Published:Updated:

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!
பிரீமியம் ஸ்டோரி
பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

Published:Updated:
பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!
பிரீமியம் ஸ்டோரி
பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!
பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

பா.பத்மநாபன் 
நிதி ஆலோசகர், ஃபார்ச்சூன் பிளானர்ஸ்


க்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) - கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய முதலீட்டாளர்களிடம் பிரபலமாகி வரும் ஒரு முதலீட்டுக் கருவி. கடந்த பத்து ஆண்டுகளில் கோல்டு இ.டி.எஃப், நிஃப்டி இ.டி.எஃப் என பல்வேறு இ.டி.எஃப்-கள் இருக்க, மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளில் மட்டும் முதலீடு செய்கிற ‘பப்ளிக் செக்டார் இ.டி.எஃப் ஃபண்டை’ (CPSE ETF) கடந்த 2014,     மார்ச்-ல் அறிமுகம் செய்தது கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம். பிற்பாடு இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியது.

கடந்த காலத்தில் இந்த இ.டி.எஃப் நல்ல வருமானம் தந்த நிலையில், இப்போது இன்னொரு புதிய ‘பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்’ ஃபண்டினை அறிமுகம் செய்யப் போகிறது ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட். எஃப்.எஃப்.ஓ (Further Fund Offer) முறையில் வெளியிடப்படும் இந்த ஃபண்டின் மூலம் சுமார் ரூ.6,000 கோடியைத் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஃபண்டில் ஜனவரி18-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் முதலீடு செய்யலாம்.

இதில் குறைந்தபட்சம் ஒருவர் ரூ.5,000 முதல் ரூ.2,00,000 வரை முதலீடு செய்யலாம். இதற்கு கண்டிப்பாக ‘டீமேட்’ கணக்கு வைத்திருக்க வேண்டும். எனவே, பான் நம்பரைக் கொண்டு ‘சர்ச்’ செய்யப் படுவதால், நிறைய ‘டீமேட்’ கணக்கு மூலம் விண்ணப்பித்தாலும் ஒன்றாகவே கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தத் திட்டங்கள் நமது அரசாங்கத்தினால் ஆதரிக்கப்படுகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்கிற கேள்வி பல முதலீட்டாளர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 33 மாத முடிவில் சிபிஎஸ்இ இ.டி.எஃப், மும்பை பங்குச் சந்தையைவிட நன்றாக செயல்பட்டிருக்கிறது (பார்க்க அட்டவணை-1).

கடந்த 33 மாதங்களில் சிபிஎஸ்இ இ.டி.எஃப் 35.65 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 19.64 சதவிகித வருமானம் மட்டுமே தந்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதை அட்டவணை 2-ல் பார்க்கலாம்.

2014-ல் தொடங்கப்பட்ட சிபிஎஸ்இ இ.டி.எஃப் திட்டத்தில் அனைவருக்கும் 5% டிஸ்கவுன்ட் தரப்பட்டது. மேலும், ஒரு வருடமாக அதில் தொடர்ந்து முதலீடு செய்திருந்தவர்களுக்கு 15:1 என்ற கணக்கில் போனஸும் தரப்பட்டது. அதாவது, 5+6.66=11.66% மொத்தமாகத் தரப்பட்டது. இதன் மூலம் கடந்த 33 மாத முடிவில் 19.24 ஆக இருந்த என்.ஏ.வி, இப்போது 26.1 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மொத்த வருமானம் 35 சதவிகிதத்துக்கு மேல் கிடைத்துள்ளது.

இந்த இரண்டையும் (தள்ளுபடி + போனஸ்) சேர்த்துக் கணக்கிட்டால், நமக்குக் கிடைக்கும் மொத்த வருமானம் 47 சதவிகிதமாக இருக்கும். இந்த வருமானம் கவர்ச்சிகரமானது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

சிபிஎஸ்இ இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் பணம், எவ்வளவு சதவிகிதத்துக்கு எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிந்துகொள்ள அட்டவணை 3-ஐ பாருங்கள்.

இந்தப் பட்டியலில் உள்ள 10 பங்குகளும் அதிக ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன்ஸ் கொடுப்பவை. மேலும், மூன்று பங்குகளில் மட்டுமே, அதாவது ஓஎன்ஜிசி, கோல் இந்தியா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பங்குகளில் சுமார் 60% முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியன் ஆயில் பங்கின் விலை மட்டும் சுமார் 2.5 மடங்கு உயர்ந்துள்ளது. மற்ற இரண்டு பங்குகளும் ஏறக்குறைய அதே லெவலில் இருப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!
பளிச் வருமானம் தரும் பப்ளிக் செக்டார் இ.டி.எஃப்!

இதெல்லாம் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான கருத்துக்களாக இருந்தாலும், கடந்த காலத்தில் மும்பை பங்குச் சந்தையைவிட சிறப்பாகச் செயல்பட்டு அதிக வருமானம் தந்ததைப்போல, இனிவரும் காலங்களிலும் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் 5% தள்ளுபடியுடன் ஆரம்பிக்கிறது.

இந்தத் தள்ளுபடியானது ஜனவரி 18 முதல் 20 வரை வாங்குவோர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன்பிறகு வாங்க நினைப்பவர்களுக்கு இந்தத் தள்ளுபடி கிடைக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism