Published:Updated:

‘‘டெக்னிகலை விரிவாக நடத்துங்கள்!’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘டெக்னிகலை  விரிவாக நடத்துங்கள்!’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்
‘‘டெக்னிகலை விரிவாக நடத்துங்கள்!’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்

மு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி
‘‘டெக்னிகலை  விரிவாக நடத்துங்கள்!’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்

நாணயம் விகடன் கடந்த ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை  அன்று மதுரை மற்றும் திருநெல்வேலி யில் அரை நாள் பங்குச் சந்தை டெக்னிகல் அனாலிசிஸ் அறிமுகப் பயிற்சி வகுப்பை நடத்தியது. இதில் தென் மாவட்டங்களில் இருந்து பலரும் கலந்துகொண்டனர். வகுப்பின் தொடக்கத்திலேயே, வந்திருந்தவர்களின் எதிர்பார்ப்பைத் தெரிந்துகொண்டு, அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் அனைவருக்கும் புரியும்படியாக டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி விளக்கினார் பயிற்சியாளர் தி.இரா.அருள்ராஜன்.

பங்குச் சந்தையில் டெக்னிகல் அடிப்படையில் எப்படி டிரேட் செய்யவேண்டும், அதற்கான வரைமுறைகள் என்ன, பேட்டன்களைத் தெரிந்துகொள்ள எந்தெந்த மாதிரியான விஷயங்களைப் பார்க்க வேண்டும், பங்குச் சந்தையில் இருக்கும் நடைமுறை சார்ட் வகைகள், சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ், டிரெண்ட் லைன் என்று டெக்னிக்கல் ஆய்வுக்குத் தேவையான டூல்களைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக விளக்கினார். அத்துடன், ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ், கமாடிட்டி, கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும் சின்னச் சின்ன விளக்கங்களை சுவாரஸ்யமாக தந்தார். 

‘‘டெக்னிகலை  விரிவாக நடத்துங்கள்!’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்

‘‘இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முக்கியமாக, ஒரு நல்ல முதலீட்டாளர், டிரேடராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், ஒரு நல்ல டிரேடர் ஒரு முதலீட்டாளராக இருக்க வேண்டும்’’ என்று அடித்துச் சொன்னார். அப்படிச் சொல்வதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு, அவற்றை மனதில் பதியவைத்தார்.

இந்த அறிமுக நிலை வகுப்புக்கு வந்திருந்தவர்கள், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்க, வரும் பிப்ரவரி 11, 12 தேதிகளில் மதுரையில் டெக்னிகல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது நாணயம் விகடன். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இணையதளம் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாமே!
 
படங்கள்: எல்.ராஜேந்திரன், வி.சதீஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு