை பல துறைகளில் வெற்றி நடைபோடும் சித்தார்த்தாவின் கதை சுவாரஸ்யமானது.

வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு  சவால்விட்ட இந்தியர்!

அப்பா தந்த ரூ.5 லட்சம்!

கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தில் பிறந்தவர் சித்தார்த்தா. அவர் குடும்பம் 140 வருடமாக காபி உற்பத்தி செய்து பல நிறுவனங்ளுக்கு விற்று வந்தது. சித்தார்த்தா, மங்களூரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் படித்தவர். படித்து முடித்ததும் குடும்பத் தொழிலில் வளர்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்று நினைத்தார். அதைத் தந்தையிடம் சொன்னார். அவருடைய தந்தை ரூ.5 லட்சம் பணம் கொடுத்து, ‘‘நீ விரும்பிய தொழிலை செய். ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால், வீட்டுக்குத் திரும்பி வந்துவிடு”  என்று சொல்லி அனுப்பினார். அப்போது அவருக்கு 21 வயது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கையை மாற்றிய இரு சந்திப்புகள்!

அங்கிருந்து மும்பைக்குப் போனவர், ஓட்டல் ஒன்றில் ஒரு நாளுக்கு 120 ரூபாய்க்கு வாடகை தந்து தங்கினார். அந்த ஹோட்டலில் 6-வது மாடியில் இருந்த ஜே.எம் ஃபைனான்ஷியல் அலுவலகத்தில் எதேச்சையாக நுழைந்து, அதன் இயக்குநர் நவீன் பாய் கம்பானியுடன் சிறிது நேரம் பேசினார். சித்துவின் திறமையை அறிந்த கம்பானி, அவருக்கு அங்கேயே வேலை தந்தார். 

இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யத் தொடங்கினார். முதலீட்டின் சூட்சுமங்களை அறிந்துகொண்டார். ஆனாலும், அந்த இடம் அவருக்குப் போதுமானதாக இல்லை. ரூ.30 ஆயிரத்துக்கு பங்கு வர்த்தகத்துக்கான உரிமம் வாங்கி வர்த்தகம் செய்தார். அதிலும் அவர் பெரிதாகச் சம்பாதிக்கவில்லை. எனவே, மீண்டும் வீட்டுக்கே திரும்பினார். அப்பா தந்த ரூ.3 லட்சத்துக்கு நிலத்தை வாங்கிப் போட்டார். மீதியை வங்கியில் டெபாசிட் செய்தார்.

தங்களுடைய எஸ்டேட்டில் விளைவித்த காபி பவுடரை விற்று வந்தவருக்கு அதில் கிடைத்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. மேலும் மேலும் வளர வேண்டும் என்ற தேடல் அவருக்குள் தீயாக இருந்தது. அப்போதுதான் அவர் ஜெர்மன் காபி விற்பனை நிறுவனம் ‘த்ச்சிபோ’வின் (Tchibo)முதலாளியைச் சந்தித்தார். அந்த நிறுவனம், ஜெர்மனியின் ஹம்பர்க்கில் வெறும் 10 சதுர அடி இடத்தில் தனது முதல் ஸ்டோரைத் தொடங்கியது. 40 வருடங்களில் மல்டி மில்லியன் பிசினஸாக வளர்ந்தது. அவருடன் நடந்த அந்தச் சந்திப்பு, அவருக்கான இடம் எது என்பதைக் காட்டியது.
 
1993-லிருந்து காபியை ஏற்றுமதி செய்து வந்தவருக்கு, எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் பிசினஸை செய்தால், அதிக லாபம் பார்க்க முடியும் என்பது புரிய ஆரம்பித்தது. ஏனெனில், உலகம் முழுவதும் இருந்த காபி பவுடரின் சந்தை மதிப்பு 7 பில்லியன் டாலர். ஆனால், ரீடெய்லில் விற்கப்பட்ட காபி சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக இருந்தது. இந்த வித்தியாசம் அவரை ஆச்சர்யப் படுத்தியதுடன் கண்டிப்பாக இதைச் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு அவரைத் தள்ளியது. காபி ரீடெய்ல் பிசினஸைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டார். அப்போது இருந்த உண்மை நிலவரம் அவருடைய கனவைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

பயத்தை எதிர்கொண்டார்!

சர்வதேச அளவில் பிரபல பிராண்டாக இருக்கும் காபி விற்பனை நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு ஜெயிக்க வேண்டுமானால், எவ்வளவு வலுவாக நம்முடைய அடித்தளமும் அடிப்படை விஷயங்களும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார். நம் நாட்டில் காபி விற்பனை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்து தருமாறு, தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் சொன்னார். பல தரப்பட்ட காபி விற்பனை யாளர்கள், வாடிக்கையாளர்களைச் சந்தித்த அந்தப் பெண், ‘‘20-30 வருடங்கள் காபி விற்பனையில் இருக்கும் எல்லோருமே இந்த பிசினஸ் மிகவும் கடினமானது என்கிறார்கள். ரீடெய்லில் ஐந்து கிலோ பிராண்டட் காபியை விற்கவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது என்கிறார்கள். எனவே, நாம் காபி ஷாப்களை ஆரம்பிக்கத்தான் வேண்டுமா?” என்று கேட்டார்.

500 டன் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தவருக்கு அந்தப் பெண் சொன்னது இடியாக இருந்தது. அப்போது சன்ரைஸ் நிறுவனம் ஒரு ரூபாய் சாஷேயில் காபி பவுடர் விற்றது. டீ கடைகளில் 5 ரூபாய்க்கு காபி கிடைத்தது. அவரோ ஒரு காபியை 25 ரூபாய்க்கு விற்க இருந்தார். பலரும் இந்தியாவில் இந்த பிசினஸ் வேலைக்கு ஆகாது என்றார்கள். அவரும் சரி என்று அந்த யோசனையை விட்டுவிட்டார்.  
 

ஐடியா கொடுத்த சிங்கப்பூர் பயணம்!

எட்டு மாதங்கள் கழித்து சிங்கப்பூருக்குச் சென்றார். அங்கே ஆற்றங்கரையில் இருந்த கடை ஒன்றில் பீர் விற்கப்பட்டது, இலவச இன்டர்நெட் வசதியுடன். கடை முழுக்கக் கூட்டம் நிரம்பி இருந்தது. அவர் இன்டர்நெட் வசதியோடு காபி விற்கலாமே என்று முடிவெடுத்து, இந்தியா வந்ததும் தன்  பணியாளர்களிடம் சொன்னார். அப்போதும் அவர்கள் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்.

அவர் சொன்னார்... “இது நியூ கான்செப்ட். முயற்சி செய்து பார்க்கலாம். நான் ரூ.1.5 கோடி ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன். அப்படியே நஷ்டமானாலும் நானோ, நீங்களோ நிச்சயமாக தெருவுக்கு வந்துவிட மாட்டோம்” என்று சொல்லி விட்டு தொடங்கியதுதான் கஃபே காபி டே. ஆனால், அவருக்கு எப்படி பிராண்டிங் செய்வது என்றோ, ரீடெய்ல் செய்வது என்றோ சுத்தமாகத் தெரியாது. அனைத்தையும் சந்தையிலிருந்தே கற்றுக்கொண்டார்.

வி.ஜி.சித்தார்த்தா... உலக பிராண்டுகளுக்கு  சவால்விட்ட இந்தியர்!

பணியாளர்கள் தேர்ந்தெடுத்த பெயர்!

ஒருவழியாக பிசினஸைத் தொடங்கி ஒரு கை ப்பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவர், தன்  காபிக்குப் பெயர் வைப்பது பற்றி யோசித்தார். அப்போது டாடா காபி பிராண்ட் ‘கூர்க்’ மக்களிடையே பிரபலம். 700 - 800 டன் விற்பனை ஆனது. அதுபோல, ஒரு பெயர் தனது பிராண்டுக்கு வேண்டும் என்று தன் பணியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் காபி டே. பணியாளர்கள் தேர்ந்தெடுத்த பெயரையே தனது காபியின் பிராண்டாக மாற்றினார். 1994-ல் கர்நாடகாவில் பெங்களூரில் தனது முதல் ‘கஃபே காபி டே’ ஸ்டோரை ‘A lot can happen over a cup of coffee’ என்ற ‘டேக்லைன்’ உடன் ஆரம்பித்தார்.

1990-களில் இன்டர்நெட் பயன்பாடு என்பது இப்போதிருக்கும் அளவுக்குப் பிரபலமாக இல்லை. மலிவாகவும் இல்லை. நகரங்களில் இளைஞர்கள் இன்டர்நெட்டை தேடி ஓடினார்கள். அது ஒரு ஃபேன்டஸி உலகமாக இருந்தது. மியூசிக், கேக்ஸ், சாண்ட்விச், காபி, இன்டர்நெட் ஆகியவற்றை இணைத்து தனது பிராண்டை உருவாக்கினார். அந்த லைஃப் ஸ்டைல்தான் அதனுடைய  பெரிய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. விரைவிலேயே பெங்களூரில் 20-25 ஸ்டோர் களையும் சென்னையில் 20 காபி ஷாப்களையும் ஆரம்பித்தார்.

சந்தித்தச் சவால்கள்!

மதிப்புக்கூட்டப்பட்ட காபிக்கு வரவேற்பு பரவலாக இருக்கத்தான் செய்தது. ஆனால், ரீடெய்ல் பிசினஸில் தொழில் செய்யும் இடம் மிகவும் முக்கியமானது. அவர்களுடைய பட்ஜெட்டுக்கு எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்த்த அளவில் இடம் கிடைக்கவே இல்லை. இடத்தின் வாடகையும் அதிகமாக இருந்தது. எனவே, நியாயமான வாடகையில் சரியான இடத்தைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு நீண்ட காலம் ஆனது. உதாரணமாக, கொல்கத்தாவின் பார்க் வீதியில் இடம் கிடைக்க அவர்களுக்கு ஐந்து வருடங்கள் ஆனது.

மேலும், சர்வீசஸ் அடிப்படையிலான இந்த பிசினஸில் பணியாளர்கள் வேலையில் நீடிக்கும் காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. அதிகபட்சமாக மூன்று மாதங்கள்தான் பணியில் நீடித்தார்கள். வெகு சிலர்தான் காபி டேவில் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தார்கள். பெரும்பாலானோர் இரண்டு, மூன்று மணி நேரம் பயணம் செய்து வேலைக்கு வர வேண்டியிருந்தது. இதனால் பணியின் தரம் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று யோசித்த பிறகுதான், முதலில் மனதளவில் அவர்களைத் தயார் செய்ய பயிற்சி தரலாம் என்ற முடிவுக்கு வந்தார். இறுதியில் அது கொஞ்சம் வேலைசெய்ய ஆரம்பித்தது. பெங்களூரில் இதற்காகவே பள்ளி ஒன்றை அமைத்து வருடத்துக்கு 500 பேருக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்.
 
 

360 டிகிரி வாய்ப்புகள்!

உற்பத்தி அவருடையது, தயார் செய்வது அவர்தான், விற்பதும் அவர்தான். இன்று இந்தியாவின் முதல் காபி விற்பனை நிறுவனமாக ‘கஃபே காபி டே’ உள்ளது. உலகில் நான்காவது மிகப் பெரிய ரீடெய்ல் காபி விற்பனை நிறுவனமாக உள்ளது. இதற்குக் காரணம், காபி தொடர்பான அனைத்து வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

500 டன் விற்பனை செய்ய முடியுமா என்ற நிலையில், தொடங்கிய பிசினஸை வெற்றிகரமாக நடத்தி 7 ஆயிரம் டன் பிராண்டட் காபி, 28 ஆயிரம் டன் காபி எக்ஸ்போர்ட் என விற்பனையை வளர்த்தெடுத்தார். இந்தியாவின் 28 மாநிலங்களில், 135 நகரங்களில், 1,534 ஸ்டோர்கள் உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், கராச்சி, வியன்னா, துபாய் மற்றும் பிராக் (prague) ஆகிய நாடுகளிலும் ஸ்டோர்களை நிறுவியுள்ளது. இன்று அவரது மொத்த சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர். இதுமட்டுமல்லாமல், ஃபர்னிச்சர், அக்ரிகல்சர், லாஜிஸ்டிக்ஸ், ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் தொழில்களையும் செய்து வருகிறார். மைண்ட் ட்ரீ நிறுவனத்திலும் முதலீடு செய்திருக்கிறார். 

வாய்ப்பும் திறமையும் ஒன்றாகச் சேர்ந்தால் வெற்றி சாத்தியம். அது வி.ஜி.சித்தார்த்தா விஷயத்தில் நிஜமாகி இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism