Published:Updated:

அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம் உயருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம்  உயருமா?
அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம் உயருமா?

எஸ்.ஸ்ரீதரன், நிறுவனர், wealthladder.co.in

பிரீமியம் ஸ்டோரி
அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம்  உயருமா?

ந்தியாவில் மொத்தம் 24 லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்ஐசி மட்டுமே பொதுத்துறை நிறுவனம். மற்ற 23 நிறுவனங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவை.

அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம்  உயருமா?



இன்ஷூரன்ஸின் மிக முக்கிய நோக்கம் முழுமையான காப்பீடு என்று சொல்லப்படுகிற  டேர்ம் இன்ஷூரன்ஸ்தான். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு  ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும் நம் மக்கள், தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க நினைப்பதே இல்லை. கட்டிய பிரீமியம் திரும்பக் கிடைக்காது என்பதால், பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விட்டுவிட்டு, பிரீமியம் அதிகமாக இருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்வு செய்வதை நம்மவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை நம்மவர்கள் அதிக அளவில் எடுக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், இந்தத் திட்டம் குறித்த விழிப்பு உணர்வு நம் மக்களிடத்தில் போதிய அளவில் இல்லாமல் இருப்பதே.

டேர்ம் இன்ஷூரன்ஸை சாதாரண மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்டிஏஐ அமைப்பானது  ஊடகங்களிலும் பல முயற்சிகளை கடந்த சில ஆண்டுகளாக எடுத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஐஆர்டிஏஐ ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸை அறிமுகம் செய்தது. ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸின் பிரீமியம் குறைவாகக் கொடுத்தது, பாலிசிதாரர்களை ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க ஊக்குவித்தது.

ஆனாலும், இதன் பலன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. சாதாரண மனிதர்கள் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே கருதுகிறார்களே தவிர, தான் இறக்கும் தருவாயில் தனது குடும்பத்துக்கு அதிகத் தொகை கிடைக்கும் என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. 

 இதற்கு, ஒரு சில இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளும், புரோக்கர்களும் ஒருவகையில் காரணமாக உள்ளனர். பாலிசிதாரர் டேர்ம் இன்ஷூரன்ஸ் கேட்டாலும், இதில் முதலீடு செய்யும் தொகை திரும்பி வராது என்று சொல்லியே பாலிசி தாரர்களைக் குழப்பி, எண்டோமென்ட் பாலிசி களையோ அல்லது யூலிப் பாலிசிகளையோ பாலிசிதாரரிடம் திணித்துவிடுகின்றனர்.

அதிகரித்த ஏஜென்ட் கமிஷன்... பிரீமியம்  உயருமா?

இந்தப் போக்குக்கு முடிவுகட்டும் வகையில், டேர்ம் இன்ஷூரன்ஸை சாதாரண மக்களிடம்  ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்டிஏஐ புதிதாக சில விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த விதிமுறைகளின்படி, தனிப்பட்ட மனிதரின் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான இன்ஷூரன்ஸ் புரோக்கர் மற்றும் ஏஜென்டுகளின் முதல் வருட கமிஷனை 40% வரை உயர்த்தியுள்ளது.

மேலும், இரண்டாம் வருடம் முதல் பாலிசி தொடரும் வரையில் 10% வரை கமிஷனை உயர்த்தியுள்ளது. பழைய விதிமுறைப்படி, முதல் வருட பிரீமியத்தில் 20% முதல் 30% வரையும், இரண்டாம் வருடம் முதல் பாலிசி முடியும் வரையில் 5% கமிஷனையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வந்தன.

இந்த புதிய விதிமுறைகளை, வரும் ஏப்ரல் 1,  2017 முதல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அமல்படுத்தும்படி  ஐஆர்டிஏஐ கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறையால், இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் இனி அதிக அளவில் டேர்ம் இன்ஷூரன்ஸை விற்பதற்கான சாத்தியக்கூறுகள்  உள்ளன.

கமிஷன் தவிர, ஏஜென்டுகள் மற்றும் புரோக்கர்களின் வெகுமதி அதிகபட்சமாக மொத்த கமிஷனிலிருந்து 20 சதவிகிதத்துக்கு  மிகாமல் இருப்பது அவசியம் என்றும் ஐஆர்டிஏஐ குறிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைப்படி, புரோக்கர்கள் மற்றும் ஏஜென்டுகளின் உச்சவரம்பு கமிஷன் தொகை 30% ஆகும். புதிய விதிமுறைப்படி, டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான கமிஷனின் உச்ச வரம்பு 40% ஆகும்.

மேலே உள்ள கமிஷன் தொகையைக் குறித்து முடிவு செய்ய புதிதாக கமிட்டி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கமிட்டி மார்ச் 15, 2017க்குள் தனது முடிவை அளிக்கும்படியும் ஐஆர்டிஏஐ உத்தரவிட்டுள்ளது. இந்த கமிட்டி சொல்லப் போகும் முடிவினை அடிப்படையாக வைத்து,  கமிஷன் தொகைக் குறித்து ஐஆர்டிஏஐ இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய விதிமுறையால், பாலிசி தாரரின் பிரீமியம் தற்போது இருக்கும் பிரீமியம் போலவே இருக்கும் என்பது ஆறுதலான விஷயம். அதாவது, பிரீமியம் அதிகரிக்காது. இதனால், பாலிசிதாரருக்கு எந்தவித மாறுதலும் இல்லை. ஆனால், ஒவ்வொரு தனிமனிதரும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

முதல் வருட பிரீமியத்தில் முன்னேற்றம்!

ஐஆர்டிஏஐ-ன் 2015-2016 ஆண்டு அறிக்கையின்படி ரூ.23.8 கோடியை முதல் வருட பிரீமியமாக எல்ஐசி நிறுவனமும், ரூ.27.14 கோடியை முதல் வருட பிரீமியமாக மற்ற தனியார் நிறுவனங்களும் வசூல் செய்துள்ளன.

2014-2015-ம் ஆண்டைவிட எல்ஐசி 3.1% அதிகமாக பிரீமியம் வசூல் செய்துள்ளது. இதுவே, தனியார் நிறுவனங்கள் கடந்த வருடத்தைவிட 13.59% அதிகமாக பிரீமியம் வசூல் செய்துள்ளன.

இந்தியாவில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வசூலில் கடந்த சில வருடங்களில் இருந்த மந்த நிலை, கடந்த வருடத்தில் மாற்றம் கண்டு முன்னேற்றத்தில் உள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கமிஷன்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கமிஷன் தொகையில் ஐஆர்டிஏஐ எந்த மாற்றமும் செய்ய வில்லை. தற்போது வழங்கப்பட்டு வரும் 15% கமிஷனே தொடரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு