Published:Updated:

பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!

பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!

பி.ஆண்டனிராஜ்

பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!

பி.ஆண்டனிராஜ்

Published:Updated:
பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!
பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!

நெல்லையில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான ‘செகண்ட் ஹேண்ட்’ சேல்ஸ் மார்க்கெட் ஜோராக நடந்து வருவதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் பழைய பைக்குகள் விற்பனை அமோகமாக நடப்பதைப் பார்த்து நமக்கே ஆச்சர்யமாக இருந்தது.

 ஆலங்குளத்தில் 1988-ல் இரண்டு கடைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்தப் பகுதியில் 50 கடைகள் இருக்கின்றனவாம். இங்கு ‘செகண்ட் ஹேண்ட்’ பைக்குகளை விற்கிற பலரும், முன்பு இங்குள்ள கடைகளில் வேலை பார்த்து அதில் கிடைத்த அனுபவத்தையும், பழைய பைக்குகளுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்த்து தாங்களாகவே சொந்தமாகக் கடை வைத்து முன்னேறியவர்கள்.

 குறைந்த விலையில் தரமான பைக் இங்கு, டிவிஎஸ், ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, பஜாஜ், சுஸூகி, யமாஹா, ராயல் என்ஃபீல்ட் என பல நிறுவனங்களின் பழைய வாகனங்களையும் வாங்கலாம். சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகும் இரு சக்கர வாகனங்களைக்கூட ஓரிரு மாதங்களிலேயே பழைய விலைக்கு இங்கு வாங்க முடியும். குறைந்த விலையில் தரமான வாகனங்கள் கிடைப்பதால், இங்குள்ள கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பழைய பைக் விற்பனை செய்யும் புரோக்கர்கள் பலரும் இங்கு வந்து வாகனங்களை வாங்கிச் சென்று, தங்களது பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள். கேரளாவில் பழைய புல்லட்டுகளுக்கு மவுசு அதிகம். அங்கு பழைய புல்லட்டுகள் கிடைப்பது கடினம் என்பதால், அதிகமானோர் இங்கு வந்து வாங்கிச் செல்கிறார்கள். இந்தக் கடைகளின் முன்பு சுமார் 2,000 பைக்குகள் எப்போதுமே நிற்கின்றன.  

பழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை!

ஆர்சி இருந்தால்தான் விற்போம்

இந்தத் தொழில் பற்றி நம்மிடம் பேசிய நெல்லை மேற்கு மாவட்ட இரு சக்கர வாகன விற்பனையாளர் சங்கத்தின் தலைவரான ராமராஜா, ‘‘பைக் பிரியர்கள் பழைய மாடல் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்பினால் அவர்கள் உடனடியாக ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளுக்குத்தான் வருவார்கள். இங்கு குறைந்த விலையில் நல்ல தரமான வாகனங்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். கடனில் வாங்கிவிட்டு, தவணையை முறையாக கட்டாமல் பிடிபடும் வாகனங்களை வங்கிகள் ஏலம் விடும்போது, அவற்றை வாங்கி வருவோம். வாகன உதிரிப்பாகங்களின் தரத்தை உறுதி செய்து, பழுதானப் பாகங்களை மாற்றியபின்பே  விற்பனை செய்வோம். அத்துடன், அந்த வாகனத்தின் ஆர்சி புத்தகம், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து,  திருப்தி இருந்தால் மட்டுமே விற்பனை செய்வோம்’’ என்றார்.    

இந்த இரு சக்கர வாகன விற்பனை மூலம் நாள்தோறும் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடக்கிறது. அத்துடன், பழைய கார்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் சார்பு தொழிலான டிரைவிங் ஸ்கூல்களும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன. இப்படி பழைய பைக் மற்றும் கார்களின் பொருளாதாரச் சந்தையாக இந்தப் பகுதி மாறி வருகிறது.    

 போலீஸ் பிரச்னை வந்ததில்லை


நெல்லை மேற்கு மாவட்ட இரு சக்கர வாகன விற்பனையாளர் சங்கத்தின் செயலாளரான முத்துப் பாண்டியிடம் பேசினோம். ‘‘நாங்கள் அதிக லாபம் வைக்காமல் நியாயமான விலையில் வாகனங்களை விற்பனை செய்கிறோம். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த யாருமே திருட்டு வாகனங்கள் எதையும் விற்பனை செய்வதில்லை. அதனால், எந்தக் காலத்திலும் எங்களுக்கு போலீஸ் பிரச்னை வந்ததில்லை. கேரளாவில் பழைய ஆக்டிவா, புல்லட் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், நிறைய பேர் அங்கிருந்து வந்து வாங்கிச் செல்கிறார்கள்.   

கூரியர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பால் மற்றும் தண்ணீர் கேன் விற்பனை செய்பவர்கள், பேப்பர் போடுபவர்களால் புதிய வாகனங்களை வாங்க முடியாது என்பதால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான பழைய வாகனங்களை எங்களிடமிருந்து வாங்கிச் செல்கிறார்கள். வாகனத்தின் ஆர்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன்ஜின் மற்றும் சேஸ் எண்ணை சரிபார்த்து, சரியானதாக இருந்தால் மட்டுமே விற்பனை செய்வோம். ஆர்சி புத்தகம் இல்லாத வாகனங்களை எந்தக் காரணத்துக்காகவும் வாங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம்’’ என்று உறுதி தந்தார். 

ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 200 வாகனங்கள் விற்பனை ஆகிறதாம். இதன் மூலம் சுமார் 300 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1,500 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கிறதாம்! 

படங்கள்: எல்.ராஜேந்திரன்